காவல் செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன முறையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த பணத்தில் பினாமி பெயரில் அசையா சொத்துக்களை வாங்கி இரண்டாவது கணவருடன் உல்லாசமாக சுற்றி வரும் ( Cheating and Fraud)) உல்லாச ராணி !
நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் காவல்துறை!
நடந்தது என்ன !?

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் அண்ணாமலைபுரம் அஞ்சல்
கதவு எண் 130/40
பழைய பண்டிட் கோர்ஸ்
சி.கொத்தங்குடி முகவரியில்

  இரண்டாவது கணவர் அருண்குமார் உடன் வசித்து வரும் அஜந்தா
என்ற பெண்மணி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலால் துறையில் பணி செய்து வந்துள்ளார்.
இவருடைய முன்னாள் கணவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வந்துள்ளார். முன்னாள் கணவருடன் வேலை பார்த்து வந்த அருண்குமாருடன் அஜந்தாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியதும் கட்டிய கணவரை விவகாரத்து செய்துவிட்டு காதலித்த ஆசை நாயகன் அருண்குமாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ வேலை தேடும் படித்த இளைஞர்களை குறி வைத்து  அரசு வேலை வாங்கித் தருவதாக நூதன மோசடியில் இறங்கியுள்ளார். ஆனால் வேலை தேடும் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று அதற்காக ஒரு கமிஷன் தருவதாகவும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனக்குத் தெரிந்த நெருங்கிய உறவினர் மற்றும் நபர்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பி அந்த நபர்களும் தங்களுக்குத் தெரிந்த படித்த நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் 5 லட்சம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் என பல கோடி ரூபாய் வரை பணம் வாங்கி கொடுத்துள்ளனர். அந்தப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு கமிஷனாக வழங்கி உள்ளார் . ஆனால்மூன்று வருடங்கள் ஆகியும் பணம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தராமல் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
அதன் பின்னர் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த ஒரு சில நபர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் .
அந்த புகாரின் மீது அஜந்தா மீது பணம் மோசடி வழக்கு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடிவந்த நிலையில் அஜந்தா மற்றும் இரண்டாவது கணவர் அருண்குமார் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் இருவரையும் கைது செய்த  நிலையில்  அஜந்தாவை அரசு பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் இவருடைய வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும் வேலை வாங்கித் தருவதாக வாங்கிய பணத்திற்காக பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் அவர்களை வரவழைத்து வேலைக்காக வாங்கிய பணத்திற்கு குறிப்பிட்ட மாதத்திற்குள் வட்டியுடன் திருப்பி தருவதாக

100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்து  வாங்கிய பணத்திற்காக வட்டியுடன் சேர்த்து  (பணம் இல்லாத )வங்கி  காசோலை மற்றும் புரோ நோட் கொடுத்து அவர்களை நம்ப வைத்து அனுப்பி விடுவார் என்றும். அதன் பின்னர் அவர் சொன்ன தேதிக்கு காசோலையை வங்கியில் போட்டால் வங்கியில் பணம் இல்லை என காசோலை திருப்பி வந்தவுடன் பணம் கொடுத்த நபர்கள் இவர் மீது வழக்கறிஞர்களை வைத்து நோட்டீஸ் அனுப்பி இவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தால் அதற்கு இவர் நான் கடன் வாங்கவில்லை அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தான் பணம் வாங்கினேன் என ஒரு வழக்கறிஞரை வைத்து இவர் பதில் நோட்டீஸ் அனுப்புவார் . காவல்துறையினர் கேட்டால் அந்தப் பணத்தை ஒரு அரசியல்வாதியிடம்  கொடுத்தேன் ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்  என்று நூதன முறையில் பொய் சொல்லி ஏமாற்றி மோசடி செய்த பணத்தை வைத்து இரண்டாவது கணவருடன் ஊர் ஊராக உல்லாசமாக சுற்றி வருவதாகவும் பணம் கொடுத்தவர்கள் இவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால்  தினந்தோறும் ஒரு கோவிலில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டு அந்த போட்டோவை தன்னுடைய வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்  வைத்து தன்னை ஒரு ஆன்மீகவாதி போல் சித்தரித்து அவர்களை நம்ப வைத்து வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் கடன் வாங்கியதாக எழுதிக் கொடுத்த பத்திரம் மற்றும் காசோலை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களை அழைத்து வழக்கை வாபஸ் செய்தால் மட்டுமே நான் பணம் கொடுப்பேன் இல்லையென்றால் நான் கொடுக்க மாட்டேன் என பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர் நபர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டும் தோணியில் பேசி வருவதாகவும் இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் கொடுத்தால் அந்தப் புகாரின் மீது  நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினர் இவருக்கு உடந்தையாக இருப்பதாகவும் அதற்காக மோசடி செய்து வைத்துள்ள பல கோடி ரூபாய் பணத்தில் பல லட்சங்களை காவல்துறையினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அள்ளிக் கொடுத்துள்ளதாகவும் அதனால் தான் அஜந்தாவை காவல்துறையினர் கைது செய்யாமல் காப்பாற்றி வருவதாகவும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட நபர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இது சம்பந்தமாக அஜந்தாவை தொடர்பு கொண்டு பேசிய போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கியது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது என்னுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் நான் அந்த பணத்தை அவர்களுக்கு திருப்பி தர முடியவில்லை என்று நான் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுவேன் என்றும் கூறினார். ஆனால் அவர் கூறியது போல் யாருக்குமே இதுவரை எந்த பணமும் கொடுக்கவில்லை கொடுக்கப் போவதும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.


எது எப்படியோ
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுவது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான, கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகிய சட்டங்களின்படி இது ஒரு தீவிரமான ஏமாற்று மோசடி வேலை ஆங்கிலத்தில்
(Cheating and Fraud) என்பதாகும்.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து பல ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

அரசு வேலைக்கு என்று எவரும் தனியாகவோ அல்லது ரகசியமாகவோ பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தர முடியாது.

யாராவது வேலை வாங்கித் தருவதாகப் பணம் கேட்டால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்டக் குற்றப்பிரிவிலோ புகார் அளிக்க வேண்டும் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

உல்லாசமாக சுற்றிவரும் ஊழல் ராணி மீது காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Related Articles

Back to top button