ஆன்மீகத் தளம்

குட்டி தாராவி”யாக மாறி சுகாதார சீர்கேட்டால் சீரழிந்து வரும் பழனி ஆன்மீக தளம்! அதிர்ச்சி வீடியோ!
 

பழனி இடும்பன் குளம் அருகே   தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக  சுமார் 500க்கும் மேற்பட்ட

வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தற்காலிக சிறு சிறு டெண்டுகள் போட்டு மிக நெருக்கமாக மும்பை தாராவியில் வசித்து வருவது போல
குடும்பத்துடன் தங்கியிருப்பதால்
தற்போது அந்தப் பகுதி

குட்டி தாராவி”யாக மாறி உள்ளது.

ஆனால்  இங்கு வசிப்பவர்களுக்கு
கழிப்பறை, குடிதண்ணீர் ,மருத்துவம் போன்ற
வசதி எதுவுமே இல்லை என்றும்
குறிப்பாக கழிப்பறை வசதி இல்லாததால் , பொது இடங்கள் மற்றும் இடும்பன் குளம் சுற்றுச்சுவர் மற்றும் திறந்தவெளியில்

மலம் கழிக்கும்  இடமாக மாறி உள்ளதால்  இந்தப் பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு, நோய்கள் பரவுதல் மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும்
பழனி கொடைக்கானல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இடும்பன் குளம் அமைந்துள்ள இடத்திலிருந்து பழனி ஆண்டவர் மலைக் கோயிலுக்கு வரும்  சாலை முழுவதும்

 தேங்கி கிடக்கும் குப்பைகள்  அகற்றப்படாமல் மலை போல் காட்சியளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளில் உள்ள காய்கறி கழிவுகளை மாடுகள், பன்றிகள் நாய்கள் சாப்பிடுவதால் கால்நடைகள் மற்றும் விலங்குகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும். மட்டுமில்லாமல் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது என்றும் இதனால்
தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்வதாகவும் ஆகவே
சாலையோரம்  பல நாட்களாக அகற்றப்படாமல் தேங்கி மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அது மட்டுமில்லாமல் சமீப காலங்களில்
பழனி சுற்றுவட்டாரத்தில் திருட்டு, குட்கா போதைப் பொருள்கள் சட்டவிரோதமாக  விற்பனை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும்  இதனால் திருட்டு போன்ற குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பை அதிகரித்து
பழனி நகர காவல்துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப் படுத்தி வருகின்றனர்.
தற்போது பழனி சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களில்  இடும்பன் குளம் அருகே குடிசை போட்டு தங்கி இருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல்  ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பழனிக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள்  வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் . குறிப்பாக  சுற்றுலா வரும் வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும்
தடை செய்யப்பட்ட போதை பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகவும் கோவில் விசேஷ நேரங்களில் கூட்ட நெரிசல்களை பயன்படுத்தி திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும்  அது மட்டும் இல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பழைய இரும்புப் பொருள்களை திருடி விற்பனை செய்து வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ஒரு சில வடமாநில கும்பல்களால்  பழனி சுற்றுவட்டார பகுதிகளில்
தனியாகச் செல்லும் பெண்கள், பூட்டிய வீடுகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆகையால்
தொடர் குற்றங்களால் ஏற்படும் அச்சத்தைப் போக்கவும்
பழனி சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்  பழனி இடும்பன் குளம் அருகே தற்காலிக குடிசை அமைத்து வசித்து வரும்
வடமாநிலத்தினரை வெளியேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் சார்பில் இடும்பன் குளம் அருகே வசித்து வரும்
வடமாநிலத்தினரை வெளியேறச் சொல்லி இரண்டு முறை அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் அவர்கள் வெளியேறவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
குடிசை போட்டு தங்கி இருக்கும் வட மாநிலத்தினரை வெளியேற்றுவது என்பது
வெறும் பழனி மக்களின் வேலை-வாழ்வுரிமை சார்ந்த சிக்கல் மட்டுமல்ல பழனியை  பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை என்பதையும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி  நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.


எது எப்படியோ திறந்தவெளி கழிப்பிட பழக்கத்தை ஒழிக்க மத்திய அரசின்
தூய்மை இந்தியா இயக்கம்  என்ன ஆனது என்றும்
அதுமட்டுமில்லாமல்
புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிக்கு,
நடமாடும் கழிப்பறைகள் (Mobile Toilets), சூரிய ஒளி விளக்குகள், மற்றும் கட்டுமான சட்டப்படி சுகாதார வசதிகள் (WASH facilities) வழங்குவது அவசியம், ஆனால் இந்தத் திட்டம் தற்போது என்ன ஆனது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

Related Articles

Back to top button