மாவட்டச் செய்திகள்

வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை உதாசீனப்படுத்தி வரும் உத்தமபாளையம் வட்டாட்சியர்!
நடவடிக்கை எடுக்க தயங்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!?

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட

சின்ன ஓவுலாபுரம்

சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தன்னுடைய  உறவினரான நிலத்தின் பட்டாவில் லோகமணி என்பதற்கு பதிலாக லோக ராணி என பெயர் மாற்றம் மற்றும் நிலத்தின் மொத்த பரப்பளவு 824 சதுர மீட்டருக்கு பதிலாக 820 சதுர மீட்டர் என தவறாக பதிவாகியுள்ளது.
இது குறித்து மனுதாரர்

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராகிம்

உத்தமபாளையம் வருவாய்  வட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராகிம் அவர்களிடம் கடந்த 01.07.2026 அன்று மனு அளித்திருந்தார்.


அந்த மனு மீது விசாரணை நடத்திய உட் கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராகிம்  மனுவின் உண்மை நிலவரம் அறிந்து கடந்த 07.07.2026 தேதியிட்ட ஆணையில் சர்வே எண் 986/2A-ல் உரிமையாளர் பெயரை ‘லோக ராணி’ என்பதை ‘பா.லோக மணி’ என மாற்றவும் நிலத்தின் பர் மொத்த பரப்பளவு 7.90 சென்ட்டிலிருந்து 8 சென்ட் ஆக மாற்றியும், புதிய புல எண் 986/4-ல் உட்பிரிவு செய்து கொடுக்க

உத்தமபாளையம் வட்டாட்சியர் பாலமுருகன் & உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம்

உத்தமபாளையம் வட்டாட்சியராக இருக்கும் பாலமுருகனுக்கு உத்தரவிட்டார்.


ஆனால் உத்தமபாளையம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராகிம்  2690/2026/அ4., நாள்:07.07.2026 உத்தரவிட்ட ஆணையை வட்டாட்சியர் பாலமுருகன்  மற்றும்  வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் யாருமே  ஆர்டிஓ உத்தரவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உதாசீனப்படுத்தி வருவதாகவும் ஆர்டிஓ உத்தரவு பிறப்பித்து 40 நாட்களுக்கு மேலாகியும் வட்டாட்சியர் அலுவலகம் இன்னும் எந்த நடவடிக்கை எடுக்காமல்
மாறாக  பட்டா பெயர் மாற்றம் விவகாரம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மீது
புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த வருவாய் துறை அதிகாரிகள், “எங்க ஆளையே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம்  மாட்டி விடுவியா? நீ எப்படி உன்னுடைய ஆவணத்தை திருத்தி வாங்குறேன்னு பாப்போம்” என
ஒட்டுமொத்த வருவாய் துறையும் பட்டா பெயர் திருத்தம் மற்றும் பட்டாவில் அளவு குறைபாடு திருத்தம் செய்திட மனுதாரரை  தினந்தோறும் வரவழைத்து  திருப்பி அனுப்பி விடுவதை வாடிக்கையாக வைத்துக்கொண்டு
கடந்த ஒரு மாதத்திற்கு மேல்  மனுதாரரை அலைய விடுவதாகவும்
RDO-வின் உத்தரவை மதிக்காமல், மனு கொடுத்தவர் மீது பழிவாங்கும் போக்கில் உத்தமபாளையம் வட்டாட்சியர் செயல்படுவதாக

தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் ஐஏஎஸ்

தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை மனுதாரர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ மக்கள் வரிப்பணத்தில் மாத ஊதியம், மற்றும் இதரப்படிகளை பெற்று மக்கள் நலன் சார்ந்த பணிகளை  பணிகளை செய்யாமல் ஒரு சில அரசு ஊழியர்களை தவிர 90% அரசு அலுவலகங்களில் பணியில் இருக்கும் அதிகாரிகள் மக்கள் விரோதம் சார்ந்த பணிகளையே செய்து வருகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
லஞ்சம் ஊழல் முறைகேடு செய்யும்  வருவாய் துறை அதிகாரிகள்  மீது நடவடிக்கை எடுக்காததற்கு அவர்கள் மீது  மாவட்ட ஆட்சியருக்கு இருக்கும் அளவு கடந்த பாசமா?
இல்லை  வருவாய்த் துறையில் சங்கம் இருப்பதால்  நமக்கு எதற்கு வம்பு என  அமைதி காக்கிறாரா !?
என்ற சந்தேகம் பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் எழுந்துள்ளது.
ஆகவே உத்தமபாளையம் வட்டாட்சியர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு  மீது   மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) உடனடியாக தலையிட்டு RDO உத்தரவை நிறைவேற்றி, மனுதாரருக்கு நீதி வழங்க வேண்டும்  என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆகவே உத்தமபாளையம் வட்டாட்சியர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு  மீது   மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) உடனடியாக தலையிட்டு RDO உத்தரவை நிறைவேற்றி, மனுதாரருக்கு நீதி வழங்க வேண்டும்  என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மாற்றம் கொண்டு வருவதாக  தற்போது முதல்வராக உள்ள ஜோசப் பூஜை தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை நம்பி வாக்களித்த சாமானிய மக்கள் படும் அவல நிலையை போக்க   என்ன மாற்று நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Back to top button