நகராட்சி

பழனியில் 71 லட்சம் ரூபாய் வரியை கட்டாமல்  புதிதாக நாமக்கலில் மருத்துவமனை திறப்பு விழா நடத்திய ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சந்திரலேகா! பழனி மருத்துவமனையை ஜப்தி செய்து பொருட்களை ஏற்றுச் சென்ற பழனி நகராட்சி அதிகாரிகள்


தமிழக முழுவதும்  பல்வேறு  நகரங்களில் செயல்பட்டு வரும்

ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்திற்கு பழனி நகராட்சி  சார்பில் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது‌.மேலும்

ஜப்தி செய்ய பழனி நகராட்சி வாகனம் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை தலைமையிடமாக கொண்ட பிரபல ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. சென்னை,கோவை,மதுரை உள்ளிட்ட பல  நகரங்களிலும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. 

ஐஸ்வர்யா கருத்தரித்தல் மைய நிறுவனர் டாக்டர் சந்திரலேகா

ஜஸ்வர்யா கருத்தரித்தல் மையத்திற்கு சொந்தமாக பழனியில் நர்சிங் கல்லூரி உள்பட 12நிறுவனங்கள் செயல்பட்டு  வருகின்றன.  இந்த நிறுவனங்களுக்கு பழனி நகராட்சிக்கு செலுத்தவேண்டிய   குடிநீர் வரி, சொத்துவரி ஆகியவை நீண்ட நாட்களாக செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதன்காரணமாக  கடந்த 2017ம் ஆண்டுமுதல் 2024-2025ம் நிதியாண்டு வரையில்

71லட்சம் ரூபாய் வரிபாக்கி வைத்துள்ளனர். இதையடுத்து வரி பாக்கியை செலுத்த வலியுறுத்தி பழனி நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாமல்   அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 2024-25ம் ஆண்டு நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில் நகராட்சிக்கு சொலுத்தவேண்டிய 71லட்சம் ரூபாய் வரிபாக்கியை செலுத்தாத மருத்துவமனை நிய்வாகத்திற்கு

நகராட்சி  அதிகாரிகள் ஐப்தி நோட்டிஸ் வழங்கப்பட்டது. மருத்துவமனை அலுவலகத்திற்கு நகராட்சி பொறியாளர் ராஜவேல் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள்  நேரில் சென்று ஐப்தி நோட்டீசை வழங்கினர்.  இதுவரை வரி செலுத்தாதால் அந்நிறுவனத்தின் சொத்துகளை ஜப்தி செய்ய நகராட்சி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் வழங்கி,  ஜப்தி செய்ய நகராட்சி வாகனம், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருடன் மருத்துவமனை முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்நது மருத்துவமனை நிர்வாகம் 71லட்சம் ரூபாய் வரி பாக்கியில் பாதியை இன்றும், மீதித்தொகையை அடுத்த வாரமும்  செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தனர். ஆனால் நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால் முழுத் தொகையையும் செலுத்துமாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிரபல மருத்துவமனையானது நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரியை செலுத்தாமல் கடந்த ஏழு ஆண்டுகளாக 71 லட்சம் ரூபாய் வரி பாக்கி செலுத்தாத நிலையில்  

நாமக்கலில் புது மருத்துவமனை திறப்பு விழா நடந்துள்ளது. இந்தத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்  ராமலிங்கம் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்

என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button