வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து பற்றி எரியும் வீடியோ ! வாடிப்பட்டியில் பரபரப்பு!

வாடிப்பட்டியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் மின் கம்பி உரசி தீப்பிடித்து எரிந்ததால் அசம்பாவிதம் நடக்கும் முன்பு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த வாடிப்பட்டி தீயணைப்பு துறையினர்!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு வைக்கோல் ஏற்றி வந்த லாரி வாடிப்பட்டி எம்எல்ஏ அலுவலகம் கால்நடை மருத்துவமனை அருகே 4.30 மணி அளவில் வந்தபோது லாரியில் ஏற்றி வந்த வைக்கோல் மின்கம்பங்களில் மேலே சென்ற மின் கம்பியில் உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு வைக்கோலில் தீ பற்றி எரிய தொடங்கியது.
லாரியில் இருந்த ஒருவர் கீழே குதித்து ஓடிவிட்டார் .உடனே லாரி டிரைவர் லாரியை விராலிப்பட்டி செல்லும் சாலையில் தாதப்ப நாயக்கன்பட்டி அருகே நிறுத்தினார்.

அதற்குள் தீ மல மலவென எறிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
அக்கம் பக்கத்தினர் உடனே வாடிப்பட்டி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு)ஆல்பர்ட் பிரான்சிஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளிருந்த வைக் கோல்களை அகற்றி பெரிய அசம்பாவிதம் நடக்காமல் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து சம்பந்தமாக வாடிப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எது எப்படியோ லாரிகளில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றிக்கொண்டு வரும்போது மின் கம்பங்களில் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்லும் பாதைகளில் செல்லாமல் இருந்தாலே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கலாம். அதுமட்டுமில்லாமல் அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றி வரும் லாரிகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் நிறுத்தி அந்த வாகனத்தை பறிமுதல் செய்து வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கலாம் .என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது! பொறுத்திருந்து பார்ப்போம் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை.