வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயரில் 100 நாள் வேலை செய்ததாக ஊழல் முறைகேடு! புகார் கொடுத்த சமூக சமூக ஆர்வலர்! காவல்துறையை வைத்து மிரட்டும் ஊராட்சி மன்ற தலைவர்! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!
மயிலாடுதுறை சீர்காழி வட்டம் புங்கனூர் ஊராட்சியில் அரசு நலத் திட்டம் செயல்படுத்துவதில் பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடு சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு!
திருவள்ளூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றிய ஏ.பி.மகா பாரதி ஐஏஎஸ் மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக 2023 பிப்ரவரி மாதம் பொறுப் பேற்றுக்கொண்டு தற்போது 6 மாதங்கள் ஆகின்றது. அரசின் திட்டங்கள் நடைபெற்று வருவதை கள ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். மக்களுக்கு அரசின் திட்டங்கள் வேகமாக கிடைக்க அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
என்று பொறுப்பேற்றுக் கொண்ட அன்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்கும் மக்கள் நலத் திட்டங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
அதே போல் கடந்த மாதம் 6/06/2023 அன்று மயிலாடுதுறை_மாவட்டம்
சீர்காழிஊராட்சி ஒன்றியம்
புங்கனூர் ஊராட்சி செயலகம் கட்டுமான பணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்டுமான பணி சமையல் அறை கட்டுமான பணி பிரதம மந்திரி வீடு திட்டம் கிழ் வீடு கட்டும் ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
ஊராட்சி தலைவர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் மீது ஊரக உள்ளாட்சி சட்டத்தை மீறுவதாக கருதப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் அரசு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊராட்சி நடவடிக்கைகளில் தலைவர்கள் மற்றும் துணை தலைவர் பதவிகளில் உள்ள பெண்களின் கணவர்கள், உறவினர்கள் தலையீடு அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது. அதையடுத்து நிர்வாகத்தில் கணவர்களின் தலையீடு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்திற்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த கடிதத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் கடமைகளும் பொறுப்புகளும் தேர்தலில் தேர்வு செய்யப் பட்டவர்களையே சேரும். ஆனால் இந்த சட்ட விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவராக ஜூனைதா பேகம் கமாலுதீன் (வயது 70) இருக்கிறார். அவருக்கு வஜ்ருதின் என்ற மகன் இருக்கிறார்.
NMK_வஜீருதீன்
தமுமுக மமக
சீர்காழி ஒன்றிய தலைவராக இருக்கிறார்.
அதே ஊராட்சியில் பணிதள பொறுப்பாளராக இருப்பவர் புகழேந்தி ஆனால் இவர் சென்னையில் வேலை பார்த்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இவருக்கு பதிலாக இவரது மனைவி கனிமொழி பணித்தள பொறுப்பாளராக செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் புங்கனூர் ஊராட்சியில் பல கோடி ரூபாய்க்கு அரசு நலத் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் இளங்கோவன் புகார் அளித்துள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவராக வஜ்ருதீன் செயல்பட்டு வருவதாகவும் அதேபோல் பணிதல பொறுப்பாளராக புகழேந்தியின் மனைவி கனிமொழி இவர்கள் இரண்டு பேரும் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புங்கனூர் ஊராட்சி மன்ற பெண் தலைவர் முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கு கொள்கிறார் என்றும் மக்கள் நலத்திட்ட பணிகள் அனைத்தையும் அவரது மகன் தான் முன் நின்று செயல்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் பணிதலப் பொறுப்பாளர் புகழேந்தியின் மனைவி கனிமொழி தான் 100 நாள் வேலை வருகை பதிவேடுகளை கவனித்து வருவதாகவும் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கனிமொழியிடம் விளக்கம் கேட்பதற்கு காவல் நிலையத்தில் கனிமொழி பணத்தை கொடுத்து தட்டி கேட்ட சமூக ஆர்வலர் குடும்பத்தின் மீது பொய் புகார் ஒன்றை கொடுத்து வழக்கு பதிவு செய்ய சொல்லியுள்ளார் .
