வேலூர் மாநகராட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள துப்புரவு பணி மேற்பார்வையாளர்!
நடவடிக்கை எடுக்கத் தயங்கும் வேலூர் மாநகராட்சி ஆணையர்! சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!
2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல், வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி, மேயர், துணை மேயர் உள்ளிட்ட 60 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. காட்பாடி பேரூராட்சி வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
தற்போது வேலூர் மாநகராட்சியின் மேயரராக
சுஜாதா ஆனந்தகுமார், (திமுக)
துணை மேயரராக
சுனில், (திமுக) உள்ளனர்
மாமன்ற உறுப்பினர்கள் திமுக (45)
அதிமுக (7)
பாஜக (1)
பாமக (1)
மற்றவர்கள் (6) ஆக 60 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
வேலூர் மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 100 கோடி ரூபாய் ஆகும்.
ஆனால் வேலூர் மாநகராட்சியில் சாதாரண துப்புரவு பணியாளர்களின் மேற்பார்வையாளராக இருப்பவர் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
வேலூர் நகராட்சியாக இருந்தபோது நகராட்சியில் வேலை செய்து இறந்து போனவரின் மகனுக்கு வாரிசு அடிப்படையில்
வேலூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களின் மேற்பார்வையாளராக ரவி என்பவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து துப்புரவு பணியாளர்களின் மேற்பார்வையாளராக ரவி என்பவர் பணியில் சேர்ந்து தற்போது வேலூர் மாநகரத்தில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பத்துக்கும் மேற்பட்ட (அசையா சொத்து ) கட்டிடங்கள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
துப்புரவு பணியாளர் மேற்பார்வையாளராக இருப்பவருக்கு கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி என வேலூர் மாநகராட்சி 2 வது மண்டலம் 30 வது வார்டில் உள்ள பகுதி மக்களிடம் விசாரித்த போது அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்தனர்.
வேலூர் மண்டலம் 2 க்குட்பட்ட பகுதியில் தான்
சிஎம்சி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை தமிழகத்தில் மிக சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாகும்.
இந்த மருத்துவமனைக்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்ல வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அப்படி வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் சிஎம்சி மருத்துவமனை சுற்றியுள்ள இடங்களில் தங்கி சிகிச்சை பெற்று அவர்கள் ஊருக்கு திரும்புவது வழக்கம். இதனால் சிஎம்சி மருத்துவமனை சுற்றுவட்டார பகுதியில்
குறைந்தது 500க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றது.
இந்த விடுதிகள் வேலூர் மாநகராட்சியில் முறையாக அனுமதி வாங்கி நடத்தப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது. 50 சதவீதத்துக்கு மேல் வேலூர் மாநகராட்சியில் முறையான அனுமதி வாங்காமல் தனியார் தங்கும் விடுதிகள் நடத்தி வருகின்றனர். இதை அறிந்து கொண்ட அந்த மண்டலத்தில் துப்புரவு பணியாளர்கள் மேற்பார்வையாளராக இருக்கும் ரவி முறையாக அனுமதி வாங்காமல் தங்கு விடுதிகளை நடத்தும் உரிமையாளர்களிடம் மாதம் ஒரு பெரும் தொகையை தராவிட்டால் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் கூறி தங்கும் விடுதியை சீல் வைக்க சொல்லுவேன் என மிரட்டி அவர்களிடம் மாதம் பல லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு அதில் வேலூர் மாநகராட்சியில் உள்ள முக்கியமான அதிகாரிகளுக்கு கொடுத்து அதிகாரிகளின் நம்பிக்கையான கைப்பவையாக மாறி உள்ளார் இந்த ரவி. அது மட்டும் இல்லாமல் தனியார் தங்கும் விடுதிகள் நடத்த முறையாக அனுமதி பெற்று தருவது அனுமதியை புதுப்பித்து தருவது என பல விதங்களில் மாதம் பல லட்ச ரூபாய் வசூல் செய்து வருவதாகவும் சிஎம்சி மருத்துவமனையில் வெளி மாநிலத்தில் இருந்து வந்து சிகிச்சை பெற்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தவர்களுக்கு வேலூர் மாநகராட்சியில் இறப்புச் சான்றிதழ் பெற