1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அதிமுக பிரமுகரிடம் சென்றது எப்படி!?
சட்டரீதியாக மீட்கப்பட்டது எப்படி!?கலைஞரின் 33 ஆண்டுகால விருப்பத்தை சட்டப் போராட்டத்தால் நிறைவேற்றிய ஸ்டாலின்!
கருணாநிதியின் 33 ஆண்டுகால விருப்பம் சட்டப் போராட்டத்தால் நிறைவேறியுள்ளது.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற போது.
தோட்டக்கலைச் சங்கத்தின் 99 வருட குத்தகை கோப்புகளை அளிக்க நினைத்த ஜெயலலிதா! தடுத்து நிறுத்திய கலைஞர்!
அரசின் நிலம் எப்படி அதிமுக பிரமுகரிடம் சென்றது?
எப்படி சட்டரீதியாக அது மீட்கப்பட்டது?
1989 ஆம் ஆண்டை இந்த நிலம் என்பது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக அரசுக்கு தான் சொந்தமானது எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை அண்ணாமேம்பாலம் அருகே ரூ.1000 கோடி மதிப்புள்ள 110 கிரௌண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த மேல்முறையீட்டு மனுவில் முகாந்திரம் இல்லை என்று கூறி தான் உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ், மகேஸ்வரி தலைமையிலான அமர்வு தான் கிருஷ்ணமூர்த்தியினுடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
33 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசுக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகள் தங்களது இல்லங்களுக்குத் தோட்டங்களை அமைத்துப் பராமரித்து வந்தனர்.அதற்கான செடி, நாற்றுகளை உருவாக்க ஒரு தோட்டக்கலைச் சங்கம் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்துக்கு பிரிட்டிஷ் அரசு 4 காணி (18 கிரவுண்டு) இடத்தை 99 வருடத்திற்கு குத்தகைக்கு தருகிறார்கள்.
99 வருடம் குத்தகைக் காலம் முடிந்திருந்த இந்தத் தோட்டக்கலைச் சங்கத்தையும், எதிரில் டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இருந்த அரசு நிலத்தையும் உடனடியாக கையகப்படுத்தச் சொல்லி அரசுக்கு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் உத்தரவிடுகிறார்.
அந்த இடம் இறுதியாகச் சென்னையின் மையமான ஜெமினி பாலத்துக்கு அருகில், அமெரிக்கத் தூதரகத்துக்கும் பக்கத்தில் அமைந்ததுள்ள அந்த இடத்தை
காலப்போக்கில் அந்தச் சங்கம் அப்படியே துரைசாணிகளிடம் இருந்து கைமாறி வெவ்வேறு நபர்களிடம் வந்து இறுதியாக கிருஷ்ணமூர்த்தி எனும் அதிமுக நபரிடம் வந்து சேர்கிறது.
அப்போது அரசு வழங்கிய 99 வருடத்திற்கான குத்தகை முடியும் நேரம். கிருஷ்ணமூர்த்தி அப்போதைய முதல்வர் எம்ஜிஆருக்கு வேண்டியவர் என்பதால் அவரிடம் சென்று குத்தகையை நீட்டித்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
முதல்வரும் ஒப்புக்கொண்டு அதற்கான கோப்புகளைத் தயார் செய்யும் நேரத்தில் எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் அமெரிக்கா செல்ல நேரிடுகிறது.
அதன் பிறகு நேர்ந்த எம்ஜிஆரின் மரணம், அரசியல் குழப்பங்கள் எல்லாம் முடிந்து 1989 ஆம் ஆண்டு கலைஞர் முதல்வர் ஆகிறார். கலைஞரிடம் அந்தக் குத்தகை நீட்டிப்புக் கோப்பு செல்கிறது.
அதன் பின்னணியை அறிந்த கருணாநிதி கோபத்துடன் அதிகாரிகளை அழைத்து குத்தகைக் காலம் முடிந்திருந்த இந்தத் தோட்டக்கலைச் சங்கத்தையும், எதிரில் டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இருந்த அரசு நிலத்தையும் உடனடியாக கையகப்படுத்தச் சொல்லி உத்தரவிடுகிறார்.
அதை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றம் செல்கிறார். வழக்கு தொடங்கும் முன்னரே கலைஞரின் ஆட்சி கலைக்கப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி எனப் பிரபலம் அடைந்து சசிகலா நடராஜனுக்கு நெருக்கமானவராகிவிடுகிறார். அடுத்து 1991 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவிடம் அதே கோப்பு போகிறது.
