திருமணம் செய்வதாக கர்ப்பிணி ஆக்கிவிட்டு ஏமாற்றிய சோழவந்தானைச் சேர்ந்த பலே கில்லாடி இளைஞர் அதிரடி கைது !

கணவரை இழந்த சோழவந்தான் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு வைத்து ஒரு பெண் குழந்தை மற்றும் இரண்டு முறை கருவை கலைத்து மூன்றாவது முறை கருவை கலைக்க சொல்லி மது அருந்தி விட்டு போதையில் கொலை மிரட்டல் விட்ட பலே கில்லாடி இளைஞர் கைது!

சமய நல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அதிரடி உத்தரவிட்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த சரண்யா (வயது 30) இவருக்கு தந்தை இல்லை தாய் மட்டும் இருந்துள்ளார் . சரவணன் என்பவரை திருமணம் செய்துள்ளார். சரவணனுக்கும் சரண்யாவுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்பு சரண்யாவின் கணவர் குடிப்பழக்கத்தின் காரணமாக இறந்துபோனார். அதன் பின்பு தன் தாயுடன் இருந்து வந்துள்ளார்.
குழந்தையை சரண்யாவின் கணவரின் பெற்றோர்கள் வளர்த்து வருகின்றனர்.
கணவரை இழந்த சரண்யா தாயுடன் வாழ்ந்து வந்த நிலையில் பள்ளியில் படித்த நண்பரான சோழவந்தான் பூ மேடு தெருவை சேர்ந்த
சரவணக்குமார் தந்தை பெயர் (லச்மணன். )என்பவர் பள்ளியிலேயே தான் சரண்யாவைக் காதலித்ததாகச் சொல்லி சரண்யாவிடம் நெருங்கி பழகியுள்ளார்.
அதை நம்பி வாழ சம்மதித்துள்ளார் அதன்படி சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக் கொடுத்து சரண்யாவுடன் சேர்ந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
அதன் பின்னர் இரண்டு முறை சரவணக்குமார் கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளார்.
தற்போது சரண்யா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்
இந்த நிலையில் சரவணக்குமார் தினம்தோறும் மது அருந்திவிட்டு சரண்யாவிடம் தகராறு செய்வதுடன் உன்னுடன் வாழ முடியாது எனக் கூறி வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் உடைத்து சென்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் எனக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பெண் பார்த்து வருவதாகவும் அப்படி நான் திருமணம் செய்யப் போகும் பெண் வீட்டார் 100 பவுன் நகை போட வேண்டும் என என்னுடைய பெற்றோர்கள் பெண் பார்த்து வருவதாகவும் பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து மனைவியாக வைத்துக்கொண்டு சரண்யாவை திருமணம் செய்யாமல் உறவு மட்டும் வைத்துக் கொள்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.இதனை சரண்யா ஏற்றுக்கொள்ளவில்லை. சரண்யா தற்போது கர்ப்பமாக உள்ளதால் உறவினர்கள் யாரும் ஆதரவு தர முன்வரவில்லை. சரண்யா விதவையாகிய பின்னர் மற்றொருவரோடு வாழ்ந்தது வந்ததை உறவினர்கள் மத்தியில் இழிவாக பார்க்கப்பட்ட நிலையில் சரண்யா சரவணகுமார் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் திருமணம் செய்து கொள்ள போராடி வந்த நிலையில் சரவணகுமார் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சரண்யாவை மிரட்டி வந்துள்ளனர் . அது மட்டும் இல்லாமல் சரண்யாவுடன் சேர்ந்து வாழ்ந்த போது சரண்யா வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளை சரவணகுமார் வாங்கிக் கொண்டு அதை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாகவும் கையில் ஒரு குழந்தை வயிற்றில் ஒரு குழந்தையுடன் வேறு வழியில்லாமல்

சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் 13 / 02 / 24ல் புகார் அளித்துள்ளார் ஆனால் அந்தப் புகாரின் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணக்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததால். , சரவணகுமார் மது அருந்திவிட்டு சரண்யாவை மிரட்டி வந்ததாகவும்.

18/03/24 அன்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பின்பு அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் நிர்வாகிகளிடம் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையைச் சொன்னார். அதில் மூன்று மாதம் வயிற்றில் கருவைச் சுமப்பதாகவும், அந்தக்கருவைக் கலைக்க சொல்லி சரவணக்குமார் மிரட்டி வருவதாகவும் தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறியுள்ளார். சரண்யாவின் பிரச்சனைக்கு தீர்வு காண அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஈஸ்வரி, பகவதியின் துணையோடு 23 /03/ 24 அன்று மீண்டும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது .
அந்த மனுவில் “வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தந்தையான சரவணகுமாரை உடனடியாகக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எனது எதிர்கால வாழ்க்கையைக் காப்பாற்றும் படியும் சரவணக்குமார் செல்வாக்குள்ளவர் என்ற நிலையில், நான் ஏழையாகவும் எளிய சாதியைச் சேர்ந்தவளாகவும் இருக்கும் சூழலில், எனக்கான நீதியைப் பெற எனக்கு உதவியைச் செய்யும்படி ” மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் 24/03/24 அன்று காலையில் சரவணக்குமாரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
சரண்யாவுக்குத் துணையாக அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் தோழர்கள் ஈஸ்வரி, முத்துராக்கு, மங்கையர்க்கரசி இருந்தனர். விசாரணையின் இறுதியில்

IPC 417, 376, 406, பெண்கள் மீதான வன்முறை தடுப்புச் சட்டப் பிரிவு 4 ஆகியவற்றின்படி சரவணக்குமார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கணவரை இழந்து வாழ்ந்த பெண்ணின் வயிற்றில் குழந்தையுடன் இருந்த நிலையை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் மாவட்ட அமைப்பாளரான தோழர் வள்ளிமயில் பாராட்டி நன்றி தெரிவித்தார்.