காவல்துறைக்கு சவாலாக இருந்த வழிப்பறி கொள்ளையர்கள்! தட்டி தூக்கிய மதுரை வாடிப்பட்டி காவல்துறையினர்!
கடந்த சில வருடங்களாக மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மது மற்றும் கஞ்சா போதையில் தொடர் வழிப்பறி செய்து வருபவர்கள் காவல்துறைக்கு தொடர்ந்து சவாலாக இருந்து வருகின்றனர்.
கடந்த ஒரு சில மாதங்களாக காவல்துறைக்கு சவாலாக இருந்த வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர்களை தேடும் பணியில் வாடிப்பட்டி காவல்துறை உதவி காவல் ஆய்வாளர்கள் மாயாண்டி மற்றும் முருகேசன் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட ஒரு சில நபர்கள் கடந்த கடந்த மாதத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை வாடிப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கச்சைகட்டி செல்லும் வழியில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே அருண் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். பூ வியாபாரம் செய்து வரும் வளவன் பிரபு இரண்டு பேரும் பேசி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அந்த இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ், சந்துரு, சந்தோஷ் மூன்று பேர்களும் மது போதையில் இருந்ததாகவும் அருண் என்பவரிடம் நண்பர் ஒருவருக்கு அவசரமாக பேச வேண்டும் என்று செல்போன் கேட்டதாகவும் அருண் என்னிடம் செல்போன் இல்லை என்றும் கூறியிருக்கிறார் அதன் பின்பு வளவன் பிரபுவிடம் கேட்டுள்ளனர் அதற்கு என் செல்லில் போதுமான பணம் இல்லை பேச முடியாது என்றும் கூறியுள்ளார். உடனே மூன்று பேரும் சேர்ந்து அருண் வளவன் பிரபு இரண்டு பேரையும் தாக்கியுள்ளனர் . அதன் பின்னர் அருகே உள்ள கல்லை எடுத்து முகத்தில் தாக்கியுள்ளனர் இதில் வழி தாங்க முடியாமல் இரண்டு பேரும் கூச்சலிட்டதால் வழிப்பறி செய்ய வந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்று விட்டனர்.
உடனே இரண்டு பேரும் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் அதன் பின்பு இரண்டு பேரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்த காவல் துறையினர் தப்பி ஓடிய மூன்று பேரையும் தேடி வந்த நிலையில் அவர்களது தொலைபேசி என்னை வைத்து பார்த்தபோது அவர்கள் மூன்று பேரும் கோயம்புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்ததாகவும் உடனே தனிப்படை காவல்துறையினர் கோயம்புத்தூருக்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த மூன்று பேரையும் பிடித்து அழைத்து வந்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போது இந்த மூன்று பேரும் தொடர் வழிப்பறி மற்றும் கொலை கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் காவல்துறைக்கு தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் மீதும் பல வழக்குகள் இருப்பதாகவும் அதன் அடிப்படையில் காவல்துறையினர் மூன்று பேர் மீதும் குற்ற எண்240/2023 இந்திய தண்டனை சட்டம் IPC 394 கீழ் வழக்கு பதிவு செய்து வாடிப்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் திண்டுக்கல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிப்பறி செய்து வந்த நபர்களை கைது செய்த காவல்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.