அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் கோழிப்பண்ணை! சுகாதாரக் கேடால் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் ! 5 லட்சம் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காத உடுமலை வருவாய்த்துறை அதிகாரிகள் !நடவடிக்கை எடுப்பாரா
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா குப்பம்பாளையம் பஞ்சாயத்து வெள்ளை செட்டிபாளையம் என்ற கிராமத்தில் *நத்தம் பட்டா 142 (புல எண்.134/16)

“அம்மன் பார்ம்ஸ்” தாய் கோழி பண்ணையானது
கிராம குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
அதன் அருகாமையில் அங்கன்வாடி மற்றும் குடிநீர் தொட்டி மற்றும் கோயில்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்
குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும்
தாய்கோழி பண்ணையால் பல தொற்று நோய்கள் ஏற்பட்டு உள்ளன*
இது சம்பந்தமாக சம்பந்தபட்ட அரசின் பல்வேறு துறைகளுக்கு மனுக்கள் அனுப்பியும்,
கடந்த 11.08.2025 அன்று உடுமலை வருகைதந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பொதுமக்கள் சார்பில் நேரில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டப்பட்டது.
மற்றும் கடந்த 15.08.2025 மற்றும் 02.10.2025 கிராம சபை கூட்டங்களில் மேற்கண்ட பண்ணையை அகற்ற வேண்டி தீர்மானம் நிறைவேற்றியும்
மேலும் அரசின் 01.08.2025 அன்று நடந்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்திலும் தனித்தனியாக மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டப்பட்டது.
அதற்கு அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளை அகற்ற 30 நாட்கள் காலஅவகாசம் கொடுத்து அறிவிப்பு கொடுத்திருந்தனர் , ஆனால் காலஅவகாசம் முடிந்து 75 நாட்கள் கடந்தும்
இதுநாள் வரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் பெரியபட்டி கிராமம் புல எண் 341 மற்றும் 350 அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை 11.08.2025 அன்று அரசு அதிகாரிகள் சார்பில் ஆக்கிரமிப்பு உறுதி செய்தும் இதுநாள் வரையிலும் கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
ஆகவே இவற்றை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும்

குப்பம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்து கொண்டனர்.
மேலும் மேற்கண்ட தாய்கோழி பண்ணையை அகற்றாவிட்டால் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என

குப்பம்பாளையம் கிராம பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எது எப்படியோ சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் கோழிப்பண்ணையால் பொதுமக்கள் தொற்று நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று அதில் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர்
ஆகவே கிராம பொதுமக்கள் வருங்கால நலன் கருதி கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானத்தில் கோழிப்பண்ணையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உடனடியாக தீர்வு காண வேண்டும் அது மட்டும் இல்லாமல் சுகாதார கேடு விளைவித்து வரும் கோழி பண்ணையை அகற்றாமல் காலதாமதம் ஆக்கி வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் மக்கள் நலன் கருதி உடனடியாக கோழிப்பண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை.




