லஞ்ச ஒழிப்புத் துறை

பட்டா மாறுதலுக்கு 7000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்த மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!



மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா கச்சிராயன்பட்டி சேர்ந்த ராணுவ வீரர் மலைச்செல்வம் கோட்டைப்பட்டி கிராமம் (சர்வேNo.314/4A,B,C,D ) நிலத்திற்கான பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்து பல நாட்கள் ஆனதால்

கச்சிராயன்பட்டி கிராம நிர்வாக அலுவலராக இருக்கும் துரைப்பாண்டியிடம் (வயது46  ) தந்தை பெயர் மந்தி ராணுவ வீரர்
விரைவில்  பட்டா மாறுதல் செய்து தர கேட்டுள்ளார் அதற்கு

கச்சிராயன்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பாக்கியலட்சுமி   7 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே விஏஓ பட்டா மாற்றிக் கொடுப்பார் எனக் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராணுவ வீரர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ராணுவ வீரரிடம் 15/04/2025  மதியம் ஒரு மணி அளவில் ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் துரைப்பாண்டி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் இருக்கும்போது கொடுக்கும்படி அனுப்பிவிட்டு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மறைந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர். ராணுவ வீரர் மலைச்செல்வம் ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் நோட்டை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பாக்கியலட்சுமி ஆகியோரிடம் கொடுத்துள்ளார். உடனே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் துரைப்பாண்டி மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பாக்கியலட்சுமி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டம்  வருவாய்த் துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. எது எப்படியோ வருவாய்த் துறையில் உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு வரும் நிகழ்வு சாமானிய ஏழை எளிய மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் உள்ள நம்பிக்கையை இழந்து விட்டது என்பதுதான் நிதர்சனம். வருவாய்த்துறை அமைச்சர் மற்றும்

மதுரைமாவட்ட ஆட்சியர் அவர்கள்  வருவாய்த் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு கடிவாளம் போடுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்

Related Articles

Back to top button