வீட்டில் தனியாக இருந்த நபரை கொலை செய்து கட்டிலில் போட்டு விட்டு தப்பிச்சென்ற கொலையாளிகளை பிடிக்க சங்ககிரி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்ட சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்


சேலம் மாவட்டம் சங்கரி
திருச்செங்கோடு சாலைகள்
ஸ்டேட் பேங்க் அருகே
ராஜேந்திரன் என்பவர்
தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர்
ராணி மகன் அரவிந்த் மகள் கார்த்திகா ஆவார்கள்.
இவர் கடந்த 20 ஆண்டுகளாக தன் மனைவியுடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தான் தங்கியிருக்கும் இடத்திலேயே


உடல் பருமனை குறைக்கும் ஆயுர்வேத பொடி விற்று வருகிறார். ராஜேந்திரன் வசித்து வரும் வீட்டிற்கு பழனியம்மாள் என்ற பெண் தினந்தோறும் காலையில் வந்து சுத்தம் செய்து வைப்பது வழக்கம். அதேபோல்
31/03/2025 அன்று காலை எப்போதும் போல் ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தபோது ராஜேந்திரன் தங்கி இருந்த வீட்டின் கதவை பழனியம்மாள் திறந்து பார்த்தபோது ராஜேந்திரன் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து இருப்பதை பார்த்த உடனே பழனியம்மாள் மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார் அதன்பின்பு பழனியம்மாள் மகன் கௌதம்

சங்ககிரி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பின்பு

சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளர் சிந்து மற்றும் காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது ராஜேந்திரன்

கட்டிலில் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ராஜேந்திரன் இருந்துள்ளார்

உடனே காவல்துறையின் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ராஜேந்திரனை கொலை செய்த கொலையாளி யார் என்பதையும் கொலை எப்போது நடந்தது என்பதையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்ககிரி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலை குற்றவாளிகளை பிடிக்க முடிக்க விடப்பட்டுள்ளனர். தற்போது ராஜேந்திரன் வீட்டில் வேலை செய்யும் பழனியம்மாள் மற்றும் அவரது மகன் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜேந்திரன் வீட்டிற்கு வேலைக்கு வரும் பழனியம்மாள் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து ராஜேந்திரனை கொலை செய்துள்ளார்களா என காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மனைவி இருவது வருடமாக தனியாக வாழ்ந்து வருவதால் அவரது மனைவியையும் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் சங்ககிரி நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது