3 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சீர்காழி வட்டாட்சியர் கொள்ளிடம் சார்பதிவாளர் ஆகியோர் போலிஆவணங்கள் மூலம் பட்டா வழங்கி பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கூத்தியம் பேட்டை கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட கதவு எண் (2/18 ) வீட்டில் வசித்து வருபவர் சந்தான கோபால் (தந்தை பெயர் ராமன்) சீர்காழி புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள புத்தூர் கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட 3229 சதுரடி அரசு நத்தம் புறம்போக்கு காலி இடத்தை

( சர்வே நம்பர் 620/4 பழைய சர்வே நம்பர் 626/2 பட்டா எண் 482 ) 27/01/2025 அன்று

கொள்ளிடம் சார் பதிவாளர் அலுவலகத்தில்

சந்தானகோபால் தன் மனைவிக்கு சீர்காழி சார் செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

பத்திரப்பதிவு எண் (2025/145/13)

அதன்பின்பு அந்த இடத்தில் மனைவி உமாதேவி வணிக வளாகம் கட்டுவதற்கு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் . வங்கியில் கடன் வழங்குவதற்கு முன்பு வணிக வளாகம் கட்ட இருக்கும் இடத்தை வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வந்த போது அந்த இடத்தின் அருகில் இருந்த 13 கடை உரிமையாளர்கள் வங்கி அதிகாரிகளிடம் எதற்கு இந்த இடத்தை ஆய்வு செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்கள். அதற்கு இந்த இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு சந்தன கோபால் மனைவி உமா தேவி வங்கியில் கடன் கேட்டுள்ளதால் ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளோம் என அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த கடைக்காரர்கள் அந்த அதிகாரிகளிடம் சந்தானகோபால் மனைவி உமாதேவி வணிக வளாகம் கட்டுவதற்கு கடன் கேட்டுள்ள இந்த இடம் அரசு நத்தம் புறம்போக்கு என்றும் இந்த இடத்தில் 13 கடைகள் இருப்பதாகவும் அதுவும் இரண்டு மூன்று தலைமுறையாக இந்த கடைகளை நடத்தி வருவதாகவும் . 13 கடைகளில் சந்தான கோபாலு ஒரு கடை வைத்துள்ளதாகவும் அதே போல் 13 கடைகளும் அரசு நத்தம் புறம்போக்கு என்றும் அந்த இடத்திற்கு பட்டா மற்றும் எந்த ஆவணமும் யாரிடமும் இல்லை என்றும் சந்தான கோபால் மனைவி உமாதேவிக்கு மட்டும் எப்படி பட்டா வழங்கப்பட்டது . எப்படி பத்திரப்பதிவு செய்யப்பட்டது என மற்ற கடைக்காரர்கள் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் அருள் ஜோதி
யிடம் அரசு நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எப்படி பட்டா வழங்கினார்கள் விளக்கம் கேட்டபோது பட்டா எண் மற்றும் பெயர் ஆன்லைனில் தவறாக பதிவாகி விட்டதாக சீர்காழி வட்டாட்சியர் அருள் ஜோதி மற்றும் வருவாய் ஆய்வாளர் குணவதி கிராம நிர்வாக அலுவலர் தமிழ்மணி ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதிலை கூறிவந்த நிலையில் கோபால் பெயரில் இருந்த பட்டாவை நீக்கி விடுவோம் எனவும் கூறியுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று அரசு நத்தம் புறம்போக்கு இடத்தை எப்படி பத்திரப்பதிவு செய்தீர்கள் என கொள்ளிடம் சார் பதிவாளர் ஸ்டீபன் இடம் கேட்டுள்ளனர். அதற்கு சார்பதிவாளர் ஸ்டீபன் சந்தானகோபால் பெயரில் பட்டா இருந்ததால் சந்தானகோபால் உமாதேவி பெயரில் அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாகவும் கொள்ளிடம் சார் பதிவாளர் ஸ்டீபன் கூறி தப்பிக்க நினைத்துள்ளார்.
அதன் பின்பு சந்தான கோபால் அவரது மனைவி உமாதேவிக்கு பத்திரப்பதிவு செய்த ஆவணங்களின் நகலை பணம் கட்டி வாங்கி பார்த்ததில் அதில் அரசு நத்தம் புறம்போக்கு காலி இடம் 3229 சதுர அடி நிலத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் உமாதேவி பெயரில் சந்தான கோபால் முறைகேடக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளது தெரிய வந்தது.
சந்தானகோபால் பெயரில் சட்டவிரோதமாக முறைகேடாக பட்டா வழங்குவதற்கு சீர்காழி வட்டாட்சியர் அருள் ஜோதி மற்றும் வருவாய் ஆய்வாளர் குணவதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்மணி ஆகியோர் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு பட்டா வழங்கி இருப்பதாகவும் அதை வைத்து கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுப்பதற்கு கொள்ளிடம் சார் பதிவாளர் ஸ்டீபணுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து கள ஆய்வு மேற்கொள்ளாமல் அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாகவும் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை சீர்காழி வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் கொள்ளிடம் சார் பதிவாளர் ஆகியோர் கூட்டாக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை போலி ஆவணங்களை வைத்து முறைகேடாக பயன்படுத்தி கூட்டு மோசடி செய்த வருவாய்த்துறை மற்றும் சார் பதிவாளர் அதிகாரிகள் அனைவர் மீதும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் வணிகர்கள் சங்கம் சார்பாக புகார் மனு கொடுத்து விட்டு

