விருதுநகர்

ஆய்வு4600 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு விபரங்கள் 1600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்,3000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

11.08.2021
விருதுநகர் மாவட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் தஜெ.மேகநாதரெட்டி ஆய்வு.

விருதுநகர் நாராயண மடம் தெருவிலுள்ள சமுதாயக்கூடத்தில், இன்று (11.08.2021) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு விபரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, 1600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (Control Unit), மற்றும் 3000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit) என மொத்தம் 4600 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) .திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தசந்திரசேகரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button