தைப்பூசம் சாராய பூமியாக மாறிய பழனி ஆன்மீக பூமி! கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில் அமோக விற்பனை! கல்லாக்கட்டும் மதுவிலக்கு காவல்துறை!

திண்டுக்கல் மாவட்டம் பழனி! கள்ளச் சந்தையில் போலி மது பாட்டில் அதிக விலைக்குஅமோக விற்பனை! வைரல் வீடியோ..
தைப்பூசம் வள்ளலார் இராமலிங்கனார் நினைவு தினமான 01/02/26 திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடை மற்றும் மதுபானக்கூடங்கள் மற்றும் FL-2 தனியார் கிளப் அனைத்தும் விடுமுறை என மாவட்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார். ஆனால் அந்த அறிவிப்பை காற்றில் பறக்க விட்டு
பழனி முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கூடங்களில் சட்டவிரோதமாக கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை அமோகமாக நடைபெறும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
குறிப்பாக பழனி பேருந்து நிலையம் முன்பு குளத்தூர் ரோடு மற்றும்
ஆர் எப் ரோடு , கோதமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகே கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது பாட்டில் சட்ட விரோதமாக விற்பனை நடப்பதால் அங்கு மது பிரியர்கள் கூட்டம் காலையிலிருந்து திருவிழா கோலம் போல் காட்சியளிக்கிறது. சட்டவிரோதமாக கள்ளத்தனமாக போலி மது பாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு பழனி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் உடந்தையாக செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்யும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்கும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக செயல்படும் பழனி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அவர்கள் மீதும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆக நடவடிக்கை எடுக்க வேண்டும் என
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