ஊராட்சி மன்றத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்களை தட்டி கேட்ட அந்த சமூக ஆர்வலர் குடும்பம் காவல்துறையினரால் மிரட்டப் படுவதாகவும் அதனால் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் இது சம்பந்தமாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு புகார் கொடுத்துள்ளதாகவும் சமூக ஆர்வலர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
புங்கனூர் ஊராட்சியில் நடக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் வெளியூர் வெளி மாநிலம் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் பெயர்களில் வேலை பார்த்ததாக ஊழல் முறைகேடு செய்து பல லட்ச ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் மகன் பணித்தள பொறுப்பாளர் மனைவி இரண்டு பேர்கள் மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் புங்கனூர் ஊராட்சியில் நடக்கும் மக்கள் நலத்திட்ட பணிகள் தெருக்களில் சிமெண்ட் சாலை மற்றும் பேவர் பிளாக் பதித்தல் குடிநீர் குழாய் இணைப்பு இலவச அரசு வீடு கட்டித் தரும் திட்டம் பல முறைகேடுகள் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
புங்கனூர் ஊராட்சி
16,07,2023
புங்கனூர் மேலத்தெருவில் நமக்கு நாமே திட்டத்தில் 2021_ 2022 ஆண்டுக்காண நிதி 7.26000 லட்சம்
(ஏழுலட்சத்து இருபது ஆறு ஆயிரம்) மதிப்பீட்டில் 230 மீட்டர் 15 ஆவது நிதி குழு மானியம் 400000 லட்சம் நான்கு லட்சம் மதிப்பீட்டில் 175 மீட்டர்
ஆக மொத்தம் 405மீட்டர்
புங்கனூர் மேலத்தெரு ஓர் அடுக்கு தார் சாலையாக அமைக்கப்படது.
இந்த தார் சாலை ஊராட்சி மன்ற தலைவர் உறவினர்கள் வைத்திருக்கும் நிலத்திற்கு செல்ல சட்டவிரோதமாக சுமார் லட்சம் செலவில் சாலை போட்டிருப்பதாகவும் இது சம்பந்தமாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்துள்ளதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.
புங்கனூர்_ஊராட்சி 11.06.2023
புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடு
நிலைப்பள்ளில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டம் (MGNREGS)2022-2023 புதியதாக சமையல்மற்றும் இருப்பு அறைகூடம் கட்டிடம் 500000(ஐந்துலட்சம்) மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கப்படது..
இந்த ஊழல் முறைகேடுகளுக்கு உடந்தையாக சீர்காழி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி உதவி இயக்குனர் மஞ்சுளா அவர்கள் இருந்ததாகவும் அவர்களுக்கும் பல லட்ச ரூபாய் கப்பம் கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகாரின் மீது விசாரணை என்ற பெயரை கண்துடைப்பு நாடகம் மட்டுமே நடந்ததாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை செய்தால் மட்டுமே புங்கனுர் ஊராட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடு பற்றி வெளிப்படையாக தெரிய வரும் ஊழல் முறைகளில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் பணித்தள பொறுப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். எது எப்படியோ மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பல ஊழல் முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது பத்திரிகையில் செய்தி வருவதும் செய்தி அடிப்படையில் அவ்வப்போது விசாரணை மேற்கொள்வதும் ஆனால் நிரந்தர தீர்வு காண எந்த நடவடிக்கையும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.
ஊழலுக்கு உடந்தந்தையாக செயல்படும் அதிகாரிகள்!உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியளர்.செந்தில்குமார் உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.சரவணன்
இளங்கோவன் ஒன்றிய பொறிய ளர்கள்..கலையரசன்.சிவகுமார் தெய்வானை சீர்காழி வருவாய் வட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் ஓவர்சியர் சந்திரமோகன் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வருவாய் துறை அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள்