கொடி கட்டி பறக்கும் லஞ்சம் ஊழல் முறைகேடு! மோட்டார் வாகன ஆய்வாளர் இல்லாமல் வாகனங்களுக்கு சட்டவிரோதமாக உரிமம் புதுப்பித்து அனுப்பும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக உதவியாளரின் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் உயர் அதிகாரிகள்!




புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில்

மோட்டார் வாகன ஆய்வாளராக சிவக்குமார் இருக்கிறார். இவர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் அலுவலகத்திற்கு எப்போது வருவார் என்றும் எப்போது போவார் என்றும் யாருக்கும் தெரியாது. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரும் சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் ஆறு சக்கர வாகனம் என அனைத்து வாகனங்களின் உரிமம் மற்றும் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமம் மற்றும் அனைத்து பணிகளையும் இடைத்தரகர்களை வைத்து அலுவலக உதவியாளராக இருக்கும் கார்த்திக் என்பவர்தான் கவனித்துக் கொள்கிறார்.
இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கார்த்திக் இல்லாமல் எந்த ஒரு பணியும் நடக்காது என ஆணித்தரமாக குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.



ஒரு வாடகை வாகனத்தில் உரிமம் புதுப்பிக்க,
1 .படிவம் 25
பதிவுச் சான்றிதழ்
2.ஆர்.சி கையேடு
3. வாகனத்தில் உள்ள பிரேக் மற்றும் கிளர்ச்சி,ஹெட் லைட் இன்டிகேட்டர் , இன்ஜினிலிருந்து வரும் புகையின் தன்மை மற்றும் வாகனத்தின் உறுதித்தன்மை அனைத்தும் சரி செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
4.பி.யூ.சி.
புதுப்பிக்கப்பட்ட சாலை வரி செலுத்துதலுக்கான சான்று
5.உரிமையாளரின் கையொப்ப அடையாளம்
6.எஞ்சின் மற்றும் சேசிஸ் பென்சில் அச்சு
7.வாகன காப்பீட்டு சான்றிதழ்
8.படிவம் 60 அல்லது 61
பான் கார்டு நகல்
முகவரிச் சான்று இவை அனைத்தும் சரியாக இருக்கிறதா!?காலாவதி தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் புதுப்பித்தல் செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 81 இன் வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் செலுத்த வேண்டிய வாகன வரிகள் மற்றும் அபராதங்களையும் செலுத்தப்பட்டுள்ளதா என மோட்டார் வாகன ஆய்வாளர் சரிபார்த்த பின்பு தான் வாகனங்களுக்கு உரிமம் புதுப்பிக்க வேண்டும்.
ஆனால் மோட்டார் வாகன சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உரிமம் புதுப்பிக்க வரும் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் ஆறு சக்கர வாகனம் எட்டு சக்கர வாகனம் 16 சக்கர வாகனம் என வரும் வாகனங்களுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து எந்த ஒரு ஆவணங்களையும் சரிபார்க்காமல் இடைத்தரகர்கள் மூலம் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக உள்ள கார்த்திக் என்பவரை வைத்து ஒரு வாகனத்துக்கு சுமார் 10,000 முதல் 25 ஆயிரம் வரை என மாதம் சுமார் ஐந்து லட்சம் வரை லஞ்சமாக வசூல் செய்யும் பணத்தில் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகிய இருவருக்கும் மனம் நோகாமல் வசூல் செய்த லஞ்சப் பணத்தில் சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் பிரித்துக் கொடுத்து இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிழல் மோட்டார் வாகன ஆய்வாளராக கார்த்திக் வலம் வருகிறார் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எது எப்படியோ சமோட்டார் வாகன ஆய்வாளர் இல்லாமல் வாகனங்களுக்கு உரிமம் புதுப்பித்து அனுப்பும் சட்டவிரோத செயலை செய்து வரும் விழுப்புரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உதவியாளர் கார்த்திக் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகிய மூன்று பேர் மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.