அமலாக்க துறை அதிகாரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்களிடம் சிக்கியது எப்படி!? நடந்தது என்ன!?
அமலாக்க துறை அதிகாரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்களிடம் சிக்கியது எப்படி!? நடந்தது என்ன!?
திண்டுக்கல், பழனி ரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர், 1990ல் தமிழக மருத்துவ பணியில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியை துவங்கினார். திண்டுக்கல்லை சேர்ந்த ஸ்ரீநிவாச பிரீத்தாவை 1994ல் திருமணம் செய்தார். இவரது மனைவி ஸ்ரீநிவாச பிரீத்தா திண்டுக்கல் பழனி ரோட்டில் சத்திய சுபா என்ற மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்
2011ல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார்.
திண்டுக்கல் அரசு மருத்துமவனையில்
துணை கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.
சுரேஷ்பாபு தந்தை வழியில் வந்த குடும்ப சொத்தை மட்டும் வைத்துகொண்டு,
மகன்கள் பிரணவ், பிங்காஷ்ராஜ் டாக்டர்கள். சுரேஷ்பாபு, மனைவி மீது, 2018ல் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக
சுரேஷ்பாபு பணிக்காலத்தில் கிடைத்த வருமானம், மனைவியின் வருமானம் போன்றவை 2007 – 2011 வரை சரிபார்க்கப்பட்டது.
அப்போது துவக்க காலத்தில், 17.59 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் மட்டுமே
டாக்டர் சுரேஷ்பாபுவிடம் இருந்தது தெரிந்தது.
சுரேஷ்பாபு மனைவி பெயரில் வருமானத்திற்கு அதிகமாக, 2.42 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, சுரேஷ்பாபு, ஸ்ரீநிவாச பிரீத்தா சம்பாதித்த பணத்தை மறைத்த குற்றத்திற்காக
திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முதன்மை அறிக்கை தயார் செய்யப்பட்டு, வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையை முடித்து, சுரேஷ்பாபு மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உயர் அதிகாரிகளிடம் பரிந்துரைத்தனர்.
இதற்கிடையே, 2023 நவம்பரில் இந்த வழக்கின் விபரத்தை தெரிந்து கொண்ட மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி
, சுரேஷ்பாபுவை வாட்ஸாப் கால்’ வாயிலாக தொடர்பு கொண்டு, ‘உங்கள் மீது அமலாக்கத்துறைக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் 3 கோடி ரூபாய் பணம் லஞ்சமாக தர வேண்டும்’ என, மிரட்டினார்.ஆனால், தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றும், தான் சட்டத்திற்கு உட்பட்டே பணி செய்வதாக கூறியதனை அடுத்து, அப்போது ஹர்திக் என வாட்ஸ் அப்-ல் அறியப்பட்ட அங்கீத் திவகாரி, தனது உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு, ரூ 51 லட்சம் வேண்டும் எனவும், அதனை நவம்பர் 1 ஆம் தேதி தயாராக வைத்திருக்குமாறு கூறியுள்ளார்.பின், அக்டோபர் 31 ஆம் தேதி இரவு, மருத்துவரை தொடர்புகொண்ட அங்கீத் திவாரி, பணம் தயாராக உள்ளதா எனக்கேட்டள்ளார். பணம் தயார் என மருத்துவர் கூறியவுடன், மறுநாள் காலை அழைப்பதாக அங்கீத் திவாரி கூறியுள்ளார். மறுநாளான நவம்பர் 1 ஆம் தேதி காலை 7.17 மணிக்கு அழைத்த அங்கீத் திவாரி, நத்தம் வழியாக மதுரைக்கு வருமாறும், வழியில் பணத்தினை பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.அதன்படி, மருத்துவர் நத்தம் தாண்டி, நத்தத்திலிருந்து மதுரைக்கு நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் 7.46 மணிக்கு அழைத்த அங்கீத் திவாரி, மருத்துவரின் காரினை பார்த்துவிட்டதாகவும், காரினை நிறுத்துமாறும் கூறியுள்ளார். சிறிது நேரத்தில், மருத்துவரின் காரின் முன்பக்கம் வந்து தனது காரினை நிறுத்திய அங்கீத் திவாரி, தான் கேட்ட லஞ்சப்பணம் கொண்டு வந்திருக்கிறீர்களா என மருத்துவரிடம் கேட்டுள்ளார்.அப்போது, மருத்துவர் தான் 20 லட்சம் ரூபாய் மட்டும்தான் கொண்டு வந்திருப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு வர் தனது மேல் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும், மருத்துவர் மீதான புகாரினை அவர் முடித்து மேல் அதிகாரிகளுக்கு அக்டோபர் 30 ஆம் தேதியே அனுப்பிவிட்டதாகவும், அங்கு அந்த கோப்புகள் நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.மீதப்பணத்தை விரைவில் கொடுக்க வேண்டும் எனக்கூறிய அங்கீத் திவாரி, அப்போது மருத்துவரிடம் இருந்த ரூ 20 லட்சத்தை கையில் பெறாமல், காரின் டிக்கியை திறந்து, அங்கே வைக்கச் சொல்லியுள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் மருத்துவரின் வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவு செய்துள்ளார்.