குத்தகை நீட்டிப்பு விஷயத்தில் முடிவெடுக்க முடியாத அளவுக்கு அந்தக் கோப்பில் கருணாநிதி கடுமையான குறிப்புகளை எழுதி வைத்திருப்பதை பார்த்து ஜெயலலிதா எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இருந்த போது அந்தக் கோப்புகளை இல்லாமல் ஆக்கிவிடச் சிலர் முயற்சித்து உள்ளதாக அப்போது தகவல் வெளியானது.
அது கருணாநிதிக்குத் தெரிய வந்ததும் மிகக் கடுமையான அறிக்கையை அவர் வெளியிட, ஜெயலலிதா அவர்கள் எந்த முடிவையும் எடுக்காத நிலையில் அந்த கோப்புகள் அப்படியே நின்று விடுகிறது. ஆனால் அந்த இடம் அதே நபரின் ஆக்கிரமிப்பிலேயே தொடர்ந்து இருந்து வந்தது.
மீண்டும் 1996 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்து கலைஞர் முதல்வரானவுடன் மீண்டும் வழக்கு நீதிமன்றத்தில் நடத்தப்படுகிறது. எதிர்த்தரப்பினர் வாய்தா மேல் வாய்தா வாங்கினாலும் வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.
மீண்டும் 2001ல் அதிமுக ஆட்சி. மீண்டும் வழக்கு அப்படியே நிற்கிறது. வழக்கை வாபஸ் வாங்கவும் கூட முயன்றனர் நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
மீண்டும் 2006ல் கலைஞர்ஆட்சிக்கு வருகிறார். அப்போதுதான் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் இருந்த இடத்தை மீட்டெடுத்து அரசுக்கு சொந்தமாக்கி அந்த இடத்தில் செம்மொழி பூங்கா உருவாக்கினார்.ஆனாலும் இந்த தோட்டக்கலைச் சங்க வழக்கு முடியவில்லை.மீண்டும் 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிறார். இந்த முறை தைரியமாக ஒரு முயற்சியை மேற்கொள்கின்றனர். அரசுக்குச் சொந்தமான இடத்தை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அதிமுக ஆட்சியில் அந்த நிலத்தைத் தோட்டக்கலை சங்கத்தின் பெயரில் சென்னை ஆட்சியரை வைத்து பட்டா வாங்குகின்றனர். அதன் பின்பு
நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டது.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக உறவினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு
பிறகு அது பெரும் சர்ச்சை ஆன நிலையில் தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் நில நிர்வாக ஆணையராக இருந்த நாகராஜன் ஐ ஏ எஸ் அவர்கள் முதல்வராக இருந்த எடப்பாடி மற்றும் துணை முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் சொல்வதைக் கேட்டு உயர்நீதிமன்றத்தில் சரியான ஆதாரங்களை வழங்காமல் பட்டா வழங்கியது ரத்து செய்யாமல் இந்த வழக்கில் மெத்தனப் போக்கை கடைபிடித்து கிடப்பில் போட்டதாகவும் திமுக கட்சி சார்பாக குற்றச்சாட்டு வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பு தமிழ்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஓர் இடத்தை தனிநபரிடம் இருந்து மீட்கும் அந்த அயராத சட்டப் போராட்டத்தின் முடிவு தெரியாமலேயே கலைஞர் அவர்கள் மறைந்து விடுகிறார். 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்து ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார்.
2022 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை கச்சிதமாக நேர்த்தியாக வழக்கறிஞர்கள் வாதாடியதால் உயர்நீதிமன்றம் அந்த இடத்தை அரசு கையகப்படுத்த தீர்ப்பு வழங்கியது. அதன்பின்பு உயர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தோட்டக்கலை சங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2023 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றம் கொடுத்த அந்தத் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடும் இந்த நாளில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ் மக்களின் சொத்து ஒரு தனிநபரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் 33 ஆண்டுகால விருப்பம் சட்டப் போராட்டத்தால் நிறைவேறியுள்ளது.
இந்த அரசு நில மீட்பு ஒரு உதாரணம்தான்.
இதைப் போன்ற எத்தனையோ மாநில உரிமைகளை, சமூகநீதி, கல்வி உரிமைகளை அவர் மீட்டெடுத்தது தான் திராவிட மாடல் அரசியல் சரித்திரம். தமிழ்நாட்டின் தனித்த அடையாளங்களுள் ஒன்று கலைஞர் கருணாநிதியின் போராட்டம் என்றானது.
கருணாநிதியின் வாழ்நாளில் சட்டப் போராட்டத்தில் விழித்து வெற்றி பெற்றவர்கள் எவருமே இல்லை.
மறைந்த பின்னரும் கூட சட்டப் போராட்டத்தில் வென்று கொண்டுதான் இருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்.