கேரளாவுக்கு கடத்த இருந்த சுமார் 30 டன் ரேஷன் அரிசி கோவையில் பறிமுதல்!
கோவை மாவட்டம் அரசூர் அருகே ஒரு குடோனில் சுமார் 30 டன் ரேஷன் அரிசி குடிமைப்-பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி வருவதாக பல புகார்கள் வந்து கொண்டிருந்த நிலையில் கோவை அரசூர் பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்-பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி வன்னிய பெருமாள் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின் பெயரில் தனிப்படை காவல்துறையினர் சோதனை இட்டது அந்த குழுவில் சுமார் 30 டன் ரேஷன் இருந்ததை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 2022 ஏப்ரல் மாதம் கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 30 டன் அரிசியை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஐஎஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்ரோவ் மற்றும் குழு மற்றும் சிபிஇ பிரிவு இன்ஸ்பெக்டர் குழு நடத்திய சோதனையில் TN 67 AR 0165 மினி லாரியில் 200 பைகள் ஒவ்வொன்றும் 50 பைகள் (10000kgs Pds அரிசி)
220 பைகள் ஒவ்வொன்றும் 50 கிலோ
மொத்தம் 11000
உடைந்த அரிசி
தலா 50 கிலோ 140 பைகள்
7000 கிலோ
மொத்தம் 28000 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
அரசூர், பொதியம்பாளையம், சூரமடை தோட்டம் சரஸ்வதி குடோன் அரிசியை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த நபர்கள் பெயர்
1) சக்தி
S/o சுப்பிரமணியன்
கடலாடி (தலைமறைவு)
2)லிங்கேஸ்வரன்
கடலாடி
(தலைமறைவு)
3) கணேசமூர்த்தி
ராம நாடு
(தலைமறைவு)