100-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளை
சட்டவிரோதமாக காப்பகத்தில் புதைத்து
அரங்கேற்றிய திரைப்பட தயாரிப்பாளரின் அதிர்ச்சி சம்பவம்!
100-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளை திரைப்பட தயாரிப்பாளர்!
மனநல காப்பகத்தின் அருகே புதைத்து
அரங்கேற்றிய அதிர்ச்சி சம்பவம்!
100-க்கும் மேற்பட்டோரை யாருக்கும் தெரியாமல் காப்பகம் அருகே உள்ள இடத்தில் உடல்களை புதைத்து
அரங்கேற்றிய மருத்துவரின் அதிர்ச்சி சம்பவம்!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் அகஸ்டின் லவ்ஷேர் என்ற பெயரில் ஒரு சாரிடபிள் டிரஸ்ட்டை நடத்தி வந்தார்.
இந்த அறக்கட்டளை 1999-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அவர் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அகஸ்டின் அந்த அறக்கட்டளையை
மனநலக் காப்பகமாக மாற்றி நடத்தி வந்தார்.
இந்த காப்பகம் கடந்த 25 வருடமாக அரசு அனுமதி இன்றி உரிய உரிமம் பெறாமல் நடத்தி வருவதாகவும் அங்கு மனநோயாளிகளுக்கு போதுமான அடிப்படை வசதி இல்லை என்றும் மன நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள் இல்லை என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மனநல காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
25 ஆண்டுகளாக உரிமம் இன்றி மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் அந்த மனநல காப்பகம்
அனுமதி இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில், எந்தவித மருத்துவ வசதி இல்லாமல் மனநல காப்பகம் நடத்தி வந்தது தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல் அங்கு பரமாரிக்கப்படுபவர்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதைக்கண்டு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்தடுத்த கட்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில்
சுற்றுத்திரிபவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காப்பகத்தில் வேலை செய்த ஊழிய அழைத்து வந்து காப்பகத்தில் தங்க வைத்தது தெரியவந்தது. அதேபோல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சிலர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த பல வருடங்களாக இங்கு தங்கியிருந்த 100 க்கும் மேற்பட்டோர் மனநல பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் காப்பகத்திற்கு அருகே உள்ள காப்பகத்தின் சொந்தமான
நிலத்திலேயே உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவர் அகஸ்டின் புதைத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் பின்பு காப்பகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், நெலாக்கோட்டை காவல்நிலையத்தில் கொடுத்த பின்பு காப்பகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள், மனநலம் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மனநல மருத்துவர்கள் விவேக் மற்றும் தேவாலா, துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி, மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மனநல காப்பகத்தை நடத்தி வந்த
தலைமறைவான காப்பகத்தின் உரிமையாளர் அகஸ்டின், அவரது மனைவி கிரேசி மற்றும் உழியர்கள் 10 பேருக்கு சம்மன் வழங்கி, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து 10 பேரும் நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராகினர்.
மனநல காப்பகத்தில் 100 க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் இறந்தது எப்படி என்றும், அந்த 100 பேரும் இயற்கையாக தான் மரணமடைந்தார்களா இல்லை அடித்து துன்புறுத்தியதால் இறந்தார்களா என்ற கோணங்களில் தேவாலா டிஎஸ்பி சரவணன் தலைமையில், காவல்துறையினர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.மேலும், காப்பகத்தில் இறந்து போனவர்கள் எப்படி இறந்தார்கள்?, இறப்புக்கான காரணம் என்ன? , காப்பகத்தை நடத்துவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.அதேபோல் காப்பகத்தில் மாதத்துக்கு ஒரு முறை சிகிச்சை வழங்கிய செவிலியர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், காப்பகத்தில் இருந்த 16 வயது சிறுவன் ஒருவன் அகஸ்டின் தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டார் அதிர்ச்சி தகவலை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரசு அனுமதி இல்லாமல் மனநலம் காப்பகம் நடத்தி வந்த
டாக்டர்அகஸ்டின் 3 கோடி ரூபாய் செலவு செய்து தமிழ் திரைப்படம் ஒன்றை இயக்கி தயாரித்துள்ளார் .
ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ் என்ற அவரது நிறுவனத்தின் பெயரில்
.டாக்டர் அகஸ்டின்
அந்த திரைப்படத்திற்கு புதர் என்று பெயர் வைத்துள்ளார் .
அந்த படத்திற்கு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்தமானில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ‘சென்டினல்’
பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை சொல்லும் கதையை திரைப்படமாக எடுத்துள்ளார்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாரித்துள்ளார்
இவருடன் இணைந்து
கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ்-ன்
லிபின் குரியன் இணைந்து இந்த திரைப்படத்தை
இதன் பாடல் வெளியீட்டு விழா 2022 ஆம் ஆண்டு நடந்தது அந்த வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.பார்த்திபன், ஆர்.கே.சுரேஷ், சீனு ராமசாமி , ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
இப்படம் கேரளா மற்றும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதி மற்றும் அந்தமானில் உள்ள குருபா தீவில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் எடுக்க பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் அகஸ்டினிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முழு விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.