ஊர் பெயர் இல்லாத கிராமத்திற்கு திருவிழா நடத்த அனுமதி தரமுடியாது கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டாசியர்! ஊர் பெயரை அரசிதலில் சேர்க்க ஊர் பொதுமக்கள் கோரிக்கை!
பரவேப்பனப்பள்ளி என்ற ஊர் பெயரை மாற்றி வள்ளுவர்புரம் என்ற பெயரை அரசிதழில் சேர்க்க ஊர் கிராம பொதுமக்கள் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் கோரிக்கை!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா
மேகல சின்னம்பள்ளி அஞ்சல் வள்ளுவர்புரம் கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா வில் உள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் மூன்றாயிரம் குடும்பங்கள் வசிக்கின்றதாகவும் அந்த கிராமத்தில் வசிக்கின்றவர்கள் காலம் காலமாக கிராமத்தின் பெயரை வள்ளுவர்புரம் என்று அழைத்து வருவதாகவும் இதனால் ஊர் திருவிழாக்கள் நடத்த காவல்துறை மற்றும் வட்டாட்சியரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தால் வள்ளுவர்புரம் என்ற ஊர் பெயர் அரசிதலில் இல்லை என்று கோரிக்கையை நிராகரிப்பதாகவும் பரவேப்பனப் பரப்பள்ளி என்ற பெயர் ஜாதி பெயரை மையப்படுத்தி இருப்பதாலும் எங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் பரவேப்பனபள்ளி என்ற பெயரை பயன்படுத்துவதால் அங்கு படிக்கும் மற்ற மாணவர்கள் எங்கள் பிள்ளைகளை ஜாதி ரீதியாக பார்ப்பதாகவும் இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் எங்கள் கிராமத்தில் எந்த ஒரு அரசு சலுகைகளும் கிடைக்கவில்லை என்றும் ஆகவே உடனே பரவேப்பனப்பள்ளி என்ற பெயரை நீக்கி வல்லுவர்புரம் என்ற பெயரை தமிழக அரசிதழில் (gadget) சேர்த்து (registered)பதிவு செய்து தருமாறு ஊர் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பர்கூர் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை செய்து பெயரை மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
எது எப்படியோ தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் திமுக கட்சி தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஜாதி ரீதியான பெயர் என்பதால் கிராமத்தில் படிக்கும் மாணவர்களின் நலன் இச்சமுதாயத்தில் பல மாணவர்களின் மத்தியில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆகவே மணம் புண்படுத்துவது போல் உள்ள பரவேனப்பள்ளி கிராம ஊர் பெயரை மாற்றி கிராம பொதுமக்கள் கேட்கும் வள்ளுவர்புரம் பெயரை தமிழக அரசு இதழில் மாற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கையாகும்!