மாவட்டச் செய்திகள்

5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தின் அசல் பத்திரம் இல்லாமல் பதிவு செய்து கொடுக்க 10 லட்சம் லஞ்சம்!?
கொடிகட்டி பறக்கும் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம்!?
நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி!?



சொத்து விற்பனையின்போது, பழைய அசல் பத்திரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம்’ என, பதிவுத் துறை ஐ ஜி பிறப்பித்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு கல்லா கட்டும் பொள்ளாச்சி சார் பதிவாளர்!

தற்போதுள்ள பொள்ளாச்சி
துணை சார் பதிவாளர்

அசல் தாய்ப்பத்திரம் இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய, பதிவுத் துறை தடை விதித்துஉள்ளது.

அசல் தாய் பத்திரம் கட்டாயம்

ஆவணங்கள் முழுமையாக இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக மாவட்டங்களில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாகவே அனைத்துவிதமான பத்திரப்பதிவு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பத்திரப்பதிவுகளை கண்காணிக்க 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.



கோவை பதிவு மண்டலத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோபி பகுதிகள் அடங்கியிருக்கிறது. இந்த மாவட்ட எல்லைக்குள் 56 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது .
கோவை மண்டலத்தில் உள்ள பத்திர பதிவில் மட்டும் ஒரு மாதத்தில் குறைந்தது 25 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடப்பதாகவும் அரசுக்கு மட்டும் ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும் என்ற தகவல் வந்துள்ளது.
கோவை மாவட்டத்தில்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இதுவரை நிலம் அபகரிப்பு, முறைகேடாக வேறு நபர்களுக்கு பத்திரம் பதிவு செய்தது தொடர்பாக 690 புகார்கள் பெறப்பட்டன. இந்த புகார்களின் மீது விசாரணை நடக்கிறது. கடந்த 2018ம் ஆண்டில் இருந்து நிலம் அபகரிப்பு தொடர்பாக 1696 புகார்கள் பெறப்பட்டிருந்தது
இதில், பல்வேறு விசாரணைக்கு பின்னர் பெரும்பாலான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. பத்திரங்களில் இருந்த வில்லங்க விவகார காரணங்களுக்காக 269 பத்திரங்கள் பதிவு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சார் பதிவாளர்கள் பத்திர பதிவின் போது கவனமாக இருக்கவேண்டும். தடங்கல் மனுக்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மோசடியாக பத்திரங்களை பதிவு செய்யக்கூடாது.
கோவை மண்டலத்தில் பத்திர பதிவுகளில் தவறு நடக்காமல் தடுக்க தேவையான கண்காணிப்பு, தணிக்கை ஆய்வு நடக்கிறது. கடந்த காலங்களில் பத்திர பதிவுகளில் நடந்த விதிமுறை மீறல்களை கண்டறிய விரைவில் குழு அமைக்கப்படும். இந்த குழுவினர் மூலமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்
அப்படி மீறி தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை மண்டல துணைப் பதிவாளர் சுவாமிநாதன் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம்


ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக மாறி பணம் கொடுத்தால் போதும் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு அசல் தாய் பத்திரம் ( parent document) மற்றும் மூலப்பத்திரம் எதுவுமே இல்லாமல் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் பத்திரப் பதிவு செய்து கொடுக்க 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக விதிகள் மீறி முறைகேடாக சார் பதிவாளர் அருணா பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

இது சம்பந்தமாக களத்தில் விசாரித்த போது
கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கஸ்பா பொள்ளாச்சி டவுன் மகாலிங்கபுரம் அஞ்சல் காமராஜர் வீதி கதவு எண் 5/3 முகவரியில் வசித்து வரும் திருவேங்கடம்( S/O ராமசாமி ) அவர்களின் மனைவி நாகரத்தினம் தன்னுடைய மகள் காஞ்சனா தேவிக்கு
தற்போது முகவரி உள்ள முகவரி
(கதவு எண்.1/58
பெரிய போது கிராமம்
மாரப்ப கவுண்டன் புதூர்
ஆனைமலை வட்டம்
கோயமுத்தூர் மாவட்டம்.)
தானமாக இரண்டு ஏக்கர் நிலத்தை தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.


