Uncategorizedகாவல் செய்திகள்

தரகு கமிஷன் தர மறுத்து மிரட்டும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்க கூட்டம் கோரிக்கை!

மறுக்கும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்க கூட்டம்  கோரிக்கை!கோவை புலியங்குளம் சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில், நில  வணிக தொழில் முனைவோர் நலச்சங்கத்தின்  செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது  

  இக்கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.வெங்கிடுசாமி தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் ஜி.வி.நித்தியானந்தம் முன்னிலையும் வகித்தனர், இதில் சிறப்பாளராக மாநில தலைவரும் நிறுவனரான மருரா.கருணாகரன், முன்னாள் எம்எல்ஏ வும் சங்க கெளரவத்தலைவரான வி.எஸ்.காளிமுத்து,சங்க ஆலோசனை கமிட்டி தலைவர் டாக்டர் பழனியப்பன் பாண்டியன்,கலந்து கொண்டு பல ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர், இந்த மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன, அதில் இதுவரை நில வணிக தரகு தொழில் செய்யும் இடை தரகர்களுக்கு  தொழிலுக்கான எந்த விதமான ஒரு உத்திரவாதம் இல்லாமலும், தொழிற்கான  வியாபாரம் முடிந்ததும் முறையாக பார்த்து கொடுக்கும் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனர் , சில இடத்தில் அதுவும் கிடைக்காமல் தங்களுடைய உழைப்பிற்கு எந்த விதமான அங்கீகாரம் இல்லாமல் தரகு தொழிலை செய்து வரும் இடை  தரகர்களுக்கு  தொழிலுக்கான  அங்கீகார அடையாள அட்டையை அரசு வழங்க வேண்டும்.. என்று இந்த சங்க கூட்டம் மூலம்  கேட்டுக்கொள்கிறோம் என்றனர் 

    இதுவரை ஒரு கோடி ரூபாய் வரையில் இரண்டு சதவீதமாக இருந்த கமிஷனை இனி வரக்கூடிய காலங்களில் மூன்று சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்  ஒரு கோடிக்கு மேல் இரண்டு சதவீத வரைமுறைப்படுத்தி தரவேண்டும் என்று இந்த ஆளும் அரசை , சங்கம் வலியுறுத்துகிறது என தீர்மானம் நிறைவேற்றினர்  இந்த தொழிலுக்கு என்று தனி வாரியத்தை அமைத்திட அரசை வலியுறுத்தியும்  

 அதே போல பத்திர துறைக்கு எப்படி லைசன்ஸ் வழங்கப்பட்ட முகவர்கள் உள்ளனரோ  அதே போன்று பத்திரம் பதியும் பொழுது டாக்குமெண்ட் ரைட்டர் கையெழுத்தும் சீழும் கட்டாயமாக்கப்பட்டது போல் 

 இடைத்தரர்கள் விட்னஸ் ஆக கையெழுத்திடும் நபர் யாரோ அவர்களுடைய கையெழுத்தும் சீலும் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம் என்ற தீர்மானத்தையும் தமிழக அரசுக்கு  கோரிக்கைகளாக  இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் நிறைவேற்றினர்  மேலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்த தொழில் செய்பவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நலன் சார்ந்த விஷயங்களுக்கு சங்கம் உதவுவதாக முடிவு செய்யப்பட்டது என்றார்கள், கூட்டத்தில் சங்க மாநில செயலாளர் ஐ.வேலுச்சாமி , சட்ட ஆலோசகர் கமிட்டி தலைவர் கே.தென்னரசு, மாவட்ட சட்ட ஆலோசகர் சி.முத்து சாமி,மாநில துணை செயலாளர் கே.எஸ்.வெங்கடேஷ், கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள், கூட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,நிகழ்ச்சி நிறைவாக அனைவருக்கும் நினைவு பரிசும், அறுசுவை உணவும் வழங்கி கவுரவித்தனர்

Related Articles

Back to top button