மாவட்டக் கல்வித் துறை

பள்ளியில் மாணவ மாணவிகளை தவறாக பயன்படுத்தி  வரும் விராலிமலை லஞ்சமேடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்! கோமாவில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாகம்!
நடவடிக்கை எடுப்பாரா!? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்!

அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களைப் பள்ளி பராமரிப்பு வேலைகளுக்கோ அல்லது ஆசிரியர்களின் சொந்த வேலைகளுக்கோ பயன்படுத்துவது மற்றும்
மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை பாதிக்கும் எந்தவொரு செயலில் ஈடுபடுத்தப்படுவது சட்டவிரோதமானது.
மற்றும் சட்டப்படி குற்றமாகும்.
மீறி மாணவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் செய்ய வழிவகை உள்ளது.

பள்ளிகளைப் பராமரிக்கத் துப்புரவுப் பணியாளர்களைத் தனியாக நியமிக்க வேண்டும்.
இதற்கான நிதியைப் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) அல்லது அரசாங்க நிதியிலிருந்து பயன்படுத்த வேண்டும்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கவனம் சிதறாமல் கல்வி கற்பிக்கும் சூழ்நிலையை பள்ளி தலைமை ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்குத் தார்மீகப் பொறுப்பை உணர்த்த ‘சுயசுத்தம்’ மற்றும் ‘வகுப்பறையை ஒழுங்காக வைத்திருத்தல்’ போன்ற நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்கலாமே தவிர, அவர்களைக் கடின உழைப்பில் ஈடுபடுத்தக் கூடாது.
பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு தரையைச் சுத்தம் செய்ய வைத்தல் அல்லது கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைக்கும் சம்பவங்கள் சமூக ஊடகங்கள் வழியாக வெளிச்சத்திற்கு வரும்போது, உடனடியாக மாவட்டக் கல்வி அதிகாரிகள் (DEO) மூலம் விசாரணை நடத்தப்பட்டு சட்ட விதிகளை மீறி மாணவர்களை பயன்படுத்திய சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிகப் பணிநீக்கம் (Suspension) செய்யப்பட வேண்டும்
என்ற பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையை மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டு
கிராமப்புற மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் அரசுப் பள்ளியான


புதுக்கோட்டை மாவட்டம் லஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி
(Panchayat Union Middle School, Lanchamedu)
தலைமை ஆசிரியராக பணியில் இருக்கும் கௌசல்யா சரோஜினி
பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை வகுப்பறை நடந்து கொண்டிருக்கும் போது மற்றும் உணவு இடைவேளையின் போது

பள்ளியின் பராமரிப்பு வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்தி வருவதாகவும்
அது மட்டுமில்லாமல் தலைமை ஆசிரியர் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டுவரும் டிபன் பாக்ஸ்களை சாப்பிட்ட பின்பு பள்ளி மாணவிகளிடம் கொடுத்து கழுவி எடுத்து வர சொல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அது மட்டும் இல்லாமல் தலைமை ஆசிரியர் கௌசல்யா சரோஜினி சாப்பிட்ட பின்பு மீதியுள்ள உணவை சாப்பிட கட்டாயப்படுத்தியதாகவும் அதுமட்டுமில்லாமல்
மாணவ மாணவிகளின் ஜாதி பெயரை சொல்லி
தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும்
பள்ளி கட்டிட பராமரிப்பு பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தி வந்த வீடியோக்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் தலைமை ஆசிரியர் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டில் இருந்துள்ளது.
இது சம்பந்தமாக
கடந்த 24.6.2026 அன்று பதிவு தபால் மூலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி துறையில் உள்ள அனைவருக்கும் நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்துள்ளனர். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்

3.8.2026 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு நாளில் நேரிடையாக மனு அளித்துள்ளனர்.
மனு மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே சண்முகம்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ( CEO ) சண்முகம் அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் 5.8.2026 அன்று விராலிமலை வட்டாரக் கல்வி அலுவலர் ஜேம்ஸ் ஆரோக்கிய சாமி மற்றும் மாவட்ட பள்ளி கல்வி அலுவலர் (DEEO) கனக ராணி ஆகியோர் புகார் மனு கொடுத்தவர்களுக்கு விசாரணை மேற்கொள்ள இருப்பதை தெரிவிக்காமல்
சம்பந்தமில்லாமல் 6 ஆம் வகுப்பு மாணவர்களை விசாரணை செய்துள்ளனர்.
அதற்கு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளிடம் என்ன நடந்தது என கேளுங்கள் என வற்புறுத்திய பின்பு
மாணவர்களை மிக அருகில் அழைத்து சத்தமே இல்லாமல் விசாரணை செய்ததை வீடியோ பதிவு பதிவு செய்யாமல் சென்று விட்டதாகவும்
7.8.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு பள்ளிக்கு வந்துள்ளனர்.
அப்போதும் பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட உங்களது பிள்ளைகளிடம் நடந்ததை கேட்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர்.
ஆனால் விராலிமலை வட்டார கல்வி அலுவலர் தலைமை ஆசிரியரை காப்பாற்றும் நோக்கில் 6 ஆம் வகுப்பு மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களிடம் தனி அறையில் பேச வைத்து வீடியோ பதிவு செய்து விசாரணை என்ற பெயரில் நடுநிலையாக செயல்படாமல் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டதால்
மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்கி
யாரை காப்பாற்ற விராலிமலை வட்டார கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட பள்ளி கல்வி அலுவலர் ஆகிய இரண்டு பேரும் அதிகாரி முயற்சி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பெற்றோர்கள் வைத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல்
நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது விராலிமலை வட்டார கல்வி அலுவலர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்வி அலுவலர் ஆகிய இருவரும் தலைமை ஆசிரியருக்கு 10.8.2026 முதல் மருத்துவ விடுப்பில் செல்வதற்கு அனுமதி அப்படி கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எது எப்படியோ பள்ளி கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கையை மதிக்காமல் உதாசீனப்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக பள்ளி மாணவ மாணவிகளை
பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீது
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மற்றும் முதலமைச்சர் ஆகியோர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி
துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி இந்திய சட்ட உரிமை மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தின் மாநில தலைவர் சுரேஷ் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button