லஞ்ச ஒழிப்புத் துறை

இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் வடமதுரை சார் பதிவாளர் அலுவலகம்!    10 சென்ட் இடத்தை பதிவு செய்ய 4 லட்சம் லஞ்சமா !?
லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கை எப்போது!?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வட மதுரையில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில்
சாணார்பட்டி, திண்டுக்கல், வேடசந்துார், வடமதுரை என 4 ஒன்றிய பகுதிகளை சேர்ந்தகிராம மக்கள் தங்களின் நிலங்கள் தொடர்பான பணிகளை செய்து கொள்ள வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலங்களின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சார் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறார்கள்.

வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 13 ஆண்டுகளாக நிரந்தர சார் பதிவாளர் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் பதவி அளவிலானவர்களே மாற்று பணியாக பொறுப்பு சார் பதிவாளராக வருகின்றனர்.
போதிய பணியாளர்கள் இல்லாததால் ஆண்டு கணக்கில்
மேனுவல் வில்லங்க சான்று வழங்க மனு வாங்க மறுப்பது, இன்டெக்ஸ் திருத்தம் சரி செய்யாதது, நில மதிப்பு நிர்ணயம் செய்ய அதிக காலதாமதம் செய்வது, பணியாளர்கள் தாமதமாக பணிக்கு வருவது என பல பிரச்னைகள் இங்குள்ளன.
நிரந்தர அதிகாரி இல்லாததால் சிக்கல் மிகுந்த விஷயங்களில் சரியான முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் விடப்படுவதால் அதனை சார்ந்தவர்கள் மாதக்கணக்கில் அலையும் நிலை உள்ளது.
இதனால் பல்வேறு பணிகள் நடக்காமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது
அது மட்டும் இல்லாமல்
பத்திரப் பதிவு செய்ய வரும் பொதுமக்களால் பதிவு அலுவலரை சந்திக்க விடுவதில்லையாம்.
அதற்கு காரணம் இடைத்தரர்களின் அதாவது ஒரு சில ஆவண எழுத்தாளர்களின் கட்டுப்பாட்டில் தான் வடமதுரை சார் பதிவாளர் அலுவலகம்  இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது,. ஆனால்
இடைத்தரகர்கள் மூலம் அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு ஒரு சென்ட்க்கு பத்தாயிரம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு  அங்கீகாரம் இல்லாத நிலத்தை  போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்து லட்சக்கணக்கில் இடைத்தரகர்கள் அதாவது ஆவண எழுத்தாளர்கள் லஞ்சம் வாங்கி கொடுத்து வருவதாகவும்
அதுமட்டுமில்லாமல்  ஒரு நிலத்தை விற்பனை செய்து பதிவு செய்ய வந்தால் அந்த நிலம் மார்க்கெட் விலை எவ்வளவு என  இடைத்தரகர்களிடம் அதாவது ஆவண எழுத்தாளர்களிடம் கேட்டு அதற்கேற்றார் போல் ஒரு தொகையை நிர்ணயித்து  கொடுத்தால் மட்டுமே அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் இல்லையென்றால் ஏதாவது ஒரு காரணங்களை சொல்லி பத்திரப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும்  அதுமட்டுமில்லாமல் பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை உரிய நபர்களிடம் வழங்காமல் சட்ட  விரோதமாக இடைத்தரர்களிடம் கொடுத்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் மாதம் குறைந்தது 25 லட்சம் வரை லஞ்சமாக வசூல் வேட்டை நடப்பதாகவும் அதிர்ச்சி அதிர்ச்சித் தகவலை சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் இருப்பவர்களிடம் விசாரித்ததில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தர சார் பதிவாளர்களை நியமிக்கவில்லை என்றும்  அதற்கு காரணம்  பத்திரம் எழுதிக் கொடுப்பவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்றும் இடைத்தரகர்களாக செயல்படும் ஆவண எழுத்தாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருப்பதாகவும்  ஆகவே வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பொறுப்பு சார் பதிவாளர்களாக யார் வந்தாலும் இடை தரகர்கள் அதாவது பத்திரம் எழுதுபவர்கள் சொல்வதை செய்து கொடுக்க வேண்டும் என பத்திரப்பதிவு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் வாய்மொழி உத்தரவு போடுவதாகவும் இதனால் எந்த வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் சார் பதிவாளர்கள் யாராக இருந்தாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் இடைத்தரர்களின்  பத்திர எழுத்தாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார்கள் என அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
பத்திர எழுத்தாளர்கள் முறையான பத்திரப்பதிவுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். போலி ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்து கொடுத்தால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என பத்திரப்பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திலிருந்து அனைத்து பத்திரப்பதிவு எழுத்தாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்களாக செயல்படும் பத்திர எழுத்தாளர்கள்  தங்களது விசுவாசிகளான   பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு மாதம் பல லட்சங்கள்  சன்மானமாக கொடுத்து வருவதாகவும் இதற்காகவே வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிரந்தர சார் பதிவாளரை நியமிக்கவில்லை என்றும் பொறுப்புசார் பதிவாளர்களை நியமித்து லஞ்ச வசூல் வேட்டை நடப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல்  திண்டுக்கல் மாவட்டத்தில்  மூன்று சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் சார் பதிவாளர்கள்  முகம் சுளிக்கும் அளவிற்கு மிக மோசமாக  நடந்து கொள்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
அது மட்டும் இல்லாமல்  இடைத்தரகர்கள் மூலம் சென்றால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து தரப்படுவதாகவும்  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல்
வடமதுரை பொறுப்பு சார் பதிவாளர் ஜெயக்குமார் பத்திரப்பதிவு செய்யும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு  கள  ஆய்வு மேற்கொள்வதில்லை என்றும் அது மட்டுமில்லாமல் அப்படியே கள ஆய்வு செய்ய வேண்டும் என்றால் நிலத்தின் உரிமையாளர்கள் பெரிய தொகை லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கள ஆய்வுக்கு வருவார் என்றும் அது மட்டுமில்லாமல் சார் பதிவாளர் சென்றுவர வாகனம் மற்றும் அனைத்து வசதிகளையும்  செய்து கொடுத்தால் மட்டுமே கள ஆய்வுக்கு வருவாராம் . அதுமட்டுமில்லாமல் வில்லங்கச் சான்றுகளை கொடுக்க மறுத்து வருவதாகவும் மற்றும்  பத்திரப்பதிவு செய்த பின் அசல் ஆவணங்களை வழங்க இரண்டு மாதங்களாகியும் கொடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை கொடுப்பதற்கு பெரிய தொகையை லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே  அதுவும் நேரடியாக பத்திரப்பதிவு செய்த அசல் ஆவணங்களை வழங்காமல் இடைத்தரகர்கள்  மூலம் கொடுத்துவிட்டு லஞ்சப் பணத்தை வசூல் செய்து  வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வடமதுரை வேடசந்தூர் குஜிலியம்பாறை போன்ற சார் பதிவாளர் அலுவலகங்களில் நேர்மையான நிரந்தர சார் பதிவாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி சார்ந்த இயக்கங்கள் தொடர்ந்து  வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில்  லஞ்ச ஊழல் முறைகேடுகள் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் வஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் பொறுப்பு சார்பதிவாளர்கள் மற்றும் ஆவண எழுத்தாளர்கள் என்று கூறிக்கொண்டு சார் பதிவாளர் அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு போலி ஆவணங்களை வைத்து அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்து கொடுப்பவர்களின் எழுத்தாளர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என   திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு  தொடர்ந்து போராட்டம் நடத்தி  வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்  17/02/2025 அன்று மனு கொடுத்தனர்.

