சுகாதாரக் கேடு விளைவிக்கும் கெட்டுப்போன காய்கறி கழிவுகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டி வரும் அவல நிலை !நடவடிக்கை எடுக்காத உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர்.
(சுப்பிரமணி )
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
நடவடிக்கை எடுக்காத உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர்.
(சுப்பிரமணி )
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஊராட்சி ஒன்றியம்
சின்னவீரம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட, சேகர் புரம், குமார் நகர், சித்தாண்டீஸ்வரர்
லே அவுட், பெதப்பம்பட்டி ரோடு செல்வி கேஸ் குடோன் எதிரில், பொதுமக்கள் வசித்து வரும் பகுதியில்
செந்தில் என்பவர் 50 க்கும் மேற்பட்ட ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார்.
அவர் வளர்க்கும் கால்நடைகளுக்கு உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட இராஜேந்திர ரோட்டில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் கெட்டுபோன அழுகிய நிலையில் உள்ள தக்காளி காய்கறிகள் முட்டைகோஸ் ஆகியவற்றை மார் கெட்டுக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் தனது வாகனமான (அபே)மூன்று சக்கர வண்டி மூலம் தினமும் கொண்டு வந்து
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள திறந்தவெளியில் கொட்டிவிட்டு ஆடுகளை சாப்பிட செய்கிறார்.
கால்நடைகள் சாப்பிட்டது போக மீதி காய்ந்தும் அழுகை நிலையில் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதி முழுவதும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பலமுறை
உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் கொடுத்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை .
அதன் பின்பு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தோம் .ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
சம்பந்தமாக புகார் கொடுத்த மனுதாரரிடம் கேட்டபோது நாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள திறந்த வெளியில் கெட்டுப்போன அழுகிய காய்கறி கழிவுகளை கொட்டிக் கிடப்பதால் அந்த துர்நாற்றத்தால்
பெரியவர் மற்றும் சிறியவர் குழந்தைகள் போன்றோர் நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமாலும் மற்றும் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாகவும் இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு சொல்லமுடியாத துயரம் சங்கடம் போன்றவற்றை அடைந்து மனவருத்ததுடன் வாழ்ந்து வருகிறோம் .
இந்த செயலை செய்ய வேண்டாம் என்று சம்மந்தப்பட்ட நபரிடம் வாய்மொழியாக பலரும் கேட்டபார்த்துவிட்டோம். நிறுத்துவதாக இல்லை செய்துக்கொண்டே உள்ளார். மனசாட்சியில்லாமல் தொடர்ந்து காய்கறி கழிவுகளை கொட்டி வருவதால் பொதுமக்களாகிய எங்களால் மனநிம்மதியுடன் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இதுபற்றி ஆரம்ப சுகாதார ஆய்வாளர் சதாசிவம் ( பெரிய வாளவாடி, செல்எண்: 94422 43069 ) மற்றும் சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர், செல்எண்: 94862 42265 ) புகார் மூலமும் மேலும் தொலைபேசி மற்றும் நேரில் சென்று பலமுறை தெரிவித்துள்ளோம் என்பதை கு. ஆனால் இந்த செயல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே தான் உள்ளது. எவ்வித பயனும் எங்களுக்கு இல்லை.
மேற்கண்ட நபர் செய்யும் இந்த செயலால் குடியிருப்பு ஆகியவைகளை கமற்றும் குடியேறவோ மக்கள் பலர் தயங்குகின்றனர். இதனால் மேற்கண்ட பஞ்சாயத்துக்கு கெட்ட பெயரும் வருமானம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு மிக மிக அதிகமாகி கொண்டே உள்ளது. மேலும் நாங்கள் வசிக்கும் வீட்டைவிட்டு வெளியே ( தூர்நாற்றம் ) முடியாமலும் கதவுகளும் ஜன்னல்களையும் எப்போதும் மூடிவைக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட நபரை கால்நடைகளை வளர்க்க வேண்டாம் என்று பொதுமக்களாகிய நாங்கள் கூறவில்லை. அதனை இயற்கையான தூர்நாற்றம் இல்லாத உணவுகளை கொடுத்து வளர்க்குமாறும் மற்ற பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும் வளர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்
என்பதை இந்த புகார் மனு மூலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுகாதாரக் கேடு விளைவிக்கும் எந்த பொருள்களையும் கொட்டக்கூடாது என தெரிந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஏன் இருக்கிறார்கள்
என தெரியவில்லை என்றும் இது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.