தன்னை அணுகுமாறு சிஎம்சி மருத்துவமனை சுற்றி உள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களிடம் கூறி அவர்கள் மூலம் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்து அந்தச் சான்றிதழுக்கு 5000 முதல் 15ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாகவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தனது வீட்டில் வளர்த்து வரும் ஆடு, மாடுகளை பராமரிக்கும் பணிகளுக்கு தூய்மை பணியாளர்களை பயன்படுத்தி வருகின்றாராம் என அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
தான் வசூல் செய்யும் பணத்தில் ஒரு தொகையை வேலூர் மாநகராட்சியில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு கொடுத்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு இருக்கும் துப்புரப் பணியாளர் சூப்பர்வைசர் ரவியின் மகன் கார்த்திக் என்பவருக்கு சித்தேரியில் ஒப்பந்தம் அடிப்படையில் சூப்பர்வைசர் பணி வாங்கி கொடுத்தாராம் .அப்பாவுக்கு தப்பாமல் பிள்ளை பிறந்திருக்குமோ என்னவோ அப்பா செய்த வேலைகளை அவரது மகன் கார்த்திக்கும் செய்து வருகிறாராம். இது தவிர ரியல் எஸ்டேட் பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் பிளான் அப்ரூவல் வாங்கி தருவது வீடு, கடை மற்றும் காலி மனைகளுக்கும் வரி போட்டு தருவதாகவும், நான்கு மண்டலங்களில் பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் மற்றும் பதிவில்லா சான்றுகள் வாங்கி கொடுத்து மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படி மாதம் பல லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கும் பணத்தில் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் தனது கட்டுப்பாட்டில் உள்ள திடக்கழிவு மற்றும் டெங்கு பணியாளர்கள் பெயரில் போலியாக கணக்கு காட்டி அதில் ஒரு பெரும் தொகையை ஊழல் முறைகேடு செய்துள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மாநகராட்சி மேயர், ஆணையாளர், உதவி ஆணையாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் தெரிந்தால் உன் மோசடிகள் ஆதாரப்பூர்வமாக தெரியவரும் என்று சூப்பர்வைசரிடம் கூறினால் மாநகராட்சியில் எவன் யோக்கியமாக இருக்கிறான். வேலூர் மாநகராட்சியில் உள்ள மண்டலங்களிலும் எந்த பிரிவுகளில் எடுத்துக் கொண்டாலும் கீழ்மட்ட ஊழியர் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் செய்வதில்லை அவர்களை எல்லாம் லஞ்ச ஒழிப்பு போலீசார் என்ன செய்தார்கள். அவர்களிடமே லஞ்சத்தை வாங்கிக்கொண்டு தான் மௌனமாக தான் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கையில் என்னை குறை சொல்ல எவன் யோகியமாக இருக்கிறான். திமுக ஆட்சியில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் சாதிக்க முடியாது. அப்படி எனக்கு பாதிப்பு ஏற்பட்டால் அமைச்சர் நேருயிடத்தில் ஏற்கனவே மாநகராட்சி பொறியாளராக இருந்த சீனிவாசன் தான் தற்போது பதவி உயர்வு பெற்று அங்கு இருக்கிறார். அவரிடம் சென்று நான் பார்த்து கொடுக்க வேண்டியது கொடுத்து மீண்டும் இதே இடத்திற்கு பணிக்கு வருவேன் என பிறகு பணியாளர் மேலாளர் ரவி ஆணித்தரமாக பதில் கூறுகிறார் என்று வேலூர் மாநகராட்சியில் பணியில் இருக்கும் நேர்மையான ஊழியர்கள் பரவலாக பேசி வருவதை கேட்ட வேலூர் மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் இதை அப்படியே விட்டு விட்டால் வேலூர் மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுமோ என்ற அச்சத்தில் தற்போது சூப்பர்வைசர் ரவியை மண்டலம் இரண்டில் உள்ள மற்றொரு வார்டிற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளதாக தகவல். இதுவும் கண்துடைப்பு நாடகம் என்கின்றனர் வேலூர் மாநகராட்சியில் வேலை செய்யும் நேர்மையான ஊழியர்கள்.
எது எப்படியோ மாநகராட்சியில் சாதாரண துப்புரவு பணியாளர்களின் மேற்பார்வையாளராக இருப்பவருக்கு கோடிக்கணக்கில் அசையா சொத்து மற்றும் கையில் லட்சக்கணக்கான பணம் வைத்திருப்பதாக சூப்பர்வைசர் ரவி மீது வந்துள்ள குற்றச்சாட்டை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.