விசாரணை என்ற பெயரில் பொதுமக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டும் புதுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளர் !? நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
நூதன முறையில் பல கோடி மோசடி செய்துள்ள அரோக்கியா அக்ரோ ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார்!
அரோக்கியா அக்ரோ ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம்
ஸ்ரீ பாலாஜி டவர்ஸ் 24 & 25, ராஜ்ராம் சாலை ஈவிஆர் சாலை சந்திப்பு,கே கே நகர், திருச்சி. முகவரியில் தலைமை இடமாக வைத்து இயங்கி வருகிறது.
அரோகியா அக்ரோ ஃபார்ம்ஸ் லிமிடெட்
(Arokea Agro Farms Limited )என்பது பட்டியலிடப்படாத பொது நிறுவனமாகும். இது 01 மே, 2013 ஆரம்பிக்கப்பட்டது.
இது ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது. இதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூபாய்5.00 லட்சம் மற்றும் மொத்த செலுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் 5.00 லட்சம் மட்டுமே.
இந்நிறுவனத்தின் இயக்குனர்கள்
மைக்கேல் எஸ்தாக்கி, எஸ்தாக்கி ஆரோக்கியசாமி மற்றும் பலர் உள்ளனர்.
அன்புக்குமார் என்ற நிர்வாக மேலாளர் உள்ளார்.
_
புதுக்கோட்டையில் உள்ள அக்ரோ நிதி நிறுவனம் நூதன முறையில் பல கோடி மோசடி !
திருச்சி நாகபட்டிணம் புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து பலதரப்பு மக்களிடம் இன்சூரன்ஸ் திட்டம் + சேமிப்பு திட்டம் போன்ற பல திட்டங்களை சொல்லி குறைந்த முதலீட்டில் அதைவிட அதிக மதிப்பில் வீட்டு மனை மற்றும் அதிக வட்டி தருவதாகவும் சாமானிய பொதுமக்களிடம் மூளைச்சலவை செய்து ஆசை வார்த்தை கூறி அந்த பகுதியில் ஏஜண்டாக கமிஷனுக்கு ஆட்களை சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் நூதன மோசடி செய்துள்ளது அரோக்கியா அக்ரோ ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம்.
தற்போது இந்நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள பெண்கள், கூலி தொழிலாளர்கள் சாமானிய நடுத்தர மக்கள் பணத்தை பறிகொடுத்து ஏமார்ந்து என்ன செய்வது அறியாமல் வாழ வழி இல்லாமல் கடைசியாக சில தினங்களுக்கு முன்பு
பணத்தை நூதன முறையில் மோசடி செய்த புதுக்கோட்டை நகரத்தைச் சேர்ந்த (ஏஜென்ட்)வீட்டு முன்பு
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கூடி பணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த புதுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளர் இராஜகோபால் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார் .
அப்போது பொதுமக்கள் தாங்கள் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர். அதற்கு காவல் உதவி ஆய்வாளர் சம்பந்தப்பட்ட நபர் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு காவல் நிலையத்துக்கு வருவதாக தகவல் கொடுத்துள்ளார் என்றும் ஆகவே உங்கள் பணம் வர வேண்டும் என்றால் பொறுமையாக தான் இருக்க வேண்டும் . நல்ல நிலையில் இருக்கும்போது நிதி நிறுவனம் உங்களுக்கு வட்டி கொடுத்துள்ளதாகவும் இப்போது அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் உங்கள் பணத்தை உடனே கொடுப்பதற்கு அவர்களால் முடியாது என்று புதுக்கோட்டை நகரகாவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் அங்கு கூடியிருக்கும் பொது மக்களை பார்த்து கூறியுள்ளார். அதற்கு திங்கட்கிழமை பணம் கொடுக்காவிட்டால் நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பணம் பறி கொடுத்தவர்கள் காவல் உதவி ஆய்வாளரிடம் கூறினார்கள். உடனே காவல் உதவி ஆய்வாளர் அவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி எல்லாம் என்னை கேட்கக் கூடாது என்றும் பணம் கொடுத்து ஏமார்ந்த ஆண்கள் பெண்களைப் பார்த்து மிரட்டும் தோணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்களைப் போல பேசிய அதிர்ச்சி வீடியோ வந்துள்ளது.
இது சம்பந்தமாக பணம் கொடுத்து ஏமார்ந்தவர்களிடம் கேட்டபோது புதுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளர் நூதன முறையில் பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ள நபர்களிடம் பெரிய தொகையை கையூட்டாக பெற்றுக்கொண்டு நாங்கள் தப்பு செய்தது போலும் பண மோசடி செய்தவர்களை நல்லவர்கள் போலும் பணம் கொடுத்தவர்களிடம் பணம் இருந்தால் தருவார்கள் என்றும் அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கொடுப்பார்கள் என்றும் மோசடி நிதி நிறுவனத்திற்கு வக்காலத்து வாங்கியதுடன் கட்டப்பஞ்சாயத்து செய்வது போல் மிரட்டுகிறார் காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் என்ற குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர்.
அதன் பின்னர் சில தினங்களுக்குப் பிற்கு புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு வந்த நூதன முறையில் பணம் மோசடி மோசடி செய்த நிறுவனத்தின் ஏஜெண்ட் மன்னன் காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபாலை கொடுக்க வேண்டிய கப்பத்தை கட்டி விட்டவுடன் நூதன மோசடி மன்னனை காவல் நிலையத்திலிருந்து திருமணம் ஆகி வந்த புது மாப்பிள்ளையை வழி அனுப்பி வைப்பது போல் காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் வழி அனுப்பி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது நூதன மோசடி மன்னனின் செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது .
எது எப்படியோ தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு சில மாதங்களாக நூதன முறையில் பல இடங்களில் பண மோசடி செய்து வருகின்றதாகவும் ஆகையால் பொதுமக்கள் பேராசை பட்டு எந்த நிறுவனத்திலும் பணத்தை கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் என்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த சுற்றறிக்கையை தமிழகத்தில் உள்ள நகர காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் தங்களது காவல் நிலையத்தில் பொதுமக்களுக்காக ஒரு விழிப்புணர்வு பலகையை கூட வைக்காமல் தமிழக காவல்துறை இயக்குனரின் சுற்றறிக்கையை காற்றில் பறக்க விட்டு நூதன முறையில் மோசடி செய்வதிடமிருந்து கல்லாக்கட்டும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்! பணத்தை கொடுத்த ஏழை எளிய சாமானிய பொதுமக்கள் தற்போது நடுவீதியில் நின்று போராட்டம் நடத்தினாலும் எந்த ஒரு பயனும் இல்லை. தற்போது காவல்துறையின் மீது பொதுமக்கள் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான் வேதனையாக உள்ளது!
இதே போல் கடந்த வருடம் 22/11/2021 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கஞ்சா வியாபாரிகளுடன் புதுக்கோட்டை நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் திருப்புனவாசல் காவல் நிலைய தலைமைக் காவலர் முத்துக்குமார் ஆகியோர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த, புதுக்கோட்டை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் திருப்புனவாசல் காவல் நிலைய தலைமைக் காவலர் முத்துக்குமார் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் அதிரடியாக உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி நபர்களுக்கும் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கும் உள்ள டீலிங் என்ன! ?? தொடரும்…….
_