கலவரத்தை தூண்டியது காவல் துறைதான்! பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் சோழவந்தான் காவல்துறை மீது குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா காவல்துறை தென்மண்டல ஐஜி.
மதுரை வாடிப்பட்டி
மேட்டு நீரேத்தான் கிராமத்தில் பாரம்பரியமாக நடந்து வரும் அய்யனார் கோயில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்து வருகிறது. ஆனால் பாரம்பரியமாக நடந்து வரும் மஞ்சுவிரட்டு திருவிழாவை 18.8.2024 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் https://youtube.com/watch?v=cq9iL8R4S4Y&si=XH2`0qlZS7mq3ZPk1
எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் ஒரு தரப்பினர் புகார் கொடுத்திருந்தனர். ஆனால் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை வராமல் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து வந்ததால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எதிர் தரப்பினர் திடீரென கத்தை அருவாள் கத்தி பாட்டில்கள் போன்ற ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் புகுந்து தாக்கியதில் பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதங்களுடன் தாக்குதல் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான பின்பும் குற்றவாளிகளை கைது செய்யாத சோழவந்தான் காவல்துறையை கண்டித்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் 200க்கும் மேற்பட்டோர் ஆண்கள் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை கைது செய்யாமல் மெத்தனம் காட்டுவதாகவும் கலவரத்திற்கு காவல் துறைய காரணம் என்று காவல்துறை மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புரட்டாசி மாதம் நடக்கும் அய்யனார் கோயில் வட மஞ்சுவிரட்டு பிரச்சனையால் மேட்டு நீரேதான் கிராமமே பதட்டமான சூழ்நிலையால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மதுரை மாவட்டம் திருவிழா 18.8.2024 அன்று நடைபெறுவதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் ஊர் பாரம்பரிய முறைப்படி புரட்டாசி திருவிழாவான அய்யனார் கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம் வழக்கத்தை மீறி மற்ற நாளில் மஞ்சுவிரட்டு திருவிழாவுக்கு அனுமதி அளித்தார் பிரச்சனைகள் ஏற்படும் என காவல்துறையிடம் புகார் அளித்ததாக தெரிகிறது இதனை மீறி மற்றொரு தரப்பினர் திருவிழாவிற்கு முன் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்ததாக தெரிகிறது இதனைத் தொடர்ந்து இரு தரப்பையும் அழைத்து பேசிய சோழவந்தான் காவல்துறையினர் கிராம வழக்கப்படி வழக்கம்போல் மஞ்சுவிரட்டு நடத்திக் கொள்ளுமாறும் வேறு நாட்களில் நடத்தக் கூடாது எனவும் அறிவுரை கூறி அனுப்பிவிட்டனர்
இதன் காரணமாக மஞ்சுவிரட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் அமைச்சர் மூர்த்தியிடம் சென்று முறையிட்டனர் அவர் விழா பாரம்பரிய முறைப்படியே நடத்த வேண்டும் என்றும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தக் கூடாது என கூறியதாக கூறப்படுகிறது .
அமைச்சரே போட்டி நடத்தக்கூடாது என சொல்லி விட்டதால் காவல்துறையினர் மஞ்சுவிரட்டு திருவிழாவிற்கு அனுமதி மறுத்தனர்
இந்த விழாவிற்கு நோட்டீஸ் பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த நிலையில் விழாவிற்கு அனுமதி கிடைக்காததால் விரக்தியில் இருந்த ஒரு தரப்பினர் சில நாட்களாக எதிர் தரப்பினரிடையே சிறிய சிறிய வாக்குவாதங்கள் மோதல்கள் வந்ததாக கூறப்படுகிறது
இது குறித்து மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தரப்பினர் காவல் துறையை சோழவந்தான் காவல் துறையை அணுகி மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி கேட்டவர்கள் தங்களை தாக்க வருவதாகவும் ஆகையால் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 20க்கும் மேற்பட்ட நபர்கள் மஞ்சுவிரட்டுக்கு எதிர் தரப்பினர் மீது கல் கட்டை பாட்டில் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி டீக்கடை ,வாகனங்கள் போன்றவைகளை அடித்து நொறுக்கி உள்ளனர் .
இதில் காயம் அடைந்தவர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
இதனால் பாதிக்கப்பட்ட மற்றொரு தரப்பினர் காவல்துறை நடவடிக்கை எடுக்காததை காரணம் காட்டி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்ட பின்னர் காவல் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்
ஆனால் போராட்டக்காரர்கள் குற்றவாளியை கைது செய்யும் வரையில் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் என்று கூறிவிட்டு அங்கேயே சாலையின் ஓரத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்
மதியம் ஒரு மணி அளவில் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்
இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்த மேட்டு நீரேத்தான் கிராமத்தை சேர்ந்த சடையாண்டி ராமச்சந்திரன் சூர்யா உள்ளிட்டவர்களின் புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் பாரம்பரியமாக நடந்து வரும் வட மஞ்சு விரட்டு நடத்தாமல் மாறாக வட மஞ்சுவிரட்டு நடத்த வேண்டும் என கூறிய பிரச்சனையால் இருதரப்பு மோதிக் கொண்டதில் மேட்டு நீரேத்தான் கிராமமே கலவர பூமியாக மாறி பொதுமக்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியே செல்லும் அளவிற்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்.
மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி கிடைக்காத கோபத்தில் உள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை தாக்கலாம் என மூன்று நாட்களுக்கு முன்பே காவல்துறையிடம் புகார் அளித்திருந்தோம் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நிலைமை கை மீறிப் போய்விட்டது ஆகையால் இந்த பிரச்சனைக்கு முழுக்க முழுக்க சோழவந்தான் காவல்துறையினரே காரணம் இப்பவும் தாக்கியவர்களின் வீடியோக்களை காவல்துறையிடம் கொடுத்த பின்பும் அவர்கள் யார் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது பிரச்சனையை மேலும் சிக்கலாகவே ஆக்கும் ஆகையால் மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் மதுரை மாவட்ட எஸ்பி தலையிட்டு உடனடியாக தாக்கியவர்களை கைது செய்து உரிய விசாரணை மேற்கொண்டு கிராமத்தில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.