சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 538 காவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவு ஆணை பிறப்பித்து ஒரு மாதம் ஆகியும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையங்களில் ரிப்போர்ட் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல்!

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, 25 காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டு, 2022ம் ஆண்டில், ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.
ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் தற்போது ஆவடி டேங்க் பேட்டரி பூந்தமல்லி அம்பத்தூர் கொரட்டூர் நசரத்பட் வெள்ளவேடு செவ்வாபேட்டை எஸ் ஆர் எம் சி பட்டாபிராம் திருநின்றியூர் வெங்கமேடு திருவேற்காடு சோழவரம் செங்குன்றம் மணலி எண்ணூர் ,செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, பொன்னேரி மீஞ்சூர், சோழவரம், காட்டூர் திருமுல்லைவாயில் , முத்தபுதுப்பேட் என சுமார் 30-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் உதவி காவல் ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் என சுமார் 40 காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் தலைமை காவலாளர் காவலர்கள் என 1500 பேர் பணியில் இருக்கின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்ஐகள், தலைமை காவலர்கள் காவலர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் இரண்டு முறை பணியிட மாற்றம் கேட்டு ஆவடி காவல் ஆணையரிடம் விருப்பம் மனு அளித்தனர். 2025டிசம்பர்,2026 ஜனவரி மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்படும் என போலீசார் காத்திருந்தனர். ஆனால், புதிய காவல் ஆணையர் மாற்றம், பண்டிகை காலம் போன்ற காரணங்களால் பணியிட மாற்றம் தள்ளிப்போனது.
குறிப்பாக தேர்தல் பணிகள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் இவர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தாமதமானது.
தங்களின் விருப்பத்திற்கேற்ப பணியிட மாற்றம் வழங்க வேண்டும் அல்லது தகுந்த பரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து விருப்பமான கொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்
ஆவடி ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா தாம்பரம் காவல் ஆணையராக மாற்றப்பட்ட நிலையில்

காவல்துறை கூடுதல் இயக்குநரான (ADGP) டி. செந்தில்குமார் ஐபிஎஸ் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் 5-வது ஆணையராக ஜூன் 20, 2026 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆவடி காவல ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பணிசெய்யும் காவலர்கள் கடந்த ஆண்டு பணியிட மாற்றம் கேட்டு கொடுத்திருந்த விருப்ப மனுக்களை பரிசீலனை செய்த ஆவடி காவல் ஆணையர் டி செந்தில்குமார் ஐபிஎஸ் அவர்கள் 2026 ஜூலை மாதம் 30 ஆம் தேதி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணியில் இருந்த

சுமார் 538 காவலர்களுக்கு பணியிடம் மாற்றம் செய்து காவல் ஆணையர் செந்தில்குமார் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவு ஆணை பிறப்பித்தார்.
பணியிட மாற்றம் உத்தரவு ஆணை பிறப்பித்து சுமார் ஒரு மாதம் ஆகியும் இன்னும் எந்த காவலர்களும் பணியிட மாற்றம் செய்த காவல் நிலையங்களுக்கு செல்லவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் பணியிடம் மாற்றம் கேட்டு விருப்பமான கொடுத்து காத்திருக்கும் மீதம் உள்ள காவலர்களுக்கு பணியிட மாற்றம் உத்தரவு வராமல் இருப்பதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் உள்ளவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக பணியிட மாற்றம் செய்துள்ள காவலர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் அதிர்ச்சி தரும் தகவல்களை கொடுக்கின்றனர்.
அந்த தகவல் என்னவென்றால் பணி செய்து கொண்டிருக்கும் காவல் நிலையத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்த காவல் நிலையங்களுக்கு சென்று ரிப்போர்ட் செய்வதற்கு பணி செய்து கொண்டிருக்கும் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் விடுவிப்பு ஆணை வழங்க மறுக்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
விடுவிப்பு ஆணை காவல் ஆய்வாளர்கள் வழங்காததற்கு என்ன காரணம் என்று கேட்டால் பணி மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் இந்த காவல் நிலையத்திற்கு வந்த பின்பு தான் உங்களை விடுவிப்பு செய்ய முடியும் எனவும் அந்தந்த காவல் ஆய்வாளர்கள் கூறி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு என்ன காரணம் என்றால் பணியிடமணமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் இருந்து விடுவிப்பு செய்யாமல் இருப்பதால் மட்டுமே இந்த குளறுபடி தற்போது நடந்துள்ளது எனக் காவல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
எது எப்படியோ நேர்மையான காவல் அதிகாரியான செந்தில்குமார் ஐபிஎஸ் அவர்கள் ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்த ஒரே மாதத்தில் பணியிடம் மாற்றம் கேட்டு விருப்பமான கொடுத்தவர்களின் மனுவை பரிசீலனை செய்து பணியிடம் மாற்றம் உத்தரவு போட்டது போல் தற்போது பணியிட மாற்றம் செய்த காவல் நிலையங்களுக்கு காவலர்களை உடனடியாக ரிப்போர்ட் செய்ய நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலையங்களுக்கு தெரிவித்தால் மட்டுமே சாத்தியம் என்றும்
அதுமட்டுமில்லாமல் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் அந்தந்த காவல் நிலையத்திற்கு சென்ற பின்பு மீதம் உள்ள காவலர்களின் பணியிட மாற்றம் உத்தரவு ஆணையை ஆவடி ஆணையர் விரைவில் பிறப்பிக்க வேண்டும் என்றும் பணியிடம் மாற்றம் கேட்டு காத்திருக்கும் காவலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நேர்மையான காவல் உயர் அதிகாரியான ஆவடி காவல் ஆணையர் டி செந்தில்குமார் ஐபிஎஸ் அவர்கள் காவலர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என எதிர்பார்த்து இருக்கும் காவலர்கள்.
காவல்துறை கூடுதல் இயக்குநரான (ADGP) டி. செந்தில்குமார் ஐபிஎஸ் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் 5-வது ஆணையராக ஜூன் 20, 2026 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். [1, 2, 3