அதாவது 1970 இல் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் புத்தகம் ஒன்று 970 பக்கத்தில் ஒன்று முதல் பத்து வரை உள்ள 725 ஆம் வகையில் பதிவு செய்யப்பட்ட பட்டா எண் 821 ( 3 ஏக்கர் 25 )செட்டில்மெண்ட் பத்திரப்பதிவுப்படி சுவர்ஜிதம் பெற்று அனுபவத்தில் வந்த நிலையில் விற்பனை செய்துள்ள ஒரு ஏக்கர் 25 சென்ட் சொத்துக்களை தவிர கீழ்க்கண்ட சொத்துக்களை (ஹெக்டேர் 81 )
2 ஏக்கர் தான செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்து பத்திரப்பதிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஆனால் சில வருடங்களுக்கு ஆ சங்கம்பாளையம் கிராம எல்லைக்குட்பட்ட725/1970 சொத்தின் ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இதுவரை அது சம்பந்தமாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான பதில் வராத நிலையில் பொள்ளாச்சி சார் பதிவு அலுவலகம் முத்தரையிட்ட நகல் மற்றும் பப்ளிக் நோட்டரி பிரமாண பத்திரத்தையும் வைத்து தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்து தரும்படி ஒரு மனு கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் 10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு பொள்ளாச்சி சார் பதிவாளர் அருணா துணை சார்பதிவாளர்
சாமிநாதன் இரண்டு பேரும் அசல் தாய் பத்திரம் இல்லாமல் தான செட்டில்மெண்ட் பத்திரம் செய்து கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்த சொத்தில் ஏற்கனவே 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை விற்று பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த நிலத்திற்கான தாய் பத்திரம் மூலப்பத்திரம் எதுவும் இல்லாததால் இது நாள் வரை பத்திரப்பதிவு செய்யாமல் தற்போது நிலுவையில் இருப்பதாகவும் மீதமுள்ள இரண்டு ஏக்கரை நூதன முறையில் தன் மகளுக்கு தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்து தன் மகள் பெயரில் இருந்து மற்றொரு நபருக்கு விலை பேசி விற்று முன்பணம் பெற்றுக்கொண்டு இன்னும் சில தினங்களில் பத்திரப்பதிவு செய்யப் போவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் விற்ற ஒரு ஏக்கர் 70 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அதற்கான ஆவணங்கள் இல்லாமல் இருந்தபோது நூதன முறையில் பொள்ளாச்சி சார் பதிவாளர் அவர்கள் 10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் பதிவு செய்து கொடுத்து அதிகார துஷ்புரையாகம் செய்து மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
ஆகவே பத்திரப்பதிவு ஐஜி அவர்கள் விசாரணை செய்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து மோசடி செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!
பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்!
நிலத் தகராறு,
பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு,
உங்கள் நண்பர்களுக்குப் பரப்புங்கள்.

(Land Disputes)

1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது
பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் – W. P. No – 24839/2014, dt – 16.7.2018
W. P. No – 491/2012, dt – 4.6.2014
W. P. No – 16294/2012, dt – 4.4.2014

2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால்,
அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்.
மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No – 313 & 314/2008, dt – 11.2.2019

3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,
ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
தவறு செய்யும் விஏஓக்களை
பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No – 13916/2019, dt – 1.7.2019

4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை
வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது.
உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No – 18489/2009, dt – 1.7.2011

5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No – 84/2006, dt – 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்

6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No – 2060/2001, dt – 2.11.2012
S. A. No – 1715/1989, dt – 25.6.2002
W. P. No – 16294/2012, dt – 3.4.2014

7. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு
பட்டா வழங்க வேண்டும்.

Madras High Court
W. P. No – 18754, 20304, 2613/2005
DT – 4.11.2013
A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 – 3 – CTC – 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 – 2 – CTC – 315)

8. பட்டா பெயர் மாற்றம் செய்ய
நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும்.
W. P. No – 19428/2020, dt – 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)

9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை
பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No – 11279/2015, dt – 22.3.2019, madurai high court

10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா்
பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

T. R. தினகரன் Vs RDO (2012 – 3 – CTC – 823)
அம்சவேணி Vs DRO மதுரை. W. P No – 16294/2012…

இந்தப் பதிவை யார் எழுதியது எனத் தெரியவில்லை.
இன்று காலையில் கண்ணில்பட்டது.
அவருக்கு நம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய, இதுபோன்ற தீர்ப்புகள் குறிப்பிடத் தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button