காவல் செய்திகள்

மது அருந்து சென்றவர் மீது  கொலை வெறி தாக்குதல் நடத்திய கொடூரம்!
ரவுடிகள் போல்  நடந்து கொண்ட  சங்ககிரி தனியார் (CRC
A/C BAR) மதுபான கூடம் நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள்!

சேலம் மாவட்டம் சங்ககிரி பவானி சாலை பச்சக்காட்டில்  சுப்புகவுண்டர்  மகன் தேவராஜ் (எ) வாசுதேவ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது.

இந்த வணிக வளாக கட்டிடத்தில் தேவராஜ் என்ற வாசுதேவ் மகன் பரத்  மற்றும் ஹரிபிரசாத், திருமுருகன், விஷ்ணு உட்பட நான்கு பேர் சேர்ந்து  CRC குரூப் என்ற பெயரில் தனியார் A/C  மதுபான கூடம் நடத்தி வருகிறார்கள்.


சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் வயது 35 (இவர் தறிபட்டறை வைத்து நடத்தி வருகிறார்) இவர்
சங்ககிரி பவானி சாலையில் உள்ள சி ஆர் சி குரூப்  தனியார் ஏசி மதுபான கூட்டத்திற்கு சென்று மது அருந்தி கொண்டிருந்த போது

இரவு 10 மணி அளவில் செந்தில்குமார் எச்சில் துப்பியதாகவும் அதற்காக மதுபானம் கூட ஊழியர்கள் மற்றும் மதுபான கூட உரிமையாளர் சுமார் 10 பேர் சேர்ந்து செந்தில்குமாரை தகாத வார்த்தையில் திட்டியது இல்லாமல் கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டு காலால் மிதித்து உள்ளனர் .

அது மட்டும் இல்லாமல் செந்தில்குமாரின் தலை முடியை  பிடித்து இழுத்துச் சென்று சுவற்றில் முட்ட வைத்துள்ளனர் .
இதனால் செந்தில் குமாருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தவுடன் அருகில் இருந்தவர்கள் படு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த செந்தில் குமாரை அருகில் இருந்தவர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு  பின்பு மேல் சிகிச்சைக்காக  சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

மது அருந்தி கொண்டிருந்த செந்தில் குமாரை தாக்கிய மதுபான கூட ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தாக்கப்பட்ட செந்தில்குமார் மனைவி கவிதா (வயது 31 )

சங்ககிரி காவல்   காவல் ஆய்வாளர் ஜமுனாவிடம் புகார் கொடுத்தார் . புகார் மீது காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து

தனியார் மதுபானக் கூட உரிமையாளர்களில் ஒருவரான  சேலம் சீலநாயக்கன்பட்டி சின்னச்சாமி நகர் பகுதியில் சேர்ந்த ஹரி பிரசாத் வயது 26  எடப்பாடி வெள்ளேரி வெள்ளி கிராமம் கண்ணங்காடு பகுதியை சேர்ந்த கேசியர் நவீன் குமார் 27 அதேபோல் நாமக்கல் மாவட்டம் மரூர்பட்டி  ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த  கேசியராக இருந்த பிரசாத்  சங்ககிரி வைநத்தம் கிராமம் இடையாபட்டி பகுதியைச் சேர்ந்த விவேக் வயது  31 சங்ககிரி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் வயது23 ஆகிய ஐந்து பேரை சங்ககிரி காவல்துறையினர் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு அனைவரையும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வெறி தாக்குதல் தனியார் மதுபான கூடத்தில் உரிமையாளர் மற்றும் மதுபான கூடத்தின் கட்டிட உரிமையாளர் தேவராஜ் என்ற வாசு தேவராஜ் மகன் பரத்  மற்றும் திருமுருகன் விஷ்ணு  ஆகியோரின் தூண்டுதல் பெயரில் தான் நடந்துள்ளதாகவும் ஆகவே தாக்குதலுக்கு முக்கிய காரணமான இந்த மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட செந்தில்குமார் மனைவி கவிதா கோரிக்கை விடுத்துள்ளார்.


எது எப்படியோ தனியார் மதுபானக்கூடங்களில் மது அருந்த செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது சட்டவிரோத செயலாகும். தனியார் மதுபான கூடத்தில் மதுபானம் விற்பனை செய்ய விரும்பினால், பின்வரும் முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
21 வயது பூர்த்தி அடையாத எவருக்கும் மதுபானம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற விற்பனையாளர், வாங்குபவரின் வயதை சரிபார்க்க வேண்டிய கடமை உள்ளது. வயதுச் சான்று இல்லாத நபருக்கு மதுபானம் விற்பனை செய்வது குற்றமாகும்
மதுபான விற்பனைக்கான சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது, உரிமம் ரத்து செய்யப்படுவது, அபராதம் விதிப்பது, சிறைத் தண்டனை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கலாம். இது போன்ற
பல சட்ட விதிமுறைகள்
நடைமுறையில் இருந்தும் அந்த சட்ட விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தனியார் மதுபான கூட்டங்களில் ரவுடிகள் போல் செயல்படுவது சட்டத்திற்கு புறம்பானது ஆகவே சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மதுவிலக்கு மற்றும் கலால் துறை  ஆணையர் (Commissioner of Prohibition and Excise)
ஆகியோர் சங்ககிரி பவானி சாலையில் அமைந்துள்ள சி ஆர் சி தனியார் மதுபான கூடத்தின் உரிமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Back to top button