காவல் செய்திகள்

வாடிப்பட்டி சுடுகாட்டு அருகே  அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடைகள் இன்னும்  எத்தனை உயிர்களை காவு  வாங்க இருக்கிறதோ !?
உயர் மின் கோபுர விளக்கு அமைத்து உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!

மதுரை  டி.வாடிப்பட்டியில் தாலுகா அலுவலகத்தில் இருந்து சுடுகாடு வரை   மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளது . மதுபான கடைகள் அமைந்துள்ள இந்தப் பகுதி எப்போதுமே இருள் மூழ்கிய நிலையில் தான் காணப்படும். இதை சாதகமாக பயன்படுத்தி மது மற்றும் கஞ்சா போதையில் சில சமூக விரோதிகள் சட்ட விரோத செயல்களில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த டாஸ்மாக் கடைகளால் இந்த பகுதியில் அடிக்கடி  ஏற்படும் வாகன விபத்துகளில் அப்பாவி உயிர்கள்  பலியாகும் நிலை ஏற்படுகிறது.

26/02 2025 அன்று இரவு குமார் 7: 15 மணி அளவில்   வாடிப்பட்டி சுடுகாடு அருகே   இருசக்கர வாகனத்தில் வந்த

கச்சகட்டியைசேர்ந்த கார்த்திகேயன் என்பவர்  திடீரென வேகமாக திரும்ப முயன்ற போது

மதுரையிலிருந்து வாடிப்பட்டி வழியே பெரியகுளம் சென்ற  தனியார் பயணிகள் பேருந்து  இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக சாலையின் இடதுபுறம் திருப்ப முயன்ற போது இருசக்கர வாகனம் பேருந்து சக்கரத்தில் மாட்டிக் கொண்டது.

சாலையில் நடந்து சென்ற தனியார் சோலார் நிறுவனத்தில் வேலை பார்க்கும்

வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களான அஜய் வயது 20 ஷாகர் வயது 22 ஆகியோர் மீது தனியார் பேருந்து மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்த இடத்திற்கு  வந்த வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
விபத்து நடந்த இடத்தில் கடையில் இருக்கும் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்ற தகவலும் வந்துள்ளது. ஆகையால் காவல்துறையினர் விபத்து எப்படி நடந்தது என விசாரணை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பகுதிவாசிகள் கூறுகையில் வாடிப்பட்டி சுடுகாட்டு அருகே மூன்று அரசு மதுபான கடைகளும்   மிக அருகில் அமைந்துள்ளதால்  எப்போதும்  போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவ்வழியே செல்லும் பெண்கள் மற்றும்  பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் .
குறிப்பாக மாலை நேரங்களில் இந்த பகுதியில் போதுமான மின்விளக்குகள் இல்லாமல் இருண்டு கிடப்பதால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் எதிரே வருபவர்கள் தெரியாத நிலையில் இருப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும்  மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பெட்டிக்கடைகளில் வைத்து அதிக  விலைக்கும் மதுவை விற்பனை செய்து வருவதாகவும் இதனால் 24 மணி நேரமும் அப்பகுதியில் போதை ஆசாமிகளின் நடமாட்டம்  அதிகமாக இருப்பதாகவும்
இதன்  காரணமாக அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும்  குற்ற சம்பவங்கள் அப்பகுதியில் அதிகமாக நடப்பதாகவும் இது போன்ற குற்ற சம்பவங்கள் குறிப்பாக இரவு நேரங்களில் நடப்பதாகவும் ஆகவே இரவு நேரங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை  தடுக்க இந்த பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு  அமைத்தால் மட்டுமே குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் அதுமட்டுமில்லாமல் வாகன விபத்துக்கள் நடப்பதையும்  தடுத்து நிறுத்த முடியும் என்றும் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டி  வாடிப்பட்டி பேரூராட்சிக்கு பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்   பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சுடுகாடு அருகே உயர் மின் கோபுர விளக்கு அமைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button