இந்து சமய அறநிலையத் துறை

ஆணவத்தின் உச்சத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் பழனி கோவில் பெண் உதவி ஆணையர்  லட்சுமி மீது இந்து சமய அறநிலையத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பாரா!!?



திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் பெண் உதவி  ஆணையராக இருப்பவர் லட்சுமி.


கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு தான்  இவரது நடவடிக்கை இருக்கும் என்றும் இவர் மீது ஏற்கனவே பக்தர்கள் பொதுமக்கள் சமூக ஆர் பல புகார்கள் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு தைப்பூசம் மூன்று நாள் நிகழ்ச்சியில் பழனி மலைக்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல்துறையினரையே மிரட்டும் தோணியில் பேசியதால் காவல்துறையினருக்கும் கோவில் உதவி ஆணையர் லட்சுமிக்கு இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பின்பு பழனி டிஎஸ்பி அவர்கள் சென்று சமாதானம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்து  சர்ச்சையில் சிக்கும் பழனி தண்டாயுதபாணி கோவில் உதவி ஆணையர் லட்சுமி அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில். 
02/12/25 அன்று
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற பழனி கோவில் உதவியாளர் லட்சுமி பழனி கோவிலில் தற்காலிக ஊழியர்களாக பணியில் இருக்கும் செக்யூரிட்டிகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அந்த இடத்தில் இருப்பவர்களுக்கும் கோவில் உதவி ஆணையர் லட்சுமிக்கும்   இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை

செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது பழனி கோவில் உதவியாளர் லட்சுமி தகாத வார்த்தையில் ஒருமையில் பேசி அநாகரிகமாக நடந்து கொண்டு பழனி திருக்கோயில் ஊழியர்கள் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த பத்திரிகையாளர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பழனி திருக்கோயில் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்திட வேண்டும்மென
உரிய நடவடிக்கை எடுக்க கோரி

பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடுமையான தாக்குதலில் காயம் அடைந்த இரண்டு பத்திரிக்கையாளர்கள்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக
சம்பவ இடத்தில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் கூறியபோது .

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கனக சபை என்பவர் 60 சென்ட்  நிலத்தை சுமார் 50 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தி வருகிறார். இந்த இடம் இந்து சமய அற நிலைய துறைக்கு சொந்தமானது என கூறி நீதிமன்ற உத்தரவின் பெயரில் அந்த இடத்தை காலி செய்யுமாறு பழனி இந்து சமய அறநிலையத்துறை மூலம் நோட்டீஸ்  அனுப்பப்பட்டது.


இதனை அறிந்த கனகசபாபதி  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில்
1960 ஆம் ஆண்டு முறைப்படி பத்திர பதிவு செய்து இந்த இடத்தை  வாங்கி குடியிருக்கிறோம் .இடத்தை அகற்ற

1960 ஆம் ஆண்டு முறைப்படி பத்திர பதிவு செய்து இந்த இடத்தை வாங்கியுள்ளோம்.அது மட்டுமில்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு . நீதிமன்றத்தில் நிலுவையில்  இருக்கும்போது  எப்படி அகற்றுவீர்கள் என
பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி இடம் அங்கிருந்தவர்கள் கேட்டதற்கு
கோர்ட் உத்தரவு நகலை அங்கு கூடியிருந்த நபர்களிடம் மூஞ்சில் தூக்கி எறிந்ததால்  இருவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் பொழுது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை பழனி கோவிலில் பணிபுரியக்கூடிய காவலாளிகளை வைத்து அடிக்க முயற்சித்த போது பழனி அறங்காவல் குழு உதவி ஆணையர் லட்சுமி பத்திரிகையாளர் பார்த்து நீ எவனாக இருந்தாலும் கழுத்தறுத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விட்டதால் பத்திரிகையாளர்களுக்கும்  பழனி கோவில் ஊழியர்களுக்கும்  இடையே   வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளாக மாறி அதன் பின்பு தாக்குதலில் ஈடுபட்டதால் படுகாயம் அடைந்த பத்திரிக்கையாளர்கள் இரண்டு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சாலை மறியலில் பத்திரிகையாளர்கள் ஈடுபட்டனர் .

மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் திண்டுக்கல் பழனி சாலையில் பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் பத்திரிக்கையாளரை சமாதானப்படுத்தியதால் சாலை மறியல் போராட்டமானது கைவிடப்பட்டது.

மேலும் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசி ஆணவத்தின் உச்சத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் பழனி உதவி ஆணையர் மற்றும் பழனி கோவில் தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து  துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

அது என்னவென்றால்  பழனி திருக்கோவிலுக்கு சொந்தமான ரெட்டியார் சத்திரம் அருகில் உள்ள 60 சென்ட் இடம் கனகசபாபதி என்பவர் ஆக்கிரமித்து கடந்த 30 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார். ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு திண்டுக்கல் இணை ஆணையர் நீதிமன்றம் சென்னை ஆணையர் நீதிமன்றம் மதுரை உயர்நீதிமன்றம் ஆகிய மூன்று உத்தரவுகள் இருந்தும் இன்று ஆக்கிரமிப்பு அகற்ற சென்றபோது கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கனக சபாபதி தன்னுடன் 200 நபர்களை அழைத்து வந்து ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்து நிறுத்தி

திருக்கோயில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலர்களுக்கு காயங்களை படுத்தியதாகவும் அவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பழனி திருக்கோயில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என பழனி கோவில் இணை ஆணையார் தெரிவிதுள்ளார்.

எது எப்படியோ  கோவில் நிர்வாக ஊழியர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே  நடந்த மோதலில் பத்திரிக்கையாளர்கள் மீது பழனி கோவில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆகவே என்ன நடந்தது என நேர்மையான  அதிகாரிகளை வைத்து நேர்மையான முறையில் விசாரணை செய்து யார் மீது தவறு இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் நடவடிக்கையை…

Back to top button