தொடர் கொலைகளால் கொலை நகரமாக மாறுகிறதா திண்டுக்கல் மாநகரம்! ?திண்டுக்கல் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் கஞ்சா போதை ரவுடிகள்!

கடந்த 15 நாட்களில் 3 என்கவுன்டர் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டார்.

மேலும், கேரளாவில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்து விட்டு, கண்டெய்னர் லாரியில் வந்த வடமாநில கும்பலைச் சேர்ந்த கொள்ளையனை நாமக்கல் போலீசார் என்கவுன்டர் செய்தனர்.
இதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ளது. திண்டுக்கல் பெரிய கோட்டை காப்பிளியப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ரவுடி ஹேம தயாள வர்மன் (32) திண்டுக்கல்: செட்டிக்குளக்கரையில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். முன்விரோதம் காரணமாக ரவுடி ஹேம தயாள வர்மன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முன்விரோதம் காரணமாக காப்பிளியப்பட்டி டாஸ்மாக் மதுக்கடை பின்பகுதி குளத்தின் கரைப் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வடமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் DSP. இலக்கியா மேற்பார்வையில் வடமதுரை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக வினோத் மற்றும் கவியரசு ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருவரிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்ய சென்றபோது காவலர்களை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற போது, குற்றவாளிகளான இருவரில் ஒருவருக்கு கை மற்றொருவருக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் வெட்டி கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் மாசி பெரியண்ணா கடந்த மாதம் 28ஆம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே முகமது இர்பான் என்பவரை கொடூரமாக, பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தவழக்கில் கைதான ரவுடி ரிச்சர்ட் சச்சினை திண்டுக்கல் மாலைப் பட்டி சுடுகாடு பகுதியில் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் தப்பிக்க முயன்றதாகவும் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் ரவுடி ரிச்சர்ட்சச்சினின் வலது காலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அந்த சூட்டில் ரவுடி ரிச்சர்ட் சச்சின் காலில் குண்டு பாய்ந்ததாகவும் காவல்துறை தகவல் வெளியாகியுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அவரை அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது, காயமடைந்த ரவுடி சச்சின் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல, ரவுடி தாக்கியதில் காயமடைந்த காவலர் அருணும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை எடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசு மருத்துமனை சிகிச்சை பெற்று வரும் காவலரை நேரில் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது! கடந்த ஜூலை மாதம் திருச்சியில் ரவுடி கலைப்புலி ராஜாவையும் செப்டம்பர் மாதம் ரவுடி ஜம்பு கேஸ்வரனையும் துப்பாக்கியால் சுட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது!