தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே திறந்தவெளி மது அருந்தும் பார்! கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் காவல்துறை!! நடவடிக்கை எடுப்பாரா தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் பிற ஊருக்கு ரயிலில் செல்லும் பயணிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றன.
இதில் முக்கியமாக திருச்சியில்உள்ள அரசு அலுவலகங்களில் பணி செய்யும் பெண்கள் ஆண்கள் மற்றும் திருச்சியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மாணவிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிசெய்யும் இளைஞர்கள் பெண்கள் சொந்தமாக திருச்சியில் தொழில் செய்பவர்கள் அனைவரும் தஞ்சாவூரிலிருந்து ரயில்கள் மூலம் தான் பயணம் செய்வது வழக்கம். என் அன்பார்ந்த ரயிலில் பயணம் செய்வதால் நேரம் குறைவாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதில் முக்கியமாக பெண்கள் அதிகமாக பயணிப்பதாகவும் கூறுகின்றனர். அதேபோல் மது பிரியர்களும் அதிகமாக தஞ்சாவூரில் இருந்து பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். அப்படி மது பிரியர்கள் ரயிலில் பயணிக்கும் முன்பு தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு
ரயில்வே நிலையம் செல்லும் வழியில் சாலை ஓரங்களில் அமர்ந்தும் நின்று கொண்டும் மதுபானங்களை குடித்து விட்டு அந்த பாட்டில்கள் மற்றும் தின்பண்டம் மற்றும் இறைச்சிகளை ஆங்காங்கே சாலைகளில் போட்டுவிட்டு செல்வதால் சாலை முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசும் அவல நிலை தொடர்ந்து இருக்கிறது.
இப்படி சாலை ஓரங்களில் மது பிரியர்கள் மதுபானம் குடித்துக் கொண்டு திறந்தவெளி மதுபான கூடமாக இருப்பதால்
ரயில் நிலையத்துக்கு வரும் பெண்கள் மிகவும் அச்சத்துடன் வருவதாகவும் அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மிகவும் மோசமான நிலையில் சாலை ஓரங்களில் நின்று கொண்டிருப்பவர்களை கடந்து செல்லும்போது தங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற பயத்துடன் கடந்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வந்துள்ளது .இது சம்பந்தமாக தஞ்சாவூர் ரயில் நிலையங்களில் சென்று ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் கேட்டபோது சாலைகளில் அமர்ந்து வரும் மது அருந்துவது பல நாட்களாக இருக்கிறது என்றும் எந்த காவல்துறையும் இதை கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் எது எப்படியோ பொதுமக்கள் வந்து செல்லும் ரயில் நிலைய அருகே திறந்தவெளி மது கூடமாக செயல்பட்டு இருக்கும் அந்த அவல நிலையை பொதுமக்கள் நலன் கருதி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலரின் கோரிக்கையாகும்!
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.