காவல் செய்திகள்

ஈரோடு நகர துணை காவல் கண்காணிப்பாளரின் சரித்திர சாதனைகளும் காத்திருக்கும் சவால்களும்!?சட்டவிரோதமாக நடைபெறும் ஆன்லைன் லாட்டரி மற்றும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க தீவிரம் காட்டும் டிஎஸ்பி ஆனந்தகுமார்!

குற்றச் செயல்களுக்கு எதிராக அதிரடி காட்டும் டி.எஸ்.பி. ஆனந்தகுமார்….

DSP.ஆனந்தகுமார்
ஈரோடு

ஈரோடு நகர  டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மக்களோடு மக்களாக பயணிக்க தொடங்கியதோடு குற்றச்செயல்
களைத் தடுக்க தனி கவனம் செலுத்தினார். பொதுமக்களின் தகவலுக்கும், பத்திரிகையாளர்களின் தகவலுக்கும், சமூக ஆர்வளர்கள் தகவலுக்கும் ரகசியம் காத்து முக்கியத்துவம் கொடுத்ததோடு, அதிரடி நடவடிக்கையிலும் இறங்கினார்.
.
1996 -ல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த ஆனந்தகுமார், தொடக்கத்திலேயே பல்வேறு குற்ற வழக்குகளை கண்டுபிடித்தும், குற்றவாளிகளை கைது செய்தும் தனது அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினார். அதன் பிறகு குற்றாலத்தில் பணியின் போது, சீசன் நேரங்களில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்து பொதுமக்கள் மற்றும் உயரதிகாரிகளின் பாராட்டுதலை பெற்று உள்ளார்.

2005-ல் காவல் ஆய்வாளராக பதவி உயர்வில், திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் பணி மற்றும்  குற்ற புலனாய்வு துறையிலும் பணிபுரிந்த போது 23 குற்றவாளிகளை குண்டர் தடுப்புத் சட்டத்தில் கைது செய்து அனைவரின் பாராட்டுதலை பெற்றார். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ள ஆலங்குளம், சுரண்டை பகுதிகளில் நடந்த இரண்டு கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, ஆயுள் தண்டனை பெற்றுத் தந்துள்ளார். பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ரவுடிகள், சமூக விரோதிகளை கைது செய்து தண்டனை பெற்று தந்த ஆனந்தகுமார், குறிப்பாக 9 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட ஒரு கொலையை கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்து குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமானார்.

தமிழ்நாட்டில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்திய 9 பேர் தலை துண்டித்துக் கொலை வழக்கு மற்றும் ஆம்பூர் கார் கொள்ளையன் சரவணனை சினிமா காட்சி போல் சேஸ் செய்து கைது போன்ற வழக்குகளை மிகவும் சாதுர்யமாக மிக பெரிய ரவுடிகளை கைது செய்து தண்டனை பெற்று தந்திருக்கிறார் ஆனந்த குமார்.

2012-ம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய மிகப்பெரிய குற்றச் சம்பவமான தர்மபுரி சாதி கலவர வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்க பட்ட ஆனந்த குமார் 284 பேரை கைது செய்ய உதவி செய்துள்ளார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை விசாரணை செய்து, வழக்கில் தொடர்புடையவர்
களை ஆந்திர மாநிலம் புத்தூரில் தடம் அறிந்து கைது என ஆனந்த குமாரின் திறமையை பாராட்டி 2013 -ம் ஆண்டு காவல்துறை துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வுடன், ரூ.5 லட்சம் வெகுமதியும் வழங்கி தமிழக முதல்வர் பாராட்டி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த குமார் துணை கண்காணிப்பாளராக பல்வேறு வழக்குகளில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து 2016-ம் ஆண்டு சென்னை ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கு, அதே ஆண்டு கோவை முக்கிய பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்குகளில் தனிப்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டு கண்டுபிடித்து கொடுத்துள்ளார்.

2019 முதல் 2021 வரை சேலம் வடக்கு சரக காவல்  துணை  ஆணையாளராக பணிபுரிந்த காலத்தில் அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, வீராணம் மற்றும் அம்மாபேட்டை காவல் நிலையங்களில், பொதுமக்கள் தங்களது புகார் செய்ய காவல் ஆய்வாளர்களிடம் செல்லாமல், நேரடியாக ஆனந்தகுமார் ஏ.சி.யிடம் சென்று கொடுத்து தீர்வு காண்பார்கள் என்றால், பொதுமக்களிடம் எந்தளவு பெயர் எடுத்துள்ளார் என்றால் அவரது விசாரணையில் சிறந்த தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  தினசரி 100-க்கும் மேற்பட்டோர் மனுக்களை வழங்க அஸ்தம்பட்டி ஏ.சி. அலுவலகத்தில் காத்திருப்பதில் தெரியும்.

