தேர்தல் களம்

அதிமுக vs திமுக நேரடி போட்டி!  TVK கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பால்
சிக்கலில் சிக்கித் தவிக்கும் பிஎல்ஏ.ஜகநாத் மிஸ்ரா!?

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் ஒக்கலிக கவுடர், முக்குலத்தோர், பிள்ளைமார், இஸ்லாமியர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து ஜாதியினரும் பரவலாக உள்ளனர். கம்பம் தொகுதியில் கம்பம், சின்னமனூர் என இரண்டு நகராட்சிகளும், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், ஓடைப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் என ஏழு பேரூராட்சிகளும், பல ஊராட்சிகளும் இதில் அடங்குகிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன்

கம்பம் தொகுதியில் வேட்பாளராக நின்று இதுவரை 5 முறை வெற்றி பெற்றுள்ளார் என்ற பெருமையை தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணன் பெற்றுள்ளார்.இதில் ஒரே ஒரு முறை மட்டும் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வேட்பாளர் ஜக்கையன்


ஒருமுறை 2016 இல் அதிமுக ஜக்கையன் வெற்றி பெற்றுள்ளார்.
கம்பம் தொகுதியில் அதிமுக தி.மு.க. நேரடியாக போட்டியிடுவதால்
அதி.மு.க வேட்பாளர் ஜக்கையன் 2016 ல் பெற்ற வெற்றியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அதேபோல் ஆறாவது முறை வெற்றி பெற்ற ஆக வேண்டும் என களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் ராமகிருஷ்ணன்.


2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முதலாக களமிறங்கியுள்ள விஜய் கட்சியில்
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஒன்று அவர்கள் எவ்வளவு பணம் செலவழிப்பார்கள். இரண்டாவது, அவர்கள் உள்ளூரின் பிரபலமான சாதி கட்சியின்  பிரதிநிதியா பார்த்து தான் கொடுத்த கொடுக்கப்பட்டுள்ளதாக  த வெ க மீதான சமீபத்திய குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் இந்த இரண்டு எதிர்பார்ப்புகளின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கம்பம் தொகுதி டிTVK வேட்பாளர்பிஎல்ஏ.ஜகநாத் மிஸ்ரா

கம்பம் சட்டமன்ற தொகுதியில் 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை நிறுவனர்தான் இந்த பிஎல்ஏ.ஜகநாத் மிஸ்ரா  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு அக்கட்சி நிர்வாகிகளுக்கு இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் நான் ஜாதிக்காரன் …
கட்சிக்காரன் கிடையாது.. எம் எல் ஏ வை விட நான் பெரிய ஆளாகிவிட்டேன்..
இந்த நபர் தன்னை சாதி வெறியன் என்று வீர வசனம் பேசி அடையாளப்படுத்தியிருக்கிறார் அப்படியானவருக்கு கம்பம் தொகுதிக்கு விஜய் எப்படி சீட் கொடுக்கலாம்? என்று நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.


24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை நிறுவனர்தான் இந்த பிஎல்ஏ.ஜகநாத் மிஸ்ரா. இவர் சமீபத்தில் பேசிய வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. அதில், “நான் அரசியல் பேசுவதால், எம்எல்ஏ ஆக முயற்சிக்கிறேன் என்று பலரும் விமர்சிக்கிறார்கள். எனக்கு அப்படியான எண்ணம் கிடையாது. என் சமூகத்தை சேர்ந்தவரை எம்எல்ஏவாக அமர வைக்கவே ஆசைபடுகிறேன்”
என பேசும் வீடியோ இணையத்தில் வைரலானாலும், அதே நேரத்தில் உள்ளூர் நிர்வாகிகளின் எதிர்ப்பும் பரவலாகப் பேசப்படுகிறது.



கம்பம் தொகுதி (தமிழக வெற்றிக் கழகம்) வேட்பாளராக ஜெகநாத் மிஸ்ரா அறிவிக்கப்பட்டதற்கு உள்ளூர் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். கட்சிக்காக களத்தில் இறங்கி போஸ்டர் ஒட்டி வேலை செய்தவர்களை கட்சி தலைமை கண்டுக்கொள்ளாமல், சாதியை வைத்து தன்னை அடையாளப்படுத்தியிருக்கும் நபரை ஏன் தவெக தலைமை, எம்எல்ஏ வேட்பாளராக அறிவித்தது? என்று கேள்வி எழுப்பி, கம்பம் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜகநாத் மிஸ்ராவுக்கு எதிராகவும், தவெக தலைமைக்கு எதிராகவும் போராட்டத்தை நடத்தி வருவதால்
கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுவது தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக கம்பம் விஜய் கட்சி கம்பம் நகரச் செயலாளர் சதீஷ் மற்றும் மகளிர் அணி நிர்வாகி பிரபா கூறுகையில் கம்பம் தொகுதி வேட்பாளராக சுபாஷ் அவர்களை முன்னிறுத்தி கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்ததாகவும் திடீரென ஒரு ஒரு சமுதாயத்தைச் சார்ந்த சங்கத்தின் தலைவரை கம்பம் தொகுதி வேட்பாளராக எப்படி நிறுத்தலாம் என்றும் அனைத்து காரணமும் தேனி தெற்கு மாவட்ட லெப்ட் பாண்டி தான் காரணம் என்றும் தற்போது கம்பம் தொகுதி வேட்பாளராக நியமித்துள்ள ஜெகநாத் மிஸ்ராவை நீக்கிவிட்டு உடனடியாக சுபாஷை அறிவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக கூறினர்.
ஆகவே கம்பம் தொகுதியில்  விஜய் கட்சி  சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். அதற்குக் காரணம் இவர் சமீபத்தில்  அவருடைய சமுதாய கூட்டத்தில் பேசிய வீடியோ திரளானதும் ஒரு காரணமாகும்.

கம்பம் தொகுதியில் ஆறாவது முறையாக தி.மு.க சார்பில் இராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தொகுதியில் சட்டசபை தேர்தலில் அதிக முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Back to top button