2 லட்சம் வாங்கிய கடனுக்கு
2 கோடி வசூல் !
தென்மாவட்டங்களில் தலைவிரித்தாடும் கந்து வட்டியால் தொடரும் தற்கொலைகள்!
நீதிமன்றம் எச்சரித்தும்
நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கடுமையாக கண்டித்த நீதிபதிகள்!
கந்து வட்டிக் கொடுமையை ஒழிக்க கடந்த 2003ம் ஆண்டிலேயே தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டத்திற்கு அதீத வட்டிவசூல் தடைச்சட்டம் எனப் பெயர் .
தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையால் மீண்டும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக வட்டிக்குப் பணம் கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
சட்டத்தில் இவ்வளவு கெடுபிடிகள் இருந்தாலும், எந்தக் கெடுபிடிக்கும் அஞ்சாமல் அதீத வட்டியின் கெடுபிடியில் மாட்டி தற்கொலை மரணம் அடைந்தவர்கள் பட்டியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி, கந்துவட்டி கொடுமையால் இனி உயிர்கள் பறிபோகாமல் காக்க வேண்டும் என்ற கோரிக்கையே தற்போது பல தரப்பிலும் முன்வைக்கப்படுகிறது.
பத்து நாள்களுக்கு ஒரு முறை வட்டி கணக்கிட்டு வந்து வண்டி கொடுப்பவர்கள் வசூலுக்கப்படுவதாகவும், 10 நாள்களுக்கு மேல் வட்டி செலுத்தாவிடில் வட்டிக்கு வட்டி போட்டு வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கந்துவட்டிக்கு கொடுக்கும் 50 ஆயிரம் ரூபாய்க்கு , ம் ரூ.5 லட்சம் வரை வட்டியுடன் மிரட்டி கட்டாய வசூல் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் ஆகவே கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பல மாவட்டத்தில் கந்துவட்டிக் கொடுமையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காவல்துறை மெத்தனப் போக்கு காரணமாகவே இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும் தமிழக அரசு இதற்காக தனி சட்டம் இயற்றினாலும் அதனை நடைமுறைப்படுத்த காவல்துறை தயங்கி வருவதாகவும்
எனவே கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற பிரச்னை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தொழில் முடக்கப்பட்டுள்ளதால் தற்சமயம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்காரர்கள் யாரும் கொடுத்த கடனை வசூலிக்க வர வேண்டாம் எனவும் கந்துவட்டி கொடுக்கும் நபர்கள் மீது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
அப்பகுதி பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டாசு தொழிலையே பிரதானமாக செய்து வருகின்றனர். பட்டாசு தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலும் இவர்களுக்கு கிடையாது. பட்டாசு ஆலைகளை நான்கு மாத காலமாக அரசு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.
தங்களது வாழ்வாதாரத்தை இழந்த கிராம மக்கள் உணவிற்குக் கூட வழியில்லாமலும் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, விலைவாசி உயர்வு என நெருக்கடியில் உள்ளனர். அதனால், மகளிர் சுய உதவி குழுவிடம் கடன் வாங்குகிறார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை ஒப்படைக்காதவர்களுக்கு சுய உதவிக் குழுக்காரர்கள் நெருக்கடி கொடுப்பது, இரவு முழுவதும் அவர்கள் வீட்டிற்கு முன் அமர்ந்து கொள்வது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற காரணங்களால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி அதை ஈடுகட்ட வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
“அருகில் உள்ள வீட்டில் திருமணத்திற்கு மொய் செய்வதற்கு கூட பணம் இல்லாததால், திருமணத்திற்கு செல்லாமல் கதவை அடைத்துக் கொண்டு வீட்டிற்குள் இருந்தோம்” என ஜெஸ்ஸி என்ற பெண் கூறுகிறார்.
“இரண்டு வேலை மட்டும் தான் சாப்பிடுகிறோம்; ஊறுகாய்க்கு கூட வழியில்லை. நான்கு மாதம் வேலை இல்லாமல் வார வட்டி ,மாதவட்டி, மகளிர் சுய உதவிக் குழு கடன் மற்றும் கந்து வட்டி கட்டுவதற்கு கையில் பணம் இல்லை. எங்களின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் குழுக்காரர்களும் கந்து வட்டிக்காரர்களும் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். கேவலமாக திட்டுகிறார்கள் வீட்டை எழுதிதரச் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்!” என மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மக்களின் நிலை கொரோனா ஊரடங்கில் இருந்த நிலைமையை விட தற்போது மிகவும் மோசமாக உள்ளது என்பதை கள ஆய்வில் “வினவு தோழர்களால்” உணர முடிந்தது.
