நிழல் மோட்டார் வாகன ஆய்வாளராக வசூல் வேட்டையில் ஓட்டுநர்!
மாதம் பல லட்சம் ரூபாய் கல்லாக்கட்டும் காரைக்குடி மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் அனிதா! லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை பாயுமா!?

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் அதிகமாக புழங்கக்கூடிய வருவாய்த்துறை, பத்திரப் பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை ஆகிய மூன்று அரசு அலுவலகங்கள் ஆகும்.
இதில் போக்குவரத்து துறை மிகவும் முக்கியமானது.
வாகன ஓட்டுநர் உரிமம் எடுக்கவும், புது வாகனங்களுக்கு சான்று மற்றும் பழைய வாகன தகுதிச்சான்று பெற தினமும் இருசக்கர வாகனம் முதல் ஆட்டோ கார் வேன் பஸ் லாரி என பல்லாயிரக்கணக்கான பேர் இந்த அலுவலகங்களை தேடி வருகின்றனர். ஓட்டுநர் உரிமம் முதல் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை லஞ்சமாக நிர்ணயிக்கப்பட்டு இடைத்தரகர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வசூலிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக முறைகேடாக வசூலிக்கப்படும் லஞ்ச நடைமுறையை இதுவரை எந்த ஆட்சியிலும் மாற்ற முடியவில்லை அதேபோல் லஞ்சம் வாங்காத அதிகாரிகளே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தற்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில்,
ஓட்டுநர் உரிமம் (Driving Licence), வாகனப் பதிவு (RC Book), மற்றும் தகுதிச்சான்று (FC) போன்றவற்றுக்கு இடைத்தரகர்கள், டிரைவிங் பயிற்சி பள்ளிகள் மூலம் முறைகேடாக லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்
ஜூன் 18, 2026 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள
கோவை, காந்திபுரம் மத்திய ஆர்டிஓ அலுவலகம், திருப்பூர் தெற்கு,தென்காசி, நாகர்கோவில், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், கும்பகோணம், திருச்சி, செஞ்சி, சேலம் கந்தம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மாக்கமூலா பகுதியில் உள்ள போக்குவரத்து துறை பகுதி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
40 முதல் 44-க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது (உதாரணமாக, ஜூன் சோதனையில் சுமார் ₹31 லட்சம் முதல் ₹37 லட்சம் வரை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளிவந்தது.
அதேபோல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இல் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் (RTO / MVI ) அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருக்கும் அனிதா என்பவரது வங்கி கணக்கில்
இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ஜிபி மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில்
காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வாகன பதிவு, தணிக்கை சான்று, ஓட்டுநர் உரிமம் பெற உள்ளிட்ட பணிகளுக்காக காரைக்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லஞ்சம் ஊழல் முறைகேடு அதிகம் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதுப்பிக்க வரும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்தான் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். ஆனால் புதுப்பிக்க வரும் வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளரின் வாகன ஓட்டுனர் காளீஸ்வரன் என்பவர் சட்ட விதிகளை மீறி வாகனங்களை ஆய்வு செய்து வருவது மட்டுமல்லாமல் முறைகேடாக லஞ்சம் பெற்று சான்றிதழ் வழங்கி வருவதாகவும் தற்போது காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிழல் மோட்டார் வாகன ஆய்வாளராக மறைமுக வசூல் வேட்டையில் இறங்கி உள்ளதாகவும்
அது மட்டும் இல்லாமல் பினாமி பெயர்களில் டிஜிட்டல் முறையில் வாங்கும் லஞ்ச பணம் மாதம் சுமார் 5 லட்சம் வரை மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதாவுக்கு கிடைப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
லஞ்சம் ஊழல் முறை ஏற்றில் ஈடுபட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

