Uncategorizedகாவல் செய்திகள்

தான் செய்த தவறை மறைப்பதற்கு ஆதாரமில்லாமல் பொய்யான புகார் கொடுத்துள்ளதாக வாடிப்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மீது சமூக ஆர்வலர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்!

மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநில பொருளாளர் வாடிப்பட்டியைச் சேர்ந்த பா மகராஜன் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.அந்த புகாரில் மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி பேரூராட்சி 13 மற்றும் 14வது வார்டுக்கு உட்பட்ட போடி நாயக்கன் பட்டி பகுதியில் போடிநாயக்கன் பட்டி பிரிவு மெயின் ரோட்டில் இருந்து மூலக்களம் வரை சுமார் 4 கிலோ மீட்டர்க்கு புதிதாக தார் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுநல்லான் ஊரணி முதல் மூலக்களம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே

புதிதாக போடப்பட்ட தார் சாலை மிக மோசமான தரமற்ற நிலையில் போடப்பட்டுள்ளதாக

வாடிப்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் இடம் மக்கள் சட்ட இயக்கம் மாநில பொருளாளர் மகாராஜன் தொலைபேசியில் கேட்டதாகவும் ஆனால் பேசிய உண்மையை மறைத்து புதிதாக போடப்பட்ட தார் சாலையை சேதப்படுத்தியதாகவும் அதுமட்டுமில்லாமல் தொலைபேசியில் மிரட்டியதாகவும் 08/01/2025 அன்று வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கௌதம்

வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.

அந்தப் புகார் மனுவின் மீது வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் நேரில் விசாரணைக்கு அழைத்துள்ளார்.

08/01/2025 அன்று மதியம் 2 மணிக்கு வாடிப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் வளர்மதி முன்பு நேரில் விசாரணைக்கு ஆஜரானதாகவும். வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வளர்மதி விசாரணை நடத்தியதாகவும் வாடிப்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் கொடுத்த புகார் உண்மைக்கு புறம்பானது என்று அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அந்த ஆதாரத்தை வைத்து நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை நான் சேதப்படுத்தவில்லை என்றும்

வாடிப்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்பந்தமாக தான் பேசினேன் என்றும். அப்போது பேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் ஏற்படுவதற்கு காரணம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு 10 பேர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர் என்று கூறினார். அதன் பின்னர் புதிதாக போடப்பட்ட தார் சாலை மிகவும் மோசமாக தரமற்றதாக போட்டுள்ளதாக என்று மட்டுமே கூறியதாகவும் அதற்காக RTI போடுகிறேன் அதில் புதிதாக போடப்பட்ட சாலையின் விவரத்தை தெரியப்படுத்தவும் என்று பேசிய போது அதற்கு உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கௌதம் கேட்டதாகவும் அதற்கு எனக்கு எதுவும் வேணாம் ஆர்டிஐ யில் பதில் கொடுத்தால் போதும் ஆகிரமிப்புகளை அகற்றினால் போதும் சாலைகளை தரமாக போட்டால் போதும் என்று மட்டுமே வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கௌதம் உடன் பேசினேன்.

அந்த ஆடியோ பதிவின் ஆதாரத்தை ஆதாரமாக வைத்து வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கௌதமன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வளர்மதி இடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வளர்மதி உறுதியளித்துள்ளார் என மக்கள் சட்ட இயக்கம் மாநில பொருளாளர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button