சார் பதிவாளர் அலுவலகம் வட்டாட்சியர் மற்றும் புத்தூர் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் அமர்ந்து காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டனர். அதன் பின்பு

சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் வணிகர் சங்க நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வந்த இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்டா மற்றும் பத்திரப்பதிவு நீக்க நடவடிக்கை எடுப்பதாக

வருவாய் கோட்டாட்சியர் எழுதிக் கொடுத்து உறுதியளித்தார்.
ஆனால்
மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கிய வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஆகியோர் மீது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
எது எப்படியோ அரசு நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கிய பின்பு அந்த இடத்தை சந்தான கோபால் தனது மனைவி உமாதேவிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து அதன்பின்பு அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு வங்கியில் கடன் கேட்டு அணுகியுள்ளனர். வங்கியில் வணிகவளகம் கட்ட கடன் கேட்டு இடத்தின் ஆவணங்களை கொடுக்கும் போது வணிக வளாகம் கட்டுவதற்கு தடை இல்லா சான்று முதலில் வாங்க வேண்டும். அதன் பின்பு ஊராட்சியாக இருந்தாலும் பேரூராட்சி இருந்தாலும் வணிக வளாக கட்டிடத்தின் வரைபடத்தின் அனுமதி வாங்க வேண்டும். தடையில்லா சான்று மற்றும் வரைபட அனுமதி இவை இரண்டையும் கொண்டு போய் வங்கியில் கொடுத்த பின்பு தான் வங்கியில் கடன் கொடுப்பார்கள். அப்படி என்றால் தடையில்லா சான்று மற்றும் வரைபட அனுமதி எப்படி வழங்கினார்கள். ஆனால் இதையெல்லாம் மறைத்து வருவாய்த்துறை வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் ஆன்லைனில் தவறுதலாக பட்டா பெயர் மாற்றம் வந்துவிட்டது என கூறுவது பொதுமக்களுக்கு ஒன்றுமே தெரியாது என பூனை கண்ணை மூடி பால் குடித்தால் யாரும் பார்க்கவில்லை என்பதை போல் இவர்கள் கதை சொல்வதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் யாரும் நம்புவதாக இல்லை.
வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இருக்கும் அதிகாரிகள் தங்களது சுயலாபத்திற்காக லஞ்சம் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு
திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் லஞ்சம் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து களை எடுத்து பொதுமக்கள் மத்தியில் அதிகாரிகள் மீது உள்ள அச்சத்தை போக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!?