இவரது சிறந்த பணிக்காக 4 சிறப்பு பணிப் பதிவுகளும், 144  வெகுமதிகளும் பெற்றிருக்கிறார். இவற்றிற்கும் மேலாக 2012-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அண்ணா பதக்கத்தையும், பாரத பிரதமரின் மெச்ச தகுந்த பணிக்கான பதக்கத்தையும் பெற்று தமிழ்நாடு காவல்துறைக்கு சிறப்பு பெயர் பெற்று தந்துள்ளார் ஆனந்தகுமார்

ஈரோடு காவல்துறை துணை கண்காணிப்பாளராக ஆனந்தகுமார்டி.எஸ்.பி. பொறுப்பேற்றதிலிருந்து தொடர் திருட்டு,  கள்ளச் சாராயம்,
கஞ்சா விற்பனை, சந்துக் கடை,
ஆன்லைன் லாட்டரி மற்றும் ஆன்லைன் ரம்மி,  கள்ள லாட்டரி என படுபாதகமான சூழலுக்குத் தள்ளப்பட்டு வந்த ஈரோடு நகரத்தைத் தனது அதிரடி நடவடிக்கை
யின் மூலம் முற்றுப்புள்ளி  மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது இருந்து வருகிறது என்பதுதான் நிதர்சனம்.

ராஜா ஈரோடு
ஆன்லைன் லாட்டரி வியாபாரி

இதற்குக் காரணம் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி , ஆன்லைன் லாட்டரி ,நபர்களுக்கு அரசியல் முக்கிய புள்ளிகள் மற்றும் ஆட்சியிலிருக்கும் அமைச்சர்கள் வரை அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருப்பதால் இந்த சமூக விரோதிகளை முற்றிலும் ஒழிக்க ஈரோடு நகர காவல் கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது திமுக ஆட்சி வந்ததும் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்கும் பள்ளிபாளையம் ராஜா மற்றும் கருங்கல்பாளையம் செந்தில் இருவரும் திமுக கட்சியில் இணைத்துக் கொண்டு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு ஈரோடில் கவுன்சிலர் சீட் திமுகவில் கேட்டதாகவும் அதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியில் மறுக்கப்பட்டதாக தகவல் வந்தது. மாவட்ட கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அந்தப் புகைப்படங்களை தங்களது வாட்ஸ் அப்பில் வைத்துக் கொண்டு காவல்துறையை மிரட்டி வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.. இவர்கள் மீது பல புகார்கள் பல முறை மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்து எந்தப் பயனும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து தற்போது வரை வேறு வேறு மின்னஞ்சல் மூலம் தங்களது ஆன்லைன் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அப்படி இருந்தும் தற்போது ஈரோடு நகரில் அங்கொன்றும் இங்கொன்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஈரோடு நகரில் மிகவும் சாமானிய பொதுமக்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டது ஆன்லைன் லாட்டரியில் தான். ஆன்லைன் லாட்டரி மோகத்தால் பலர் தம் குடும்பங்களை இழந்து தற்போது வாழ்வாதாரம் இல்லாமல் இருப்பதுதான் மிக வேதனையாக இருக்கிறது. பலமுறை ஆன்லைன் லாட்டரி விற்பனை நம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியிட்டிருந்தோம் . இது சம்பந்தமாக ஈரோடு மாவட்ட திமுக அமைச்சர் முத்துசாமி அவர்கள் அலுவலகத்தில் உள்ளவர்கள் பள்ளிபாளையம் ராஜா காட்சியில் மட்டும் இணைந்தார் அவருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை அவருக்கு கட்சிக்கும் எங்களுக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் தகவல் கொடுத்தனர். இது சம்பந்தமாக பள்ளிபாளையம் ராஜா அவரிடம் நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் விற்கவில்லை யாரோ இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பெயரை நான் சொல்ல மாட்டேன் என்று கூறினார் ஆனால் நாம் களத்தில் விசாரித்தபோது பள்ளிபாளையம் ராஜா 5 நபர்களை வைத்துக் கொண்டு வேறு வேறு இடங்களில் அலுவலகம் வைத்து ஆன்லைன் லாட்டரி ஆதாரத்தை படுஜோராக செய்து வருவதாகவும் குறைந்தது ஒரு நாள் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் வருமானம் வருவதாகவும் இதனால் சாதாரணமாக இந்த பள்ளிபாளையம் ராஜா தற்போது பல கோடிகளுக்கு அதிபராகவும் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். எது எப்படியோ சாமானிய அன்றாடம் கூலித்தொழில் வேலை செய்து சம்பாதிக்கும் பல நூறுகளை இதுபோன்ற சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரியில் இழந்து தன் குடும்பங்களை இழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாகி பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வாழ்வாதாரம் இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தற்போது உள்ள ஈரோடு நகர டிஎஸ்பி ஆனந்தகுமார் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆன்லைன் லாட்டரி முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும் பொறுத்திருந்து பார்ப்போம் அவரது பணியை!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button