வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து வேலூர் மாவட்ட நிழல் ஆட்சியராக
வலம் வரும் ஊழல் பெருச்சாளி தாசில்தார்! நடவடிக்கை எடுக்க தயங்கும் வேலூர் மாவட்ட ஆட்சியர்!
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆய்வுக்குழு (District Inspection Cell / Monitoring Committee Office) என்பது தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களின் செயல்பாடு, வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்களை ஆய்வு செய்யச் செயல்படும் ஒரு நிர்வாகப் பிரிவாகும்.
அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் அரசுக்கு இழப்பீடுகள் ஏற்பட்டிருக்கும் குறித்து ஆய்வுகளில் தெரியவரும் பட்சத்தில் அந்த மாவட்ட ஆய்வுக் குழுவில் அடங்கியுள்ள அலுவலர்கள் லஞ்சம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்து முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அது மட்டும் இல்லாமல் இந்த ஆய்வு குழு

மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்குகிறது
இந்த ஆய்வு குழுவில் தாசில்தாராக இருப்பவர் ஜெகதீஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 2021 ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை ரெகுலர் தாசில்தாராக 3 முறை 5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு தாசில்தார் ஒரு ஆண்டு வரை தான் ரெகுலர் தாசில் தாராகப் பணிபுரிய வேண்டும் என்று அரசு விதி கூறுகிறது.
கடந்த ஆட்சியில் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா கொடுத்ததற்காக 5 ஆண்டுகள்

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராக ஜெகதீஸ்வரர் தொடர்ந்து இருந்ததாகவும் வருவாய் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் ஜெகதீஸ்வரன் காட்பாடி தாசில்தாராக இருந்தபோது தனக்கு ஒத்து வராத வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சர்வேயர்கள், அலுவலக ஊழியர்கள் என சாதி ரீதியாக பழிவாங்கி தனது அதிகாரத்தை வைத்து டம்மியான இடத்திற்கு அவர்களை பணியிட மாற்றம் செய்ததாக இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். தாசில்தார் ஜெகதீஸ்வரன் தான் செய்த தில்லுமுல்லுகள் எங்கே வெளியே வந்துவிடும் என்ற அச்சத்தில் தன் சொல் பேச்சை கேட்க கூடிய தனது உறவுக்காரரான மகேஸ்வரியை ரெகுலர் தாசில்தாராக கொண்டு வந்து காட்பாடி தாலுகாவில் பணியில் அமர்த்திவிட்டார் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்தவர்கள் தாசில்தார் ஜெகதீஸ்வரன் வேலூர் மாவட்ட வருவாய் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆர்டிஓ அலுவலகத்தில் ஒரு ஸ்பை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு ஸ்பை, என அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு உடனுக்குடன் அந்த ஸ்பைகள் தகவல் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் வேலூர் ஆட்சியராக இருந்தவர்களிடம் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியராக நந்தகோபால் ஐஏஎஸ் இருந்தபோது நேர்முக உதவியாளராக இருந்த 2017-18 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை பினாமிகள் பெயரில் வாங்கி வைத்துள்ளதாகவும்
அதுமட்டுமில்லாமல் பள்ளிகுப்பம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விமலா மாநகராட்சி 2-வது வார்டு மாமன்ற உறுப்பினரின் கணவர் பூஞ்சோலை சீனிவாசன் கேட்ட இடங்களில் எல்லாம் அரசு புறம்போக்கு இடங்களில் முறைகேடாக பட்டா வழங்கியுள்ளதாக வழக்குப் பதிவு செய்து வழக்கு விசாரணையில் உள்ளது.
இதுதான் இப்படி என்றால் இவருடன் பணிபுரிந்த தலைமையிடத்து மண்டல தாசில்தார்கள் மகேஸ்வரி, சிவக்குமார் மற்றொரு மண்டல துணை தாசில்தார் செந்தாமரை உள்ளிட்டவர்கள் மட்டும் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு அரசு புறம்போக்கு நிலங்களை, இடங்களை தாரை வார்த்து கொடுத்தனர். இது நாளடைவில் வெளியே தெரிய வந்து பொறுப்பு சார் பதிவாளர் காட்பாடியில் பணியாற்றிய சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது வருவாய்த்துறை மூலம் புறம்போக்கு நிலம் இருப்பதை தற்போதைய தாசில்தார் மகேஸ்வரி மற்றும் இந்த அணிகளை சேர்ந்தவர்கள் தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியவர்கள் மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசாரணை கூட நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று பொன்னையை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரிடத்தில் பல லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றுக்கொண்டு அவருக்கு அரசு புறம்போக்கு (கிராம நத்தம்) இடத்தில் மூன்றடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டியுள்ள சர்வே எண் : 1143/ மற்றும் பழைய எண்: 16, 490 அடி இடத்திற்கு பட்டாவும் கொடுத்தார் காட்பாடி தாசில்தாராக இருந்த ஜெகதீஸ்வரன். மேலும் கடந்த 2025-2026 ஜூலை மாதம் வரை அப்போது வேலூர் உட்கோட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியராக இருந்த செந்தில்குமார் கைங்கரியத்தோடும்
கிராம நிர்வாக அலுவலர்களும், பிர்கா வருவாய் ஆய்வாளர்களும் இணைந்து பல லட்சம் கேட்டு ஜெய்சங்கரை தொந்தரவு செய்து வந்தனர். இந்த தகவல் வெளியில் தெரியவர புகார் மேல் புகார் பரவ அந்த பட்டா ஜெய்சங்கரிடமிருந்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வேலூர் வருவாய் கோட்டாட்சியராக இருந்து விழுப்புரத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை தனது சொந்த ஊராகக் கொண்ட செந்தில்குமாரை கையில் போட்டுக்கொண்டு ஜெகதீஸ்வரன் ஆடிய ஆட்டத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது ஆட்டம் படுக்கச்சிதமாக நடந்து வந்தது. சாதி ரீதியாக பலர் பழிவாங்கப்பட்டனர். குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்களை கூறலாம். தனக்கு வேண்டியவர்களை தனக்கு பக்கத்திலேயே கொண்டு வந்து வைத்துக் கொண்டு அவர்களிடம் பலப்பற்ற ரீதியாக விளையாடிக் கொண்டிருந்தார் ஜெகதீஸ்வரன் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இது பலருக்கும் தெரியும். ஒரு அதிகாரி மீது தேவையற்ற புகார்கள் சொல்வதற்கு யாருக்கும் இங்கு விருப்பமில்லை. இருந்தாலும் இது இன்றைக்கும் தெரியவில்லை என்றால் என்றைக்கு தெரிவது என்ற ரீதியில் இந்த தகவல்கள் பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் தெரியும் வகையில் வெளியில் கொண்டு வருவது நமது கடமையில் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பள்ளி கொண்டா டோல்கேட் அருகே நடைபெற்ற ராகதேவன் இளையராஜாவின் இன்னிசை இரவு கச்சேரியில் வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அவரது மகனுடன்

தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன் வரிசையில் இருந்த விஐபி சோபாவில் அமர்ந்து இசை நிகழ்ச்சியை கண்டுகளித்ததும் இவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் எவ்வாறு என்று இதிலிருந்து தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு மேல்மட்ட அதிகாரியுடன் இணக்கமாக இருந்து வந்த தாசில்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
வட்டாட்சியராக இருந்தபோது ஜெகதீஸ்வரன் வாங்கிய லஞ்சம் பணத்தில் வருவாய் கோட்டாட்சியருக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளார் என்று வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் தற்போது வரை முணுமுணுத்து வருகின்றனர்.
அரசு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அரசு வாகனங்கள். அவற்றை தனியார் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வருகிறார் தன்னை நேர்மையான அதிகாரி என தன்னைத்தானே நினைத்துக் கொண்டு
தான் வைத்தது தான் சட்டம் என
கடந்த ஐந்து வருடங்களில் ஆடி ஆட்டத்திற்கு அளவே இல்லை . தற்போது ஜெகதீஸ்வரன்
அந்த முகமூடி அகற்றப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும்
அப்பகுதி சமூக ஆர்வலர்களின் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
தாசில்தார் ஜெகதீஸ்வரன் தனது அதிகாரத்தை மீறி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் திடீர் சோதனை செய்தால் உறவினர்களின் பெயரில் பினாமியாக சுமார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 15 வீடுகளுக்கும் மேலாக வாங்கி வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது மட்டுமின்றி பல அதிர்ச்சி உண்மைகள் ஆதாரங்களுடன் விரைவில் வெளியே வரும் என வேலூர் மாவட்ட வருவாய்த்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எது எப்படியோ மறைமுகமாக லஞ்சம் ஊழல் முறைகேடில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வரும் போது அந்த குற்றச்சாட்டின் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியிடம் விசாரணை மேற்கொள்ள நேர்மையான அதிகாரிகளை நியமித்து உத்தரவிட வேண்டும். அப்படி விசாரணை மேற்கொள்ளும் போது லஞ்சம் ஊழல் முறைகேடு செய்ததற்கான உண்மை தெரியவரும் பட்சத்தில் உடனடியாக அந்த அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறுத்திருந்து பார்ப்போம் மாவட்ட ஆட்சியர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை…..!



