வாடிப்பட்டியில் மாதா கோயில் பகுதியில் அதிகாலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள்!மாதா கோவில் பகுதியில் நவீன கண்காணிப்பு கேமராவுடன் காவல் உதவி மையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்
குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர், தொழிலதிபர்கள் தன்னார்வலர்கள் பங்களிப்போடு 2024 நவம்பர் மாதம் 19ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நவீன கண்காணிப்பு கேமரா உடன் காவல் உதவி மையத்தை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமைதாங்கி குத்து விளக்கு ஏற்றி கல்வெட்டு மற்றும் சோதனை சாவடியை திறந்து வைத்தார். சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார்.
காவல் ஆய்வாளர் வளர்மதி இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார் .
வாடிப்பட்டி பேருந்து நிலையம், சாணாம்பட்டி பிரிவு, பாண்டியராஜபுரம் சோதனை சாவடி ஆகிய மூன்று இடங்களில் 35 நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழி சாலையில் வாடிப்பட்டி பிரிவிலிருந்து நகர்ப்புற சாலையில் கால்நடை மருத்துவமனை வரை 25 இடங்களில் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இத்தனை கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும் தொடர்ந்து வழிப்பறி நடந்து கொண்டுதான் இருப்பதாகவும் அதே போல் தான் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
அதிகாலை 4 மணிக்கு
வாடிப்பட்டி யூகோ பேங்க் அருகில் ரமேஷ் என்பவர் வீட்டில் அவரது
மனைவி குடிதண்ணீர் வருகிறதா என வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ரமேஷின் டாட்டா ஏசி வண்டியில் யாரோ ஒரு மர்ம நபர் மறைந்து இருந்ததை பார்த்த ரமேஷின் மனைவி யார் என்று கேட்டுள்ளார் உடனே அந்த நபர் கையில் வைத்திருந்த கத்தியால் ரமேஷ் மனைவியை தாக்க வந்துள்ளார். ரமேஷின் மனைவி சத்தம் போட்டபடி வீட்டிற்குள் ஓடி உள்ளார். அப்போது ரமேஷின் மனைவி உடம்பில் லேசாக காயம் ஏற்பட்டுள்ளது.உடனே ரமேஷ் வீட்டிற்குள் இருந்து ஓடி வந்து வெளியே பார்க்கும்போது கத்தியால் தாக்கிய நபர் ரமேஷ் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் காத்திருந்த நபரின் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றுவிட்டதாகவும்
உடனே இது சம்பந்தமாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் கொடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக வாடிப்பட்டி காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
எது எப்படியோ வாடிப்பட்டி மாதா கோயில் பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே வாடிப்பட்டியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிப்பட்டி காவல்துறையினர் மாதா கோயில் அமைந்துள்ள பகுதியில் (நவீன கண்காணிப்பு கேமராவுடன் காவல் உதவி மையம்)
காவல்துறை கண்காணிப்பு பூத்” (Police Watch Post) அமைத்து
சமூகவிரோதிகளை கண்காணிக்க காவல்துறையினரை நியமிக்க வேண்டும் அப்போதுதான் பொதுமக்கள் நிம்மதியாக வெளியே வர முடியும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடிப்பட்டி காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணி மேற்கொண்டு வரும் நிலையில் காவல்துறையினருக்கு சவாலாக இருக்கும் திருடர்களின் கொட்டத்தை அடக்கி வாடிப்பட்டி காவல்துறையினர் சாதனை படைப்பார்களா!?
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