மகளிர் சுய உதவி குழுக்காரர்கள், கந்து வட்டிக்காரர்கள் செய்யும் கொடுமைகளுக்கு எதிராக பேசுவதற்கே மக்கள் தயங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக பேசினால் அடுத்து அவர்களிடம் கடன் வாங்க முடியாது என்று பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மோசமான இழி நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
படிக்க: விழுப்புரம் குடும்பத்துடன் தற்கொலை : தொழில் நசிவு – கந்து வட்டி || தீர்வு என்ன ?
தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் சிவகாசியில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90 சதவிகிதம் சிவகாசியில்தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுப்பணிகளில் 60 சதவிகிதம் இங்கு நடைபெறுகிறது. சிவகாசியில் உள்ள 90 சதவிகித மக்கள் இந்த தொழில்களைச் சார்ந்து தான் உள்ளனர். இங்கு இதைத் தவிர மற்ற வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால், இன்று இந்தத் தொழில்கள் நலிவடைந்து வருவதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தான் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கல்வி, மருத்துவம் போன்ற செலவுகள் தவிர்க்க முடியாமல் இருக்கின்றன. ஆனால், வருமானம் மிகவும் குறைவு. இதுதான் இங்குள்ள மக்களின் இன்றைய நிலை.
இதனால், இயல்பாகவே மக்கள் கடன் வாங்கும் நிலைமை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதனைக் கட்ட முடியாமல் நெருக்கடிக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்து, தரமான கல்வியையும் மருத்துவத்தையும் மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தால் மக்கள் யாரும் கடன் வாங்கப் போவதில்லை. ஏனென்றால், இதுதான் மக்களின் அடிப்படைப் பிரச்சனையாக உள்ளது. இதை மக்களுக்கு அரசு செய்ய வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.
இலாப வெறி பிடித்த முன்னணியான பட்டாசு ஆலைகளின் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசு அதிகாரிகள், சிறு குறு பட்டாசு ஆலைகளை முடக்கி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். அதனால், மகளிர் சுய உதவிக் குழுக்களிடமும் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு கடனை கட்ட முடியாமல் தற்கொலையை நோக்கி மக்களைத் தள்ளப்படுகின்றனர்.
இது போன்று தொடரும் தற்கொலைகளில் கடன் கொடுத்தவர்கள் கொடுக்கும் நெருக்கடி, கொலை மிரட்டல்களை தாங்க முடியாமல் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கிறது. இந்த கிரிமினல்தனத்தை அதிகார வர்க்கம் பாதுகாக்கிறது. இதற்கு எதிராக மக்கள் களத்தில் இறங்கி போராடுவதன் மூலமாகத்தான் கந்து வட்டி கும்பலை முற்றும் முதலுமாக ஒழித்துக் கட்ட முடியும்.
கந்து வட்டி பிரச்னைகளுக்கு எதிராக காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையைச் சோ்ந்த இளங்கோ, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்தார். அந்த மனுவில்
நான் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2020-ஆம் ஆண்டு வெற்றுக் காசோலை, வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிட்டு தனி நபா்களிடம் அளித்து, ரூ. 2 லட்சம் கடன் வாங்கியதாகவும். இந்தத் தொகைக்கு இதுவரை ரூ. 2 கோடி வரை பணம் கொடுத்துள்ளதாகவும்
இந்த நிலையில், கடன், வட்டிக்கு ஈடாக எனது மென்பொருள் நிறுவனத்தை தங்களுக்கு சாசனம் செய்து தரக் கோரி கடன் கொடுத்தவா்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக இதுகுறித்து காவல் துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பிறகு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து புகாரின் பேரில், தொடா்புடைய நபா்கள் மீது வழக்குப் பதிய காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் நீதின்றத்தின் உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மீண்டும் நீதிமன்றத்தில் கோரிய.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜூலை 27-ஆம் தேதி மனுதாரரின் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக மாநகரக் காவல் ஆணையா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
தென் மாவட்டங்களில் கந்து வட்டி பிரச்னையால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறை உயா் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். எனவே, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் இந்த வழக்கில் எதிா் மனுதாரராகச் சோ்க்கப்படுகிறாா். அவா் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.