அந்த மனுவில்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பில் சார் பதிவாளர்களே பணி அமர்த்தப்படுகின்றனர் பல்வேறு பணிகள் ஆண்டு கணக்கில் கிடப்பில் கிடக்கிறது பத்துக்கு மேற்பட்ட ஆவண எழுத்தர்கள் உரிமம் பெற்று ஆவணம் தயார் செய்யும் பணியில் உள்ளனர். இதில் ஆவண எழுத்தர்

கோதண்டபாணி என்பவர் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
இவர்  சில ஆண்டுகளுக்கு முன்பு சுக்காம்பட்டி ஊராட்சியில்  300 ஏக்க நிலத்தை

போலி ஆவணங்கள்   தயாரித்து பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளர் உட்பட நான்கு பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு  அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது என்றும்
இந்த நிலையில் அயலூர் பகுதியில் 9 1/2 சென்ட் நிலம் பத்திரம் பதிவு செய்து கொடுக்க
,சார் பதிவாளர் .40 ஆயிரம்  ரூபாய் செலவாகும் கூறியுள்ளார்.. அதன் பின்னர்
வடமதுரை சார் பதிவாளர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்த , பத்திரப்பதிவு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பத்திரப்பதிவு தொடர்பாக

ஆவண எழுத்தர் கோதண்டபாணி சொல்வது போல் செய்யும்படி சார்பதிவாளர் அனுப்பி வைத்துள்ளார் . அதன் பின்னர் கோதண்டபாணி 40 ஆயிரம் ரூபாய் பத்திரப்பதிவு செலவு ஆகும் என கூறி  பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை பல மாதங்களாக கொடுக்காமல் கோதண்டபாணி காலதாமதம் ஆக்கியுள்ளார் என்றும்
கோதண்டபாணியிடம் பத்திரத்தை கேட்ட போது லஞ்சம் தராததால் ஆவணத்தை நிலுவையில் வைத்துள்ளதாகவும்,
தற்போது  4 லட்சம்  ரூபாய் பணத்தை கொடுத்தால் தான் பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை தருவேன் எனக் கூறியதாகவும்
இதே போல் கோதண்டபாணியிடம் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் . தொடர்ந்து சட்டவிரோதமாக முறைகேடாக நடந்து கொள்ளும்  பத்திர எழுத்தர் ஆவண எழுத்தர் கோதண்டபாணியின் அலுவலகத்தை சீல் வைத்து அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வந்து மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத மனை ஏதும் பதிவு செய்யப்பட்டு லஞ்சம் ஊழல் முறைகேடு நடந்துள்ளதா என    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லஞ்சம் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு  பொதுமக்கள் அச்சமின்றி நிம்மதியாக சென்று வர முடியும் என்பது தான் நிதர்சனமாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் பத்திரப்பதிவு உயர் அதிகாரிகள் மற்றும் பத்திரப்பதிவு ஐ ஜி நடவடிக்கை எடுப்பார்களா? போலி ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மற்றும் ஆவண எழுத்தாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Back to top button