காவல் செய்திகள்

நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் வழக்கு பதிவு செய்ய 50,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் லதா மீது குற்றச்சாட்டு!?
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?

திருச்சி மண்டல ஐஜி மற்றும் திருச்சி மண்டல டிஐஜி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின்படி

திருச்சி மண்டல ஐஜி
சந்தோஷ் குமார் ஐபிஎஸ்


கணவன் மனைவியிடையே பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக புகார் அளிக்கப்பட்டு அவர்கள் இருவரையும் அழைத்து விசாரணை செய்து கவுன்சிலிங் வழங்கப்படும். இதுபோன்று கவுன்சிலிங் வழங்கப்பட்டு மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு சென்று எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாக வாழக்கூடிய தம்பதியினரை அழைத்து குடும்ப விழா நடத்தப்படும் .

கீரனூர் உட்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லதா மற்றும் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன்.


இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம்
கீரனூர் உட்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீரனூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன்.கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  லதா குழுவினர்களுடன் பெண்களின் பாதுகாப்பிற்கும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் 16/11/2021 அன்று  விழிப்புணர்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.)


ஆனால் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் லஞ்சம் கொடி கட்டு பறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புகார் கொடுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை என்ற பெயரில்  பணம் கேட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் லதா மீது குற்றச்சாற்று எழுந்துள்ளது!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?

முதல் மனைவிக்கு தெரியாமல் சட்ட விரோதமாக இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட பாலசுப்பிரமணியம் மீது நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும் பணம் கொடுத்தால் வழக்கு பதிவு செய்வேன் என்று அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் கீரனூர் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லதா மீது குற்றச்சாட்டு!
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா !?.


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா வீரப்பட்டி கிராமத்தில் வசித்து வரும்   பாலசுப்பிரமணி (தகப்பனார் பெயர் ராசு )என்பவருக்கும்  காந்திநகர் கூடலூர் கிராமம் பொன்னமராவதி தாலுகா புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த  கௌசல்யா( தகப்பனார் பெயர் ஆறுமுகம்)   என்பவருக்கும்  08/02 /2019 அன்று திருமண நிச்சயம் செய்யப்பட்டு 10/02/2019 அன்று திருமணம் நடந்துள்ளது .

முதல் மனைவியை திருமணம் செய்தபோது

திருமணமான 40 நாட்களில் மனைவி கௌசல்யாவை தன் பெற்றோர்களிடம்  விட்டு பாலசுப்ரமணியம் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
வெளிநாட்டுக்கு சென்று ஒரு வருடம் கழித்து ஊருக்கு திரும்பிய பாலசுப்பிரமணியத்திடம் மனைவி கவுசல்யா  ஒரு வருடமாக வீட்டில் அனைவரும் தன்னை துன்புறுத்தியதாக தனக்கு நேர்ந்த கொடுமைகளை கணவரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்ட பாலசுப்பிரமணியம் கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தினமும் மது அருந்தி விட்டு தான் வீட்டுக்கு வருவாராம்.இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது . மது அருந்திவிட்டு வரும் கணவரை தட்டிக் கேட்கவில்லை என்றும் அவருடைய அப்பா அம்மா சொல்லும் பேச்சு மட்டும் கேட்டு நான் சொல்வதை எதுவும் கணவர் கேட்பதில்லை என்றும் மறுபடியும் 40 நாட்களில் மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார் . திருமணம் ஆகி ஒரு வருடத்தில் 80 நாட்கள் மட்டுமே வீட்டிலிருந்து உள்ளார் என்றும் கணவர் வெளிநாட்டுக்கு சென்றதிலிருந்து மாமனார் மாமியார் தன்னை துன்புறுத்தியதாக 08/10/2020 அன்று தற்கொலை வரை சென்றதாகவும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை 15 நாள் சிகிச்சை அனுமதிக்கப்பட்டேன் என்றும்  அதன் பின்பு என்னுடைய பெற்றோர்கள் வீட்டில் இருந்தேன் என்றும் 2021 ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிநாட்டிலிருந்து கணவர் வந்ததும் என்னை பார்க்க கூட வரவில்லை என்றும் கௌசல்யா பெற்றோர்கள் பாலசுப்பிரமணியம் பெற்றோர்களிடம் சமாதானம் பேசிய பின்பு கணவர் பாலசுப்பிரமணி கௌசல்யா உடன் வாழ விரும்ப மறுத்துவிட்டார் என்றும் அதன் பின்பு வீரப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரியின் கணவர் தங்கராஜ் முன்னிலையில் 13/09/2021 அன்று என்னை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து எழுதாத 100 ரூபாய் ஸ்டாம்  பத்திரத்தில் கௌசல்யா மற்றும் அவரது தாய் தந்தையிடம் மிரட்டி கையெழுத்து பெற்றதாகவும் குற்றச்சாட்டை வைக்கிறார் பாதிக்கப்பட்ட பெண் கௌசல்யா.

அதன்பின்பு இலுப்பூர் தாலுகா கவிநாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா தகப்பனார் பெயர் சிவசாமி என்ற பெண்ணை  10/06/2022 அன்று அதிக வரதச்சனை பெற்று சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்துள்ளார் .

