சவாலாக இருந்த கஞ்சா வியாபாரிகளை தெறிக்கவிட்டு சிம்ம சொப்பனமாக இருக்கும் உசிலம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர்! பாராட்டும் பொதுமக்கள்!!
கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனையை முற்றிலும் ஒழித்துக்கட்டி சாதிப்பாரா!!?
சவாலாக இருந்த கஞ்சா வியாபாரிகளை தெறிக்க விட்டு சிம்ம சொப்பனமாக இருக்கும் உசிலம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர்! பாராட்டும் பொதுமக்கள்!!
கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனையை முற்றிலும் ஒழித்துக்கட்டி சாதிப்பாரா!!?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட் கோட்ட காவல் நிலையத்துக்கு காவல் துணை கண்காணிப்பாளராக சில மாதங்களுக்கு முன்பு நல்லு அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட
10 காவல் நிலையம் மற்றும் ஐந்து காவல் ஆய்வாளர்கள், மற்றும் சார்பு ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள்,சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் அடங்குவர்.
உசிலம்பட்டி சுற்றி உள்ள கிராமங்களில் தடை செய்யப் பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் அமோகமாக விற்பனை நடந்துவருவதாகவும் . இதனால் படித்த இளைஞர்கள் பல பேர் கஞ்சாவிற்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் என்பதால் இளைஞர்களின் பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்க தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பல புகார்கள் வந்த நிலையில் இதை தடுப்பதற்கு காவல் துறையினர் மத்தியில் மிகவும் சவாலாக இருந்தது.
என்ன செய்யலாம் என்ற நிலையில் தான் தற்போது பொறுப்பேற்றுள்ள உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து உசிலம்பட்டி உட்கோட்ட பகுதியில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழித்துக்கட்ட உறுதி எடுத்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைத்து நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண்குமார் மற்றும் தலைமைக் காவலர் செல்வம் மற்றும் காவலர்கள் துணையுடன் உசிலம்பட்டி நகர் பகுதியில் 100 கிலோவிற்கு மேல் கஞ்சா கடத்தி வந்ததை கண்டு பிடிக்கப்பட்டது.கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
இந்த கஞ்சா கடத்தலில்சம்பந்தப் பட்ட நான்கு பேருக்கு மேல் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் சார்பு ஆய்வாளர் அருண்குமார் இரவு பகல் பாராமல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கஞ்சா கடத்தலை முழுமையாக ஒழித்துக் கட்டியே தீருவேன் என்று பொது மக்களிடம் உறுதியளித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு அவர்களுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
என்னவென்றால் கேரளா ஆன்லைன் லாட்டரி மற்றும் மூன்று நம்பர் லாட்டரி உசிலம்பட்டி நகர் பகுதியில் மிகவும் படுஜோராக நடைபெற்று வருகிறது. இதை ஏன் காவல்துறை கண்டு கொள்ளவில்லை இதனால் பல குடும்பங்களின் வாழ்க்கையே கேள்விக் குறியாக வருமையிலும் வாடி வருகின்றன.ஆகவே உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சி எடுத்து தடுத்து நிறுத்தி பல குடும்பங்களின் பெண்களின் குடும்ப வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்து வாழ வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.