லஞ்ச ஒழிப்புத் துறை

சமூக நலத் துறையில் நூதன முறையில் 6 கோடி வரை சுருட்டிய பலே கில்லாடி பெண் ஊழியர்! கதி கலங்கிய கடலூர் மாவட்ட ஆட்சியர்!


8 ஆண்டுகளில் 6 கோடி சுருட்டியது எப்படி!?.. அதிர்ச்சித் தகவல்!

ஆறு கோடி மோசடி செய்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பெண் ஊழியர் அகிலா


கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில் கணினி இயக்கும் பணிக்கு 2012 ஆம் ஆண்டில் அதே ஊரைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணை சேர்த்துள்ளனர்.


அதன் பின்பு நூதன முறையில் அரசு திட்டத்தில் முறைகேடு செய்து 6 கோடி ரூபாய் பணம் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பத்து வருடங்களுக்கு முன்பு நான்காயிரம் ரூபாய் வீட்டு வாடகை தர முடியாத ஒரு சாமானிய பெண்
ஒப்பந்த முறையில் பணியில் சேர்ந்த பெண் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் .


திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த முறையில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணியில் சேர்ந்த அகிலா கடந்த எட்டு வருடங்களில் மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல அங்குள்ள உயர் அதிகாரிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளார்…
கடந்த 8 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்த இவர், அரசு திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளுக்கும், அதன் மூலம் பயனடையும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்திருக்கிறார்…
சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகையில் ஆரம்பித்து மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் உதவித் தொகை பெற்றுதரும் திட்டத்தை கவனித்து வந்த அகிலாவுக்கு… விண்ணப்பங்களை அப்ரூவல் செய்வதும், பணம் பரிமாற்றத்திற்காக அதிகாரிகளிடம் கையெழுத்து பெருவது தான் வேலை.அதன்பிறகு இந்த அலுவலகத்தில் சுமார் 8 வட்டாட்சியர்கள் பணிக்கு வந்து மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர். சிலர் ஓய்வு பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும், அப்பாவி விதவை பெண்களையும், வயதான விவசாயிகளையும் பார்த்து பார்த்து தேர்வு செய்த அகிலா… அவர்களின், விவரங்களை சேகரித்து கொண்டு விண்ணப்பத்தை நிரப்பும் போது, படிவத்தின் வங்கி கணக்கில் மட்டும் தன்னுடைய வங்கி கணக்கை பூர்த்தி செய்திருக்கிறார்…
இவ்வாறு தொடர்ந்து தனது கணவர், அம்மா, உறவினர்கள் என அவர்களின் வங்கி கணக்கு விபரங்களை தொடர்ந்து பூர்த்தி செய்த அவர், பெரும் மோசடிக்கான வேலையில் இறங்கியுள்ளார்.
விண்ணப்பங்களை மேல் அதிகாரிகளிடம் கணக்கு காட்டி, . இந்த அலுவலகத்திலிருந்து மாதந்தோறும் முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு உதவித்தொகை அனுப்பப்படுகிறது. அதேபோல் விபத்தில் இறந்தவர்களுக்கு 1,02,500 ரூபாய் காப்பீட்டுத் தொகை, கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை என இந்த அலுவலகத்தின் மூலம் மாதந்தோறும் சுமார் 20,000 பேருக்கு மேல் உதவி பெறுகிறார்கள்.
அதற்கான உதவித்தொகையை பெற்று, சுமார் 8 ஆண்டுகளாக 6 கோடி ரூபாய் வரை பணம் மோசடி செய்துள்ளார்.
வட்டாட்சியர் அலுவலகம் மட்டுமில்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளார்.
உதவித்தொகை இன்னும் தங்களுக்கு வரவில்லை என தேடி வரும் பொதுமக்களை ஏதேதோ காரணம் காட்டி இழுத்தடித்து வந்திருக்கிறார்…
மோசடி பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு சொகுசு வீடு… லட்சக்கணக்கில் தங்க நகைகள்…. மாதம் ஒருமுறை உயர்தரத்தில் சொகுசு சுற்றுலா என சொர்க்க வாழ்க்கையுடன் உல்லாசமாக வலம் வந்துள்ளார்.
கணவனை இழந்து வாழ்க்கை சிதைந்து போன பெண் ஒருவரின் குடும்ப வறுமையை பழி தீர்த்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பெண்ணடத்தை சேர்ந்த அந்த விதவை பெண், உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும் பணம் வராததால் சந்தேகமடைந்த நிலையில், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் நடப்பதாக கூறி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்திருக்கிறார்…
இது குறித்து, விசாரணை நடத்தை கோட்டாட்சியருக்கு ஆட்சியர் உத்தரவிட்டபோது தான் இந்த நூதனா மோசடி செய்தது வெளிவந்துள்ளது.
கம்யூட்ட ஆப்ரேட்டர் அகிலா, அவரின் கணவர் வினோத்குமார், அகிலாவின் தாயார் விஜயா மற்றும் உறவினர்கள் மணிவண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோரை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூண்டோடு தூக்கி கைது செய்துள்ளனர்.

ஐந்து பேரிடம் இருந்து இரண்டு கார், ஒரு டாடா ஏசி ஐந்தரை சவரன் தங்க நகைகள் மற்றும் பணம், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அனைவரையும் சிறையில் அடைத்துள்ள நிலையில்,
அகிலா 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவரை மட்டும் ஜாமினில் விடுவிக்கப் பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button