மீதப்பணத்தை கேட்டு தொடர்சியாக அழைப்பு வந்ததால், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இரவு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், டாக்டர் சுரேஷ் இது சம்பந்தமாக புகார் கொடுத்துள்ளார் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி நாகராஜன் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே அங்கீத்தை பிடிக்க முயற்சித்துள்ளனர். உடனே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் டாக்டர் சுரேஷிடம் இரசாயன பவுடர் தடவிய 20 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பி உள்ளனர்.
அந்த பணத்தை டாக்டர் சுரேஷ் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரி கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னுடைய காரில் பறந்து சென்றுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரியை பிடிப்பதற்கு காத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் 15 கிலோமீட்டர் வரை காரை பின் தொடர்ந்து சென்று சுற்றி வளைத்து காரில் வைத்திருந்த பவுடர் தடவிய 20 லட்ச ரூபாய் பணத்தை கையும், களவுமாக பிடித்த்தனர். லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம், சுமார் 15 மணிநேரம் நடத்திய விசாரணையின் முடிவில், திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்றிரவு அவரை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இதையடுத்து அங்கித் திவாரியை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடத்தினர்.மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அங்கிட் திவாரியின் வீடு, அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது .பணம் வசூலித்து பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளன. தொடர்ந்து அமலாக்கத்துறையின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளரா என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதும் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் காட்டுத் தீ போல தமிழக முழுவதும் பரவியது.
இதற்கிடையே, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை போலீசில் சிக்க வைத்த சுரேஷ்பாபு, தி.மு.க., அமைச்சர்களோடு இருக்கும் புகைபடங்கள் வெளியாகி வந்தது குறிப்பிட்டது. இது பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டது. சம்பந்தமாக உடனே டாக்டர் சுரேஷ்
அமைச்சர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மருத்துவமனை மருத்துவராக இருந்ததால்
அரசு விழாக்களில் அமைச்சர்களோடு நான் பங்கேற்ற போது எடுத்த புகைப்படங்களை, தற்போது வைரலாக்குகின்றனர். என்றும் நான் தி.மு.க.,வில் எந்த பொறுப்பிலும் இல்லை. அங்கித் திவாரி, என்னை பணம் கேட்டு மிரட்டினார். நானும் பயந்துபோய் முதலில் கொடுத்தேன்.அடுத்தகட்டமாக எனக்கு விருப்பம் இல்லை. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தேன். 2018ல், என் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக போடப்பட்ட வழக்கு ஒன்பது மாதங்களுக்கு முன் முடிந்ததாக எனக்கு நோட்டீஸ் வந்தது.இவ்வாறு டாக்டர் சுரேஷ் கூறினார்.
ஏற்கனவே
நவ 02,2023 ஜெய்ப்பூர்: சிட் பண்டு மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்கவும், சொத்துகளை முடக்காமல் இருக்கவும் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய மணிப்பூரில் பணியாற்றும் நாவல் கிஷோர் மீனா மற்றும் ராஜஸ்தானின் முன்டவாரில் உள்ள அமலாக்கத்துறை இளநிலை உதவியாளராக பணியாற்றும் பாபுலால் மீனா ஆகிய.
அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை. ராஜஸ்தானில் லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்கத் துறை அதிகாரிகள், தமிழகத்தில் அமைச்சர்கள், மணல் மாபியா மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் பாஜகவின் ஏவல் துறையாக அமலாக்கத்துறை செயல்படுவதாக வந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது .Corrupted_ED என்ற டேக் இணையத்தில் டிரெண்ட் ஆகிறது. ஒட்டு மொத்த அமலாக்கத் துறையின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.