50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு தூது விட்ட மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள்!
பணியிட மாற்றம் நடவடிக்கை வெரும் கண்துடைப்பு நாடகமா!??
குமுறும் வருவாய்த்துறை வட்டாரம்!!நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கடந்த 04 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ் ,இப்ராகிம் இரண்டு பேருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொறி வைத்து காத்திருந்த கடைசி நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகள் மூலமாக தகவலை தெரிந்துக் கொண்ட இரண்டுபேரும் அலுவலகத்திலிருந்து தப்பித்து விட்டார்களா என்றக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது!
மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த ஜெகஜீவன் என்பவர்
T. வாடிப்பட்டி அருகே பெட்ரோல் பங்க் வைக்க நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலம் விவசாயம் நிலமாக இருப்பதால் வணிக வளாக பயன்பாட்டுக்கு தேவை என வகை செய்ய வேண்டும். இதற்காக தடையில்லா சான்று கேட்டு ஜெக ஜீவன் மதுரை மாவட்ட ஆட்சியர்க்கு விண்ணப்பித்திருந்தார்.
இதை மோப்பமிட்ட மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் சுரேஷ் மற்றும் இப்ராகிம் இருவரும் ஆட்சியரின் ஓட்டுநர் திருப்பதி மூலம், சோழவந்தானைச் சேர்ந்த ஜெகஜீவனிடம் 50 இலட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் தடையில்லா சான்று வாங்க முடியும் இல்லை என்றால் நீங்கள் எங்கு போனாலும் தடையில்லா சான்று வாங்க முடியாது என்று பேசியுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெக ஜீவன் லஞ்சம் கேட்டு பேசியதை செல்போனில் பதிவு செய்து
ஆடியோ ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார் .
ஜெகஜீவனின் செல்போன் எண்ணில் இருந்து சுரேஷுக்குப் போன் செய்து, லஞ்சம் குறித்து பேசவைத்து ஆடியோவை பதிவு செய்த பின் லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஜெகஜீவனிடம் மை தடவிய பணத்தைக் கொடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஓர் இடத்தில் நிற்க சொல்லி இருந்தனர்
பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதை தெரிந்துக் கொண்ட சுரேஷ், இப்ராகிம் இரண்டு உதவியாளர்களும் அலுவலகத்திலிருந்து தப்பித்து வெளியேறிவிட்டார்.
இதையறிந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றதும்
உடனே மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் இரண்டு நேர்முக உதவியாளர்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டு சுரேஷ்பாபு மதுரை கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும், இப்ராஹிம் மதுரை வடக்கு தனிவட்டாட்சியர் (முத்திரைத் தாள்) அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டனர். ஓட்டுனர் திருப்பதியை காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவிடப் பட்டுள்ளது . இந்த சம்பவத்தால் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் அனைவருக்கும் அலாட் ஆகி உள்ளதாக தகவல்!
மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்குமார் வசம் இலஞ்சம் கேட்டு பேசிய ஆடியோ ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக பணி நீக்கம் செய்திருக்க வேண்டும்.
வேறு துறையில் இலஞ்சம் கேட்கும் அரசு ஊழியரின் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வந்தாலே உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு ஊழியரை அந்தத் துறை அதிகாரிகள் உடனே சஸ்பெண்ட் செய்து வரும் நிலையில்
சுரேஷ்பாபு மற்றும் இப்ராஹிம் இருவரும் சொகுசாக அவரவர் குடியிருக்கும் வீடுகளுக்கு அருகில் அவர்கள் ஏற்கனவே பணி புரிந்த இடத்திற்கு பணிமாற்றம் செய்திருப்பது மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது இல்லாமால் தற்காலிக பணியிட நீக்கம் செய்யாமல் இருக்க இதில் யாரோ ஒரு முக்கியப் புள்ளியின் தலையீடு இன்றி இருக்காது எனன்றால் கடந்த 15 வருடங்களாக யார் மதுரை மாவட்ட ஆட்சியாளர் சுரேஷ் தான் தனி உதவியாளராக பணி செய்து வந்துள்ளார் என்றும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் என்றப்பதவியில் அமர்ந்து நடத்திய தில்லுமுல்லுகள் ஏறாளாமாம். குறிப்பாக அன்சுல் மிஸ்ரா மாவட்ட ஆட்சியராக இருந்த போது, அவரிடம் நேர்மையான ஊழியர்கள், அலுவலர்கள் மீது பொய்யான செய்திகளைத் தெரிவித்து பழி வாங்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம் இந்த சுரேஷ்!
வணிகப் பயன்பாட்டுக்கு நன்செய் நிலங்களை புன்செய் நிலங்களாக வகைப்படுத்தி தடையில்லாச்சான்றுகள் பெற்றுத்தர இலட்சக்கணக்கில் பேரம் பேசி வசூல் வேட்டை நடத்தி வந்தவர்கள்.
பணியமைப்பு பிரிவிலிருந்து வருவாய்த்துறை ஊழியர்கள், அலுவலர்கள் பணிமாற்றம் குறித்த கோப்புகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் போது, இரகசியம் காக்கப்படுமாம்.
ஆனால், அந்த கோப்புகளில் உள்ள விவரங்களை அறிந்து, மாவட்ட ஆட்சியர்களிடம் தவறான தகவல்கள் தந்து, அதன்மூலம் வேறு நபர்களை முக்கிய இடங்களில் பணியமர்த்திட வைத்து ஆதாயம் பார்த்து வந்தவர்கள் தான் இவர்களாம்.
மாவட்ட ஆட்சியர் தனது பதவிக்காலத்தில் தடையில்லாச் சான்றுகள் வழங்கிய கோப்புகள் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கும், வருவாய்த்துறை ஊழியர்கள் மேற்கண்ட இரண்டு நபர்களையும் சஸ்பெண்ட் செய்யாமல் பணியிடமாற்றம் மட்டும் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, மதுரை மாவட்ட ஆட்சியரின் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் மீது எடுக்க வேண்டுமென்று ஒட்டு மொத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்..
நேர்மையான, ஊழல் இல்லாத சமுதாயத்தை கட்டியெழுப்ப, சமூகத்தின் அனைத்து பிரிவுகளும், குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கஇந்த விழிப்புணர்வு நிச்சயம் உதவும்.
ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறைகள்தான் ஒரு தேசத்தின் அடித்தளமாக உள்ளன. ஒவ்வொரு தனிநபர் மற்றும் அமைப்புகள் நேர்மையாக இருக்கும் போது நாட்டில் வளர்ச்சி ஏற்படும். ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு, சட்டங்களை உருவாக்கினால் மட்டும் போதாது.
தனி மனிதனுக்குள் ஒழுக்கநெறிகளை ஆழமாக வேரூன்ற வேண்டும். எனவே, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், அனைத்து மத்திய அரசு துறைகளையும் இணைத்து, பொதுமக்களிடம் நெறிமுறைகளை வளர்க்க தேவையான மேம்பாட்டு நடவடிக்கை செய்ய வேண்டும்.
துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், லஞ்ச தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த கையேடுகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஊழலின் மோசமான விளைவுகள் பற்றி விரிவுரைகள், குழுவிவாதங்கள், கருத்தரங்குகள், வினாடிவினா, கட்டுரை எழுதுதல், சொற்பொழிவு, கார்ட்டூன் மற்றும் சுவரொட்டி போட்டிகள் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வு செய்ய வேண்டும்.