ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக மின் இணைப்பை வழங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள பேராவூரணி மின் உதவி இயக்குனர்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் தங்கம் தென்னரசு!?
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக மின் இணைப்பை வழங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள பேராவூரணி மின் உதவி இயக்குனர்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்ன வாசல் ஊராட்சியில் மா.செல்வம் த/பெ.மாணிக்கம் என்பவரின் இடம் உள்ளது.
(சர்வே எண் : 200 / 2 B ஏர்ஸ் 0, 19,5
சர்வே எண் 200 | 2 C0, 19,0 சர்வே எண் ஆக மொத்தம் 195.5 ஏர்ஸ்) மாணிக்கம் தன்னுடைய சொந்த விவசாய நிலத்திற்கு மின்சார வாரியத்தில் உரிய டெபாசிட் தொகை செலுத்தி உரிய அனுமதியுடன் 15 HP கொண்ட தனி டிரான்ஸ்பார்மர் உடன் மின் இணைப்பு வாங்கியுள்ளார்.
மாணிக்கம் விவசாயம் செய்யும் நிலத்தில் ஏற்கனவே இருந்த தென்னை மரங்கள் புயலால் அனைத்து தென்னை மரங்கள் சாய்ந்து விட்டதால் தற்போது தென்னை கன்றுகள் வைத்து தற்போது வளர்ந்து வருகிறது.
மாணிக்கம் விவசாயம் செய்யும் இடத்தில் தகர சீட் அமைத்து கூரை வீடு கட்டி அங்கேயே குடியிருந்து வருகிறார்.
(மாணிக்கம் வீட்டின் கதவு எண்:3/128 கொண்டது.) மாணிக்கத்தின் விவசாய நிலத்தில் உள்ள கூரை செட் அருகே நிலம் வைத்துள்ள
மதியழகன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு போர் போட்டு மீன் இணைப்பு கேட்டுள்ளார் .
இதனை அறிந்த மாணிக்கம் பேராவூரணி உதவி மின் பொறியாளருக்கு கோரிக்கை மனு கொடுத்து உள்ளார். அதில்
நான் விவசாயம் செய்துவரும் இடத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மதியழகன் என்பவருக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணிக்கம் கொடுத்த மனுவை பெற்று கொண்ட மின் பொறியாளர் சென்று பார்வையிட்ட பின்பு கூரை செட் அமைத்துள்ள வீட்டுக்கு மேல தான் மின்கம்பிகள் கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார். அதற்கு மாணிக்கம் ஏற்கனவே இந்தப் பகுதியில் அதிக வேகத்துடன் காற்று புயல் அடிக்கடி வருவதால் மின்கம்பிகள் அறுந்து தகரம் போட்டு உள்ள கூரை வீட்டிற்கு மேல் விழுந்து விட்டால் எங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் ஆகவே குடியிருக்கும் வீட்டிற்கு மேலே கொண்டு செல்லாமல் தனியாக மின் இணைப்பை கொண்டு செல்ல கூறியுள்ளார்.
ஆனால் மாணிக்கம் அவரது மகன் செல்வம் யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து கடந்த 22:06:2023 தேதியன்று இரவு 7 மணிக்கு உதவி மின் பொறியாளர் ஹரிசங்கர் மின் ஊழியர்களை அழைத்துச் சென்று
கூரை வீட்டிற்கு மேலே மின் கம்பிகளை கொண்டு வந்து சட்டவிரோதமாக மின் இணைப்பை வழங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்து இரவு 9 மணிக்கு திரும்பி சென்றுள்ளனர்.
சட்டவிரோதமாக மின் இணைப்பு வழங்குவதற்கு பேராவூரணி மின் உதவி பொறியாளர் ஹரிசங்கர் மற்றும் மின் உதவி இயக்குநர் கமலக்கண்ணன் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் தகவல் !அதுமட்டுமில்லாமல் மின் இணைப்பு வழங்க வந்த மின் ஊழியர்கள் 50 ஆயிரம் மதிப்புள்ள மோட்டர் பம்பை திருடி சென்று விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
குடியிருக்கும் கூரை செட் மேலே செல்லும் மின் கம்பிகளினால்
மாணிக்கம் குடும்பத்திற்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்றும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மாணிக்கத்தின் குடும்பம் இருப்பதாகவும் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் பேராவூரணி மின் பொறியாளர் தான் என்றும் சட்டவிரோதமாக வீட்டிற்கு மேலே மின் கம்பிகளை கொண்டு சென்ற மின் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் மாணிக்கம் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னால் பேராவூரணி மின் உதவி இயக்குனர் கமலக்கண்ணன் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கமல கண்ணன் மீதும் உதவி மின் பொறியாளர் ஹரி சங்கர் மீதும் பல்வேறு புகார் பேராவூரணி பகுதியில் உள்ள சமூக உள்ளது. ஆணைக் காடு என்ற கிராம பகுதியில் மின் கம்பங்களை இரண்டு பாகங்களாக துண்டித்து வீடு கட்டியுள்ளனர். மின்கம்பம் உங்களுக்கு ஏது என்று கேட்ட நிலையில் மின் கம்பங்களை நாங்கள் விலை கொடுத்து வாங்கி வீடு கட்டி உள்ளோம் என்று கூறியுள்ளனர் இதனை பேராவூரணி மின் உதவி இயக்குனரிடம் தெரிவித்துள்ளனர், ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று சமூக ஆர்வாளர்கள் வேதனையுடன் சொல்கின்றனர், பேராவூரணி மின்சார ஊழியர்களை பொறுத்தவரை இந்தியன் படத்தில் செந்தில் கூறுவதுபோல் முக்கியமான பேப்பர் இல்லை இருந்தால் தான் வேலை நடக்கும் எனவும் பேராவூரணி மின் நிலையத்தில் லஞ்ச ஊழல் கொடிக்கட்டி பறப்பதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜகோப் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.