சட்ட விழிப்புணர்வு

நீலகிரி மாவட்ட சட்டப்பணி ஆணை குழு சார்பாக mission- பாவை மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் !

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில்

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக, mission- பாவை மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.

இந்த முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதி முரளிதரன்
மாவட்ட மகிலா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்
மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம்
ஆகியோர்  விழிப்புணர்வு முகாமில்   கலந்து கொண்டு பெண்கள் மீதான வன்முறை, சட்ட உதவி, மற்றும் பிற சட்ட விழிப்புணர்வு தகவல்கள் வழங்கினார்கள்.
பெண்கள் தங்களின் உரிமைகளையும், சட்ட ரீதியிலான ஆதரவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த முகாமின் முக்கிய நோக்கம் ஆகும் என்று
சட்டப்பணிகள் ஆணைக்குழு:
சட்ட உதவித் திட்டங்களை அமல்படுத்துவதற்கும், சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும்
சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் சட்டம்:
1987ல் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
சமூக நீதி மற்றும் சமநீதியையும், இலவச சட்ட உதவிகளையும் வழங்குவது அரசின் கடமை  என்றும் அரசு நலத்திட்டங்களை இலவச சட்ட உதவி மையம் மூலம் எவ்வாறு பெறலாம், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், குழந்தை திருமணம் குறித்தும் விளக்கி எடுத்துக் கூறினார்கள். சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்
வனிதா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Back to top button