மருத்துவம்

Watch “தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் ! எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் படுக்கை இல்லாமல் நோயாளிகள் அவதி ப்படுவதாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு!” on YouTube

தமிழகத்தில் உடனடியாக மருத்துவ வல்லுனர் குழு அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு எந்தவித வைரஸ் தொற்று வந்துள்ளது என்பதை உடனடியாக ஆராய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!

H1N1(எச்1.என்1)க்காய்ச்சல் அல்லது பன்றிக்காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும் என்பது Orthomyxoviridae ல் ( Hemagglutinin மற்றும் Neuraminidase). அடங்கி இருப்பதால் இதனை சுருக்கமாக H மற்றும் N குறிப்பிடபடுகிறது.பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது ‘ஏ’ இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை.

தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும் கடந்த சில தினங்களாக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க ப்படுகிறார்கள் என்றும் அதில் முக்கியமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அதிகமான குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதால் போதிய படுக்கைகள் இல்லாமல் பெற்றோர்கள் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளதாகவும் அதேபோல் தமிழகத்தில் உள்ள மதுரை சேலம் திருச்சி கோயம்புத்தூர் கன்னியாகுமரி போன்ற அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இதில் முக்கியமாக தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்கள் அதிகமாக பரவும் .ஆகவே பன்றிக்காய்ச்சல் பரவுவதற்கு முன்பு தமிழக அரசு சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்படும் வரும் நோயாளிகளுக்கு அதிக படுக்கைகள் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். பாண்டிச்சேரியில் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் 25 வரை ஒன்னாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளியை விடுமுறை விடுத்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழ்நிலை ஏற்படுமா என்று விஜயபாஸ்கரியிடம் கேட்டதற்கு விடுமுறை விடும் நிலை ஏற்படாது என்றும் ஆனால் முன்னெச்சரிக்கை தேவை என்றும் ஆனால் தமிழக அரசு பன்றிக்காய்ச்சல் தொற்று சம்பந்தமாக அமைதி காத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பினார். ஆகவே தமிழக சுகாதாரத்துறை தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு எந்த விதமான வைரஸ் தொற்று என்பதை தீவிரமாக ஆராய்ந்து உடனடியாக பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button