Watch “கைதாகிறாரா மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்!??” on YouTube அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!?

சுகாதாரத்துறை முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி சேலத்தில் பல்வேறு மருத்துவர்கள் வீட்டிலும் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் சோதனை நடத்தி வருகின்றனர். தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தங்கி இருக்கும் குடியிருப்பில் காலை முதல் சோதனை நடந்து வருகிறது.
புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் இன்று காலை 5.30 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றார்கள் . விஜயபாஸ்கர் வீட்டு முன்பு திரண்ட அதிமுக தொண்டர்கள் !!!விரட்டி அடித்த காவல்துறையினர்!!

அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி சி.விஜயபாஸ்கருக்கு 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் டாக்டர் விஜயபாஸ்கர் இடம் தொடர்பில் இருந்த மருத்துவர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பணி காலத்தில் திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்கா மஞ்சக்கரனை கிராமம் வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 300 உள்நோயாளி படுக்கை வசதிகளுடன் இரண்டு வருடங்களாக செயல்படுகின்றது.
மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விததிமுறைகளுக்கு முரணாக மேற்படி மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற அவருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனால் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டிற்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இந்த சோதனையில் வருமானவரித்துறையினர் எந்தவித தகவலும் பத்திரிகையாளர்களுக்கு தற்பொழுது வரை எதுவும் தெரிவிக்கவில்லை .இன்று 5.30 காலை மணி அளவில் இருந்து இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவது கூறிப்பிடதக்கது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடப்பதை அறிந்த அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விஜயபாஸ்கர் வீட்டு முன்பு தர்மாவில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர். அதன் பின்பு தொடர்ந்து தர்மாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிமுக தொண்டர்கள் வீட்டு முன்பு உட்கார்ந்து உணவருந்திக் கொண்டு கொண்டிருந்தனர். அதன் பின்பு காவல்துறையினர் அங்கு கூடியிருந்த அனைவரையும் கைது செய்யப் போவதாக கூறியதும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டதாகவும் தகவல் வந்துள்ளது. .


தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவர்.பாலாஜிநாதன், குடியிருப்பு வளாகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான, ஆய்வாளர் ஜெயப்பிரியா உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் விசாரணை, மாலை மூன்று மணிக்கு நிறைவடைந்த நிலையில், எட்டு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.