மாவட்டச் செய்திகள்

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக  (சுமார் 60 டன்) வரை ஒரு டாரஸ் லாரி என தினம் தோறும் 100க்கும்    மேற்பட்ட டாரஸ் லாரிகளில் தொடர்ந்து  கனிம வளம் கடத்தல்!  கண் இருந்தும் பார்வை  செயல் இழந்தவர்கள் போல்  தேனி மாவட்ட ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தின் அவலம்!


கனரக லாரிகளில் சரக்குகள் கொண்டு செல்ல, குறிப்பிட்ட அளவு மற்றும் எடை வரம்புகள் உள்ளன. பொதுவாக, லாரிகளின் நீளம், அகலம் மற்றும் உயரத்திற்கு சட்டப்பூர்வ வரம்புகள் உள்ளன. மேலும், சரக்கின் எடையும் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும். லாரிகளின் அகலம் பொதுவாக 2.6 மீட்டர் வரை இருக்கும்.லாரிகளின் உயரம் பொதுவாக 4.3 மீட்டர் முதல் 4.7 மீட்டர் வரை இருக்கும்.

தானியங்கள், கட்டுமானப் பொருட்கள், ரசாயனங்கள், உலோக பாகங்கள், இயந்திரக் கூறுகள் மற்றும் மூலப்பொருட்கள் போன்ற தொழில்துறை பொருட்களை எடுத்துச் செல்ல
32–40 அடி 14-சக்கர வாகனம் (21–31 டன் கொள்ளளவு)
20–32 அடி 10-சக்கர வாகனம் (10–25 டன் கொள்ளளவு)
24–32 அடி 12-சக்கர வாகனம் (16–25 டன் கொள்ளளவு)

கனரக லாரிகளில் சரக்குகளை கொண்டு செல்ல, குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் அனுமதிகள் தேவை.
சாலை போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவுகள் மற்றும் எடையை விட அதிகமாக சரக்குகளை கொண்டு சென்றால், அபராதம் விதிக்கப்படும்.
சரக்குகளை கொண்டு செல்லும் முன், லாரியின் தகுதி மற்றும் அனுமதிச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும்.


தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமாக (சுமார் 50 டன்)வரை கனிம வளம்  சுமார் தினம்தோறும் 100 டாரஸ் லாரிகளில் கடத்தி செல்லப்படுகிறது
இதன் மதிப்பு பல 100 கோடி ரூபாய் இருக்கும் என்கின்றனர்  இயற்கை ஆர்வாளர்கள்!


தேனி மாவட்டத்தில் மாவட்டத்தில் மட்டும் கல்குவாரி கிரஷர் எம் சாண்ட் தயாரிக்கும் கிரசர்கள் என சுமார் 60க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்குவதாக தகவல் வந்துள்ளது.  இதில் 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக மறைமுகமாக இயங்கி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இயற்கை வளங்களை அழித்து  கனிம வளங்களை வெட்டி எடுத்து அருகில் உள்ள  கேரளாவிற்கு அனுமதியின்றி  சட்டத்திற்கு புறம்பான வகையில் தினந்தோறும் கம்பம் மெட்டு வழியாக நூற்றிற்கும் மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகளில்  கடத்திக் கொண்டு கொண்டு செல்லப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவருக்கும் சமூக ஆர்வலர்கள் தினந்தோறும் புகார் கொடுத்து வருவதும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன்
தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் குறிப்பாக
பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் உள்ள பெரியகுளம்,போடிநாயக்கனூர், கொட்டக்குடி ஆறு, சின்னமனூர் கோடாங்கி பட்டி பகுதி, தோப்புபட்டி, எம்.சுபுளாபுரம் ,திருமலாபுரம் , ஆண்டிபட்டி, மரிகுண்டு சிலமலை, கரட்டுப் பட்டி, ,குள்ளபுரம், வைகை அணை ஆகிய பகுதிகளில் உள்ள 39 மண் மற்றும் கல் குவாரிகளில் சட்ட விரோதமாக கனிமவள கொள்ளை  சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இந்த கனிமவள கொள்ளை சம்பவங்களில் சில மணல் மாபியா கும்பல்  ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக
தேனி மாவட்ட ஆட்சி நிர்வாக அதிகாரிகள் கண்ணிருந்தும் பார்வை செயலிழந்து போனது போல் நடந்து கொள்வதால்  அரசிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சட்ட விரோதமாக நடக்கும் கனிம வள கொள்ளைக்கு தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம் கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம்.
வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தமிழக கேரளா எல்லையில் உள்ள கம்பம் மெட்டு சோதனைச் சாவடி காவலர்கள் ஆகியோரின் உடந்தையோடும், உதவியோடும், சட்ட விரோதமாக  டாரஸ் கனரக வாகனங்கள் (லாரிகள்)  மூலம் கேரள மாநிலத்திற்கு கனிம வளம் கடத்திச் செல்வதாக சமூக ஆர்வலர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ
தேனி மாவட்டத்தில் உள்ள இயற்கை சூழ்ந்த மலை அடிவாரங்களில் 

கோப்பு படம்

தடை செய்யப்பட்ட சக்தி மிகுந்த வெடிமருந்துகள் மூலம் மற்றும் 

இராட்சத இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் கடத்தப்படுவது தேனி மாவட்ட ஆட்சியருக்கும் கனிமவள உதவி இயக்குனருக்கும் வருவாய்துறை அதிகாரிகளுக்கும் தெரியாமல் போவது எப்படி என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி  எழுப்பி உள்ளனர்.
எந்த ஒரு புகார் வந்தாலும் அந்தப் புகார் மீது நேர்மையான முறையில் கள ஆய்வு செய்து அதை தடுத்து நிறுத்தி நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த தவறுவது மட்டும் இல்லாமல்  தங்களது வருவாயை மட்டும் பெருக்கி சுயநலவாதிகளாக  இருந்து கொண்டு அரசிற்கு  பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில்
தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் உயர் பதவியில் இருக்கும் மற்றும் கனிமவளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு சில கருப்பு ஆடுகள்  செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக  பேசப்பட்டும் வரும் நிலையில்
தேனி மாவட்டத்தில் இருந்து கனிம வளம் கேரளத்துக்கு கடத்தப்படும் நிலையில், ஒரு சில லாரிகளை மட்டும் பிடித்து கனிம வளம் கடத்தலை முற்றிலும் தடுத்து நிறுத்தி விட்டதாக காவல்துறையும், மாவட்ட ஆட்சி நிர்வாகமும் கனிமவளத்துறை அதிகாரிகளும் கூறிக் கொள்கின்றனர். ஆனால், கடத்தல் தொடர்கிறது. அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்துமே கனிம வளக் கடத்தல்காரர்களுக்கு சாதகமாகவே இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கனரக டாரஸ் லாரிகள் மூலம் அளவுக்கு அதிகமாக கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த

தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐஏஎஸ்

தேனி மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ரஞ்சித் சிங் ஐஏஎஸ் அவர்களின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம் .

Related Articles

Back to top button