இரண்டாவது மனைவியை திருமணம் செய்தபோது

நான் உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தது சட்டப்படி தவறு என்றும் கணவர் பாலசுப்பிரமணியம் மற்றும் இரண்டாவது திருமணம் செய்து வைத்த பாலசுப்பிரமணியத்தின் அவரது தந்தை ,தாய் ,சகோதரிகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்த தங்கராஜ் மற்றும் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் என் கணவருடன் என்னை சேர்த்து வைக்குமாறு

கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்

18/07/2022 அன்று பாதிக்கப்பட்ட பெண் கௌசல்யா கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் லதா அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். உடனே கணவர் வீட்டு பெற்றோர்களை அழைத்து பேசியுள்ளார் அதன் பின்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களை அழைத்து பேசி இந்த பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட பெண் கௌசல்யாவின் கணவர் பாலசுப்ரமணியத்திடம் 30 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு புகார் கொடுத்த கௌசல்யாவின் உங்கள் பிள்ளை தான் தவறு செய்து உள்ளதாகவும் என்ன வளர்த்துள்ளீர்கள் என்று விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்வதை போல் மிரட்டும் வகையில் பேசி பாதிக்கப்பட்ட பெண் கௌசல்யா அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் இல்லை என்றும் இது உங்கள் குடும்ப பிரச்சினை ஆகையால் நீங்கள் நீதிமன்றம் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.

அதன் பின்பு பாதிக்கப்பட்ட பெண் கௌசல்யா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும் புகார் அதன் பின்பு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் பின்பு பாதிக்கப்பட்ட பெண் கௌசல்யா வழக்கறிஞரை வைத்து கீரனூர் உரிமையியல் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்துள்ளார். வழக்கை விசாரித்த கீரனூர் உரிமையியல் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.

கீரனூர் உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு!

ஆனால் நீதிமன்றம் உத்தரவு படி வழக்கு பதிவு செய்யாத கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே கணவர் மற்றும் அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்வேன் என்று கணவரால் பாதிக்கப்பட்ட பெண் கௌசல்யாவை தினந்தோறும் அழைக்களிப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இது சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவரால் கைவிடப்பட்டு பாதிக்கப்பட்ட பெண் கௌசல்யா
உயிருடன் இருக்கும் போது சட்ட விரோதமாக இரண்டாவது செய்துள்ள கணவர் பாலசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கீரனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்ய 50,000 ரூபாய் பணம் கேட்கிறார் என்றும் என் கணவர் மீதும் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தால் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எது எப்படியோ ஒரு பெண் தன் கணவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவல் ஆய்வாளர்கள் உடனே மனைவியை துன்புறுத்தும் நபரை அழைத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதே இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆகவே தான் பெரும்பாலான கணவர் மனைவி பிரச்சனையில் நீதிமன்றம் வரை செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல்தான் பாதிக்கப்பட்ட கௌசல்யா என்ற பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றம் மூலம் உத்தரவு வந்து நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் புகார் கொடுத்த பெண்ணின் கணவர் வீட்டாரிடம் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று மனைவி உயிருடன் இருக்கும்போது சட்ட விரோதமாக இரண்டாவது திருமணம் செய்தவரை சட்டப்படி விசாரணை செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தயங்கும் புதுக்கோட்டைமாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா அவர்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் அவர் குடும்பத்தினர் கட்டப் பஞ்சாயத்து செய்தவர்கள் உட்பட அனைவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் பாதிக்கப்பட்ட பெண் கௌசல்யா சொன்னது போல் கணவர் பாலசுப்பிரமணியம் வீட்டாரிடம் 50,000 ரூபாய் பணம் கையூட்டு பெற்றிருப்பாரோ என்ற சந்தேகமும் இருந்து வருகிறது.

வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்கராசு

(வீரப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஈஸ்வரியின் கணவர்
தங்கராசு மீது ஏற்கனவே இரண்டு (PCR FIR No.33/2019, FIR No.258/2022 ) வழக்குகள் இலுப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது‌ மேலும் இவர் மேகநாதன் மற்றும் மனோகரன் ஆகிய இரு குடும்பங்களை சேர்ந்தவர்களை கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த குற்றத்திற்கு எதிராகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்ய இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.)

கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கௌசல்யா கொடுத்த புகாரை வாபஸ் பெற சொல்லி கௌசல்யா பனையபட்டியில் வேலை செய்யும் இடத்திற்கே சென்று தங்கராசு சிவந்தி பாண்டியன் நாகராஜ் ஆகியோர் மிரட்டல் விடுத்ததால் பனையபட்டி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து மனு எண்.296/2022 வழங்கப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு

திருமணம் செய்து 3 வருடத்திற்குள் முதல் மனைவியை கைவிட்டு இரண்டாவது திருமணம் செய்த நபர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யாத புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லதா மீது புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மத்திய திருச்சி மண்டல காவல் தலைவர் அவர்கள் உரிய விசாரணை நடத்தி கீரனூர் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்கு லஞ்சம் வாங்கியது தெரிய வந்தால் ஆய்வாளர் லதா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து இரண்டாவது திருமணம் செய்துள்ள கௌசல்யாவின் கணவர் பாலசுப்ரமணியம் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து எழுதாத ஸ்டாம் பேப்பரில் கையெழுத்து வாங்கிய வீரபட்டியைச் சேர்ந்த 4